முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Apr 01, 2026 08:16 AM GMT
Report

தமிழ் மாதத்தில் 12 வது மாதமாக வரக்கூடிய பங்குனி மாதத்தில் பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணைந்து வரக்கூடிய தினத்தை பங்குனி உத்திரம் என்று மிகச் சிறப்பாக வழிபாடு செய்து கொண்டாடி வருகின்றோம்.

அதாவது இந்த நாளில் தான் முருகப்பெருமானுக்கு திருமணம் நடைபெற்றதாக ஐதீகம். இந்த நாளில் பலரும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து காவடி எடுத்து சிறப்பு வழிபாடு செய்வார்கள். அப்படியாக, முருகப்பெருமானுக்கு ஜோதிட ரீதியாக மிகவும் பிடித்த 3 ராசிகள் உள்ளது.

இவர்கள் இயல்பாகவே முருகப்பெருமானுடைய அருளும் அரவணைப்பும் எப்பொழுதும் இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள் யார் தெரியுமா? | 3 Favourite Zodiac Sign Of Lord Murugan

மீன ராசியில் நுழையும் புதன்.. கவனமாக இருக்க வேண்டிய 3 முக்கிய ராசிகள்.

மீன ராசியில் நுழையும் புதன்.. கவனமாக இருக்க வேண்டிய 3 முக்கிய ராசிகள்.

 

மேஷம்:

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். மேலும், முருகப்பெருமான் தான் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருக்கிறார். அதனால் இவர்களுக்கு முருகப்பெருமானை போல் பிறவியிலே பெரிய அளவில் துணிச்சலும் தைரியமாக எதையும் முடிவெடுக்கக்கூடிய தன்மையும் பெற்றிருப்பார்கள்.

ஆதலால் இவர்களுக்கு முருகப்பெருமானுடைய அருள் எப்பொழுதும் இருக்கும் இவர்கள் பங்குனி உத்திர நாளில் செவ்வரளி பூக்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து "ஓம் சரவணபவ" என்னும் மந்திரத்தை உச்சரித்தால் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் யாவும் விலகும்.

மிதுனம்:

மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவான் தான் ஒரு மனிதனுக்கு அறிவு, கல்வி ஆகியவற்றை வழங்க கூடியவராக இருக்கிறார். மேலும் முருக பெருமான் அவருடைய தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த ஞான குரு என்பதால் முருகனை தகப்பன் சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே ஒருவருக்கு ஒரு விஷயத்தை கற்றுக் கொடுக்கும் திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் பங்குனி உத்திர நாளில் முகப்பெருமானுக்கு தேன் மற்றும் திணை மாவு கலந்து படைத்து வழிபாடு செய்தால் மிகச் சிறந்த நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசீர்வாதம் பெற வாங்க வேண்டிய 7 ரகசிய பொருட்கள்

அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசீர்வாதம் பெற வாங்க வேண்டிய 7 ரகசிய பொருட்கள்

தனுசு:

தனுசு ராசி அதிபதி குருபகவான் ஆவார். தனுசு ராசியினருக்கு பிறவியிலே ஆன்மீகத் தேடல் அதிகம் இருக்கும். மேலும், தனுசு ராசியினரிடம் முருகனின் சேனாதிபதி பண்பு மேலோங்கி இருக்கும். இவர்கள் நீதி தவறாமல் செயல்படக்கூடியவர்கள்.

இவர்கள் பங்குனி உத்திர நாளில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை மனதார நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் இவர்கள் நினைத்த காரியம் கைகூடிவரும். சமுதாயத்தில் இவர்களின் மதிப்பும் அந்தஸ்து பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு முருகப்பெருமானுடைய அருள் எப்போதும் இருக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US