இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று இந்த 3 தவறுகளை செய்து விடாதீர்கள்
பொதுவாகவே எந்த ஒரு வீட்டில் தொடர்ந்து முறையாக தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்கள் வீட்டில் நிச்சயம் எதிர்மறை ஆற்றல் என்பது நுழைவதற்கான வாய்ப்புகளே இல்லை. அது மட்டும் அல்லாமல் நாம் வீடுகளில் தவறாமல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து நம்முடைய பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்திருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய ஒரு திருநாளாகும். சிவபெருமானை வேண்டி தவமிருந்த பார்வதி தேவி, ஈசன் உடலில் பாதியாக இடம் பிடித்த தினம் தான் இந்த திருக்கார்த்திகை தீபத்திருநாளாகும். அதனால் இந்த நாளில் விளக்கேற்றி வழிபாடு செய்து நாம் சிவபெருமான் பார்வதி தேவி அருளை பெறுவதற்கான ஒரு அற்புதமான நாளாக இருக்கிறது.
மேலும் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று இறைவன் ஒளி வடிவமாக வழிபாடு செய்யக்கூடிய திருநாளாகும்.

இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபாடு செய்ய நமக்கு நிறைய நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் இந்த திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு நாம் முக்கியமாக 3 தவறுகளை செய்யக்கூடாது என்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்.
1. திருக்கார்த்திகை திருநாளன்று நாம் கட்டாயமாக மாலை நேரத்தில் வீடுகளில் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றிய பிறகு வீட்டில் நிச்சயம் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். சிலர் ஆன்மீகப் பயணம் அல்லது வெளியூரில் இருக்க நேர்ந்தால் அவர்களுடைய உறவினர்களிடம் தெரிவித்து அவர்கள் வீட்டில் அன்றைய தினம் ஒரு விளக்கு ஏற்றுவது அவசியம். வீடு முழுவதும் விளக்கு ஏற்ற முடியாவிட்டாலும் அவர்களுடைய வாசலில் மட்டும் ஆவது இரண்டு அகல் விளக்குகள் ஏற்றுவது மிக மிக அவசியமாகும்.
2. இந்த திருக்கார்த்திகை தீப திருநாளன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது ஒரு மிகச்சிறந்த பலனை கொடுக்கும் என்றாலும் விரதம் இருக்க முடியாதவர்கள் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அன்றைய தினம் மறந்தும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

3. திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று முடிந்த அளவிற்கு யாரிடமும் கடன் வாங்குதல் கூடாது. அதாவது மளிகைக் கடை அல்லது வேற எந்த பொருட்களை வாங்கினாலும் இந்த நாட்களில் மட்டும் ஆவது நாம் முடிந்த அளவிற்கு பணம் கொடுத்து வாங்கினால் நன்மை உண்டாகும்.
ஆனால் இந்த நிகழ்வானது நிச்சயம் ஒரு அவசரமான நிலைக்கு பொருந்தாது. மேலும் இந்த தீபத்திருநாளில் எவரேனும் ஒரு எதிர்பாராத சங்கடங்களில் மாட்டிக் கொண்டார்கள் அவர்களுக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது நம்மிடம் வந்து அவர்கள் கடனாக கேட்கிறார்கள் என்றால் நிச்சயம் நாம் இந்த ஒரு காரணத்தை கொண்டு அவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது கூடாது.
அவர்களுக்கு இந்த நேரத்தில் இக்கட்டான நிலையில் உதவி செய்வது என்பது நமக்கு நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் ஒரு நல்ல ஆசீர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |