பிறர் மனதில் இருப்பதை அப்படியே சொல்லக்கூடிய ஆற்றல் கொண்ட 3 ராசிகள்
மனிதர்கள் பல வகையில் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு என்னதான் சுற்றி உள்ளவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு சிலருக்கு ஒருவர் தன் அவர்களுடைய நெருங்கிய உறவுகளாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய சொல்லாமலே அவர்கள் மனதில் உள்ளதை அந்த மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
அதாவது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களால் புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் அவர்களை வழிநடத்துவதில் சிலர் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதற்கு அவர்களுடைய ராசி அமைப்பும் ஒரு காரணம்.
அப்படியாக எந்த ராசியினருக்கு பிறர் மனதில் இருக்கக்கூடிய அதை அறிந்து கொள்ளக்கூடிய தன்மை கொண்டு இருப்பார்கள். எந்த ராசிகளுக்கு உள்ளுணர்வு அதிகம் என்று பார்ப்போம்.

கன்னி:
கன்னி ராசியின் அதிபதி புதன் பகவானாக இருக்கிறார். இவர்களுக்கு இயற்கையாகவே அறிவாற்றல் அதிகமாக இருக்கும். அதைவிட இவர்கள் எல்லாவற்றையும் கற்பூரமாக புரிந்து கொள்ளக்கூடிய தன்மை பெற்றார்கள். அந்த வகையில் இவர்கள் ஒரு மனிதன் என்ன நினைக்கிறார்கள்? அந்த மனிதர்கள் நம்மிடம் எதற்காக பழகுகிறார்கள்? அவர்கள் என்ன நோக்கத்துடன் ஒரு விஷயத்தை செய்கிறார்கள் என்பதை இவர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்று இருப்பதால் இவர்களிடம் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
நீதி, நேர்மை, சமத்துவம் என்று அனைத்தையும் பின்பற்றி வாழக்கூடிய துலாம் ராசியினர் எப்பொழுதுமே பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்புகள் அதிகமாக கொடுக்கக் கூடியவர்கள். இவர்கள் பிறருடைய உணர்வுகளை அறிந்து அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதில் வல்லவராக இருப்பார்கள். அந்த வகையில் இவர்களை சுற்றி இருப்பவர்களை இவர்கள் தாயை போல் கவனித்துக் கொள்வதில் சிறந்தவர்கள். இவர்களிடம் அந்த நபர் என்ன பகிர்ந்து கொள்ள வருகிறார்கள் என்பதை இவர்கள் அந்த நபரின் முகத்தை பார்த்து பல நேரங்களில் அறிந்து கொண்டு செயல்படக்கூடிய தன்மை பெற்றவர்கள்.
மீனம்:
குரு பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியினருக்கு எப்பொழுதுமே ஞானம் அதிகமாக இருக்கும். இவர்களுடைய சிந்தனை பிற ராசியை விட வித்தியாசமாகவே இருக்கிறது. அதாவது மற்றவர்கள் ஒரு கோணத்தில் யோசித்தார்கள் என்றால் மீன ராசியினர் வேறு ஒரு கோணத்தில் அந்த விஷயத்தை அணுகுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆக ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்? வாழக்கூடாது என்பதை மிகத் தெளிவாக உணரக் கூடியவர்கள். ஆதலால் இந்த மீன ராசியினரிடம் நாம் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்கவும் முடியாது. அவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |