இந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு பேராசை குணம் அதிகம் இருக்குமாம்
மனிதர்களாகிய நமக்கு ஆசை என்ற எண்ணம் வருவது இயல்பு என்றாலும் சில நேரங்களில் அந்த ஆசையானது கொஞ்சம் அதிக அளவிற்கு செல்லும் பொழுது அது பேராசையாக மாறிவிடுகிறது. இந்த பேராசை ஒரு மனிதனை நிம்மதியற்ற வாழ்வை வாழ செய்து விடுகிறது.
அதோடு அவர்களுக்கு பேராசை வருவதற்கு அவர்களுடைய ராசி நட்சத்திரமும் காரணம் ஆகிறது. அந்த வகையில் எந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு பேராசை அதிகமாக இருக்கும்? எல்லா விஷயங்களிலும் தாங்களே முன்னிலை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு அதிக அளவில் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். மேலும், சுக்கிரன் தான் ஒரு மனிதனுடைய ஆசை சுகபோக வாழ்க்கை என்று எல்லாவற்றுக்கும் காரணியாக இருக்கிறார். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சமுதாயத்தில் தாங்கள் எப்பொழுதும் ஒரு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்ற ஒரு மனப்போராட்டம் இருந்து கொண்டு இருக்கும். அது மட்டுமல்லாமல் இவர்களிடத்தில் இவர்களை அறியாமலே சுற்றி உள்ளவர்களிடம் ஒரு பொறாமையின் குணத்தால் போட்டி மனப்பான்மையை இந்த பேராசை உருவாக்கி விடுகிறது.
கடகம்:
கடக ராசியின் அதிபதி சந்திர பகவான். இவர்களை அறியாமல் இவர்கள் ஏதேனும் சிந்தனையில் ஆழ்ந்த விடுவார்கள். அப்படியாக இவர்கள் எப்பொழுதும் தங்களை பிறர் மதிக்க வேண்டும் என்ற எண்ணும் மனதிற்குள் வைத்திருப்பார்கள். அது மட்டுமல்லாமல் பிறரை விட தாங்கள் வித்தியாசமான ஒரு முறையில் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணமும் இருப்பதால் நிறைய நேரங்களில் இவர்களுடைய ஆசை பேராசையாக மாறிவிடுகிறது. ஆதலால் இவர்கள் எப்பொழுதும் மன கணக்குகளை போட்டுக் கொண்டே இருக்கக்கூடிய அமைப்பில் இருக்கிறார்கள்.
கன்னி:
கன்னி ராசியினர் எப்பொழுதும் ஒரு பிரம்மாண்டத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் ஒரு சாதாரண விஷயத்தை சாதாரணமாக செய்யக்கூடியவர்கள் அல்ல. இவர்களை அறியாமல் தாங்கள் இந்த சமுதாயத்தில் ஒரு உயர்ந்த மனிதர்கள் என்று எண்ணம் கொண்டிருப்பார்கள். அது மட்டும் அல்லாமல் இவர்களை திருப்தி அடையச் செய்வது என்பது ஒரு கடினமான நிலையாகும். இவர்கள் எதற்கும் அவ்வளவு எளிதாக ஏன் எதையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இருக்க மாட்டார்கள். ஒன்றை விட ஒன்று பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |