2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மகர ராசியில் 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகியுள்ளன. அதில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும், புதன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும்,

செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகமும் உருவாகியுள்ளன. இந்த 3 ராஜயோகங்களும் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளன. இதனால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
ரிஷபம்
வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும், லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
மகரம்
ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மீனம்
புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் உடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தால், எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறலாம். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.