இந்த 3 விஷயங்களை மட்டும் எப்பொழுதும் வெளியே சொல்லாதீர்கள்
ஒரு மனிதன் எவ்வாறு ஒரு செயலை செய்யும் பொழுது உயர்ந்த மனிதன் ஆகின்றானோ, அதே போல் ஒரு மனிதன் ஒரு செயலை செய்யாமல் இருக்கும்பொழுதும் அவன் உயர்ந்த மனிதன் ஆகின்றான். அப்படியாக ஒருவர் எந்த செயலை செய்வதினால் உயர்ந்தவனாகவும், எந்த செயலை செய்யாமல் இருப்பதால் அவன் உயர்ந்தவனாகவும் ஆகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
1. ஒரு மனிதன் செய்ய வேண்டிய விஷயங்களில் புண்ணியம் இருக்கிறது. அதுவே செய்ய கூடாத விஷயமாக பாவம் இருக்கிறது. ஆனால் ஒருவன் செய்த புண்ணியத்தை அவன் வெளியே செல்லும் பொழுது அவன் செய்த புண்ணியத்திற்கான பலன் முழுவதுமாக குறைகிறது.
ஆனால் அவன் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தினை அவன் வெளியே இவ்வாறாக நான் ஒரு கால சூழ்நிலையை தவறு செய்து விட்டேன் என்று மனம் வருந்தும் பொழுது அவனுடைய பாவம் குறைகிறது.
ஆக நம் வாழ்க்கையில் குறைக்க வேண்டியது பாவங்கள்.நிறைய சேர்க்க வேண்டியது நம்முடைய புண்ணியங்கள். ஆதலால் எதனை எப்பொழுது எங்கே சொல்ல வேண்டும் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருந்தால் நாம் செய்யும் செயல்கள் பலன் பெறுகிறது.
2. இறைவனை நெருங்க பல வழிகள் இருக்கிறது. அதில் அனைத்து வழியிலும் அவன் கருணையோடு இருந்தால் மட்டுமே அவனுக்கு இறைவனை நெருங்குவது சாத்தியமாகிறது. ஆக இறைவனை நெருங்க வேண்டும், இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் உடன் இருக்கும் உயிர்களுடனும் உடன் இருக்கும் மனிதர்களிடமும் கருணையோடும் அன்போடும் அவர்கள் கேட்ட உதவியை செய்ய முடியாத நிலையில் இருந்தாலும் மனதார வருந்தினால் கூட நம் மனதில் கருணை நிறைந்து இறைவன் நம் அருகில் வருகின்றான்.
3. ஒருபொழுதும் இந்த மூன்று அழுக்குகளிடம் மட்டும் நம் மனமும் உடலும் ஒட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒருவனை அடியோடு அழிக்கக்கூடிய விஷயமாக பொறாமை, கோபம், ஆசை இவை அனைத்தும் இருக்கிறது. இதில் ஏதேனும் ஒன்று ஒரு மனிதன் மனதிற்குள் புகுந்து விட்டால் அவன் நிம்மதியை இழந்து தொடர் பாவங்களை சம்பாதிக்க தயாராகின்றான்.
ஆக ஒரு மனிதன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு சில விஷயங்களை அவன் கடைபிடித்தாலே போதும். அவன் ஆன்மா மிக அற்புதமான நிலையை அடைந்து விடும். மனிதனின் ஒவ்வொரு பிறப்பும் அவனுடைய ஆன்மாவையும் அவன் கர்மவினைகளையும் சுத்தம் செய்து அழகு செய்வதற்காக மட்டுமே. ஆதலால் மாயையில் சிக்கி கொள்ளாமல் வெகு விரைவில் இறைவனை பற்றிக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







