8 காளிகள் ஒரே இடத்தில் அருள் புரியும் கோவில் எங்கு தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இருக்கக்கூடிய முத்தாரம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு நவராத்திரி முன்னிட்டு தசரா திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவிற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.
மேலும், சூரசம்ஹார நாளில் பலரும் காளி வேடம் அணிந்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். அப்படியாக தசரா என்பது துர்கா தேவி 10 நாட்கள் தவமிருந்து காளியம்மனாக அவதரித்து மகிஷாசுரனை வதம் செய்த விழா என்று புராணக் கதைகள் நமக்கு சொல்கிறது. மேலும் மகிஷாசுரன் ஆட்சி செய்த நகரம் என்பதாலே அந்த நகரத்திற்கு மைசூர் என்று பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில்தான் நாம் இன்று வரை மைசூரில் சாமுண்டீஸ்வரி அல்லது துர்கா தேவி என்று அழைக்கப்படும் காளியம்மன் கோவிலில் விஜயதசமி அன்றைய நாளில் மகிஷாசுரனைவதம் செய்யும் விழாவை கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் மைசூரில் கொண்டாடப்படும் தசரா நிகழ்ச்சியை போலவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவிலில் இன்று வரை தசரா என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை தவிர்த்து பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
அதோடு இந்த குலசேகரபட்டினத்தில் அஷ்ட காளியான எட்டு காளி கோவில்களும் ஒரே இடங்களில் இருப்பது கூடுதல் சிறப்பாகும். அதாவது முத்தாரம்மன், பத்தரகாளியம்மன், கருங்காளி அம்மன், சந்தன மாரியம்மன், உச்சிமா காளியம்மன், ஸ்ரீ திரிபுரசுந்தரி என்ற முப்பிடாதி அம்மன், பிரம்ம சக்தி அம்மன் மற்றும் வீரகாளியம்மன் போன்ற அஷ்ட காளி கோவில்களை இங்கு ஒருசேரக் காணலாம்.
இந்த அஷ்ட காளிகளுக்கு ஒரே கோவிலாகவும் தனித்தனி கோவில்களாகவும் குலசேகரப்பட்டினத்தில் இருப்பதால் இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்து கோவிலாக இருந்து வருகிறது.
அதோடு இங்கு சென்று நாம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அந்த வேண்டுதலை சில நாளில் அம்மன் பதில் கொடுத்துவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கை வைத்து இந்த தசரா விழாவில் பங்கு கொண்டு அவர்களுடைய பிரார்த்தனையை அவர்கள் கேட்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







