வியாழக்கிழமை தவறியும் இந்த 3 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்

By Sakthi Raj Jul 01, 2026 10:37 AM GMT
Report

வியாழக்கிழமை நாம் குறிப்பிட்ட சில மூன்று விஷயங்களை செய்யக்கூடாது என்றும் சில விஷயங்களை செய்யலாம் என்றும் சொல்கிறார்கள் அதை பற்றி பார்ப்போம். வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்கு உரிய நாளாக இருக்கிறது.

ஆதலால் அந்த நாளில் நாம் ஒரு சில விஷயங்களை தவிர்த்தால் குருவினுடைய அருளை பெறலாம். அதேபோன்று சில விஷயங்கள் செய்வதன் வழியாகவும் குருபகவான் உடைய அருளைப் பெறலாம் என்கிறார்கள்.

வியாழக்கிழமை தவறியும் இந்த 3 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள் | 3 Things We Should Do And Donts On Thursday

வியாழக்கிழமையில் செய்யக் கூடாத 3 விஷயங்கள் :

1. முடிந்தவரை வியாழக்கிழமை வீடுகளில் ஒட்டடை எடுப்பதை தவிர்த்து விடுங்கள். வாரத்தில் ஏதாவது ஒரு நாள் அதற்காக ஒதுக்கி வீடுகளை சுத்தம் செய்யலாம். வியாழக்கிழமை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

2. வியாழக்கிழமை பழைய பேப்பர், பழைய பொருட்களை விளக்கு போடுவதை தவிர்ப்பதும் நன்மை அளிக்கும். காரணம் புத்தகம் பேப்பர் போன்றவை குரு பகவானுக்கு தொடர்புடைய பொருளாக இருக்கிறது. இந்த நாளில் செய்வதை நாம் தவிர்த்து விட வேண்டும்.

3.ஒரு மனிதனுக்கு குரு பகவான் தான் பெயர், புகழ், செல்வம், குழந்தை பாக்கியம் நல்ல திருமண வரன் ஆகியவற்றை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். ஆக குரு பகவானுடைய முழு அருளையும் பெறுவதற்கு வியாழக்கிழமை முடிந்த வரை அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

வியாழக்கிழமை தவறியும் இந்த 3 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள் | 3 Things We Should Do And Donts On Thursday

வியாழக்கிழமையில் செய்ய வேண்டியவை:

1. ஞானத்தை வழங்கக்கூடிய கடவுள் குரு என்பதால் வியாழக்கிழமை குழந்தைகளுக்கு பள்ளிகளில் பள்ளி கட்டணம் செலுத்துவது, பிள்ளைகள் படிப்பிற்கு ஒரு நல்ல முன்னேற்றத்தை பெற்று கொடுக்கும். வியாழக்கிழமையில் கட்டும் போது அது குருதட்சணைக்கு சமமானதாகி விடும். 

2.வியாழக்கிழமை தானம் செய்வதற்கு சிறந்த நாளாக இருக்கிறது.

3. அதேபோல் நீண்ட நாட்கள் காரியங்களில் தடை வேலையில், நல்ல முன்னேற்றம் இல்லை வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமை சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்து தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுக் கொடுக்கும்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US