2026: இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த 3 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்

By Sakthi Raj Aug 26, 2026 06:13 AM GMT
Report

ஓணம் பண்டிகை 2026 :

2026 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி அதிகாலை 12. 28 மணி துவங்கி ஆகஸ்ட் 27ஆம் தேதி அதிகாலை 2.20 மணி வரை திருவோணம் நட்சத்திரம் இருக்கிறது.

இதனால், பெருமாளுடைய மந்திரங்களை பாராயணம் செய்வதும் பெருமாளை வழிபாடு செய்வதும் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பங்களை கொண்டு வந்து சேர்க்கும் என்பது நம்பிக்கை. கட்டாயம் இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நம் வாழ்க்கையில் எல்லா செல்வ வளங்களையும் பெற்றுக் கொடுக்கும்.

கேரள மாநிலத்தில் கொண்டாடக்கூடிய மிக முக்கிய மற்றும் பெரிய பண்டிகைகளில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். இது மலையாள புத்தாண்டான சிங்க மாதத்தில் விமர்சையாக கொண்டாட கூடிய ஒரு பண்டிகையில் ஒன்று. அஸ்த நட்சத்திரம் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில் திருவோணம் தினம் மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது மலையாள மக்களின் செல்வ வளம், ஒற்றுமை உற்சாகம், ஆனந்தம், மகிழ்ச்சி ஆகியவற்றை பல மடங்காக பெறுகச்செய்யும் பண்டிகையில் ஒன்றாகும்.

2026: இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த 3 விஷயங்களை செய்ய தவறாதீர்கள் | 3 Things We Should Do On Onam To Get Blessings

2026: இரட்டை புதன் பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது

2026: இரட்டை புதன் பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது

ஓணம் கொண்டாட காரணம் :

புராண கதைகளின் அடிப்படையில் மகாபலியின் பக்தி மற்றும் வேள்வி ஆகியவற்றால் பயந்து நடுங்கிய தேவர்கள் அவர்களுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என அன்றி மகாவிஷ்ணுவை சரணடைகிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மகாவிஷ்ணுவும் குள்ளமான அந்தண சிறுவனாக வாமனர் அவதாரம் எடுத்து பூமிக்கு வருகை தருகிறார்.

தினமும் தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் கேட்பவற்றை தானமாக கொடுக்கும் வழக்கத்தைக் கொண்ட மகாபலியடம் மூன்றடி நிலத்தை தானமாக கேட்கிறார். அசுர குருவான சுக்ராச்சாரியார் தடுத்தும் நிலத்தை தானமாக தர ஒப்புக்கொள்கிறார்.

மகாபலி அவர் தானம் தருவதற்காக கமண்ட்லத்தில் இருக்கும் தண்ணீரை வாமனரின் கையில் ஊற்றியதும், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆக திரிவிக்ரமராக வளர்ந்து நின்ற வாமனர், அவருடைய முதல் அடியால் விண்ணுலகையும் இரண்டாவது அடியில் பூமியையும் அளந்த பிறகு மூன்றாவது அடி என மகாபலியிடம் கேட்கிறார்.

வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்க குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்க குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

பிறகு அவரும் வந்திருப்பது திருமலையான் என்பதை உணர்ந்து கொண்டு மகாபலி மூன்றாவது அடியை தன்னுடைய தலைமீது வைக்கும் படி வேண்டிக் கொள்கிறார். அவரது, தலை மீது தனது திருவடி வைத்த மகாவிஷ்ணு மகாபலி பாதாள உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

மகாபலிக்கு சிரஞ்சீவி வரம் அளித்த திருமால் அவரது வேண்டுகோளுக்கு ஏற்று வருடத்திற்கு ஒரு முறை பூமிக்கு வந்து தன்னுடைய நாட்டு மக்களை சந்திக்க கூடிய வரத்தையும் தருகிறார். அவ்வாறு, மகாபலி தன்னுடைய மக்களை காண வரக் கூடிய அந்த திருநாளையே நாம் ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஓணம் பண்டிகை அன்று செய்ய வேண்டிய 3 விஷயங்கள் :

1. ஓணம் பண்டிகை என்று வீடுகளில் மலர்கள் கொண்டு பூக்கோலம் இட்டு வீடுகளை அலங்கரிக்க வேண்டும். இது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

2. அதோடு, இந்த ஓணம் பண்டிகை அன்று புதிய ஆடைகள் உடுத்தி நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சிகளையும் வாழ்த்துகளையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது நம்முடைய ஒற்றுமை மற்றும் உற்சாகத்தில் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

2026: இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த 3 விஷயங்களை செய்ய தவறாதீர்கள் | 3 Things We Should Do On Onam To Get Blessings

3. மேலும், ஒவ்வொருவர் வீடுகளிலும் அவர்களுடைய வசதிக்கு ஏற்ப ஓணம் சத்யாவிருந்து படைக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் பாரம்பரிய முறையில் 64 உணவு வகைகளையும் தலைவாழை இலைகள் பரிமாறி விருந்து ஏற்பாடு செய்யலாம்.

முடியாதவர்கள் கவலை கொள்ளாமல் தங்களுடைய வசதிக்கேற்ப என்ன செய்ய முடியுமோ அதை செய்து மகிழ்ச்சியாக கொண்டாடலாம். இந்த மூன்று விஷயங்களை நாம் ம் ஓணம் பண்டிகை எஅன்று செய்கின்ற பொழுது மகாபலி மன்னன் நமக்கு அருள் செய்வார் என்பது நம்பிக்கை. அதனால் நம்முடைய குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி ஆனந்தம் ஆகியவை பெருகும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US