மார்கழி மாதத்தில் கட்டாயம் இந்த 3 காரியங்கள் செய்யக்கூடாதாம்

By Sakthi Raj Dec 14, 2025 05:48 AM GMT
Report

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் பெருமாள் மற்றும் பிற தெய்வங்களை வழிபாடு செய்வதற்குரிய மிகச் சிறந்த மாதமாக இருக்கிறது. இந்த மார்கழி 30 நாளும் தொடர்ந்து ஒருவர் திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி பெருமாளையும் சிவபெருமானையும் வழிபாடு செய்யும் போது நிச்சயம் அவர்கள் நினைத்த காரியம் விரைவில் கைகூடி வரும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்கழி மாதம் டிசம்பர் 16ஆம் தேதி அன்று காலை 4:27 மணிக்கு பிறக்க இருக்கிறது. சூரிய பகவான் ஒன்பதாவது ராசியான தனுசு ராசியில் இந்த மாதத்தில் தான் பயணத்தை துவங்குகிறார்.

மேலும் இந்த மாதத்தில் எந்த ஒரு சுபகாரியங்களும் நிகழ்த்துவதில்லை. காரணம் மார்கழி மாதம் முழுவதுமாக இறை வழிபாட்டிற்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இந்த மாதத்தில் இறைவழிபாட்டை தாண்டி எந்த ஒரு சுப காரியங்களும் செய்ய மாட்டார்கள்.

அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் கட்டாயமாக ஒரு மூன்று விஷயத்தை மட்டும் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை செய்யும்பொழுது நமக்கு மகிழ்ச்சி அதிர்ஷ்டம் இவை எல்லாம் பாதித்து மன அழுத்தம் மற்றும் நெருக்கடிகளுக்கு ஆளாக கூடும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

மார்கழி மாதத்தில் கட்டாயம் இந்த 3 காரியங்கள் செய்யக்கூடாதாம் | 3 Things We Shouldnt Do In Margazhi Month

கோவிலுக்கு சென்று வரும் பொழுது இந்த ஒரு தவறை செய்து விடாதீர்கள்

கோவிலுக்கு சென்று வரும் பொழுது இந்த ஒரு தவறை செய்து விடாதீர்கள்

மார்கழியில் செய்யக்கூடாத மூன்று விஷயங்கள்:

1. டிசம்பர் 16ஆம் தேதி காலை 4.27 மணிக்கு தொடங்கி ஜனவரி 14-ஆம் தேதி பகல் 3. 13 மணி வரை மார்கழி மாதம் இருக்கிறது. இந்த நேரங்களில் புதிய வீட்டிற்கு குடியேறுதல், வீடு கட்டும் பணிகளை துவங்குதல் போன்றவை செய்யக்கூடாது.

இதனால் குடும்பத்தில் நிச்சயம் ஒரு மிகப்பெரிய பாதிப்புகள் வரலாம். அது மட்டுமல்லாமல் நாம் தொடங்கிய பணியும் சில தடைகளில் முடியலாம் என்று சொல்கிறார்கள். அதேபோல் மார்கழி மாதத்தில் புதிதாக சுவாமி சிலைகளை வாங்கி வந்து வைப்பதையும் கட்டாயமாக தவிர்த்து விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

2. மார்கழி மாதத்தில் தொழில் தொடங்குவதை தவிர்த்த விட வேண்டும். மார்கழி மாதங்களில் நாம் தொழில் தொடங்கும் பொழுது பொருளாதார கஷ்டம் கடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம்.

3. தெய்வீக மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்துவதை கட்டாயமாக தவிர்த்து விட வேண்டும். இது நிச்சயம் ஒரு தீய விளைவுகளை கொடுத்து விடும். காரணம் சூரிய பகவான் இந்த மாதத்தில் மிகவும் பலவீனமாக இருப்பதால் இந்த மாதத்தில் செய்யக்கூடிய காரியங்கள் எதுவும் நீண்ட நாட்களுக்கான பலனை கொடுக்காது என்பதால் இவையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மார்கழி மாதத்தில் கட்டாயம் இந்த 3 காரியங்கள் செய்யக்கூடாதாம் | 3 Things We Shouldnt Do In Margazhi Month

இனி 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி- இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்

இனி 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி- இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்

அதை போல் புதிய வாகனங்கள் நிலம் தங்கம் அல்லது வெள்ளி போன்ற பொருட்களும் வாங்குவதற்கு மார்கழி மாதம் ஏற்றது அல்ல என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த மாதத்தில் கட்டாயமாக சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை தினமும் காலையில் சொல்லி வருவதால் சூரிய பகவானுடைய அருள் கிடைக்கும்.

மேலும் மார்கழி மாதம் முடிந்து நாம் நல்ல காரியங்கள் செய்வதற்காக இந்த மார்கழி மாதத்தை பயன்படுத்திக் கொண்டு முழுவதாக நாம் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி பெறுவதற்கு இறைவழிபாடுகளில் ஈடுபடலாம்.

அது நிச்சயம் நமக்கு ஒரு மிகச்சிறந்த நல்ல பலனை கொடுக்கும். எல்லா மாதங்களிலும் செய்யக்கூடிய வழிபாடுகளை காட்டிலும் மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிக அளவிலான சக்திகள் இருக்கிறது என்பதை நாம் புராணங்களிலும் ஆன்மீக ரீதியாகவும் பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US