தவறியும் இந்த 3 பொருட்களை பிறர் கைகளால் வாங்கி விடாதீர்கள்
இந்த உலகத்தில் எந்த அளவிற்கு நன்மை என்ற ஒரு விஷயம் இருக்கிறதோ? அந்த அளவிற்கு தீமை என்ற ஒரு ஆற்றலும் நிறைந்து இருக்கிறது. அதாவது தீமை என்பது எங்கிருந்தோ வரக்கூடிய ஒரு சக்தி அல்ல, இந்த தீமை என்பது மனிதர்களால் வரக்கூடிய ஒரு ஆற்றலாகும். அதாவது மனிதர்களிடத்தில் நல்ல எண்ணம் இல்லாத பட்சத்தில் அங்கு நிறைய தீய ஆற்றல்கள் உருவாகிறது.
அந்த ஆற்றலானது நம்மை பாதித்து சில சிக்கல்களுக்கு ஆளாக்க கூடும். அந்த வகையில் ஒரு நேர்மறை ஆற்றலால் தீய சக்திகளிடம் போராடி அந்த தீய சக்திகளை நம்மிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்ள முடியாதா என்று கேள்வி எல்லோருக்கும் வரும்.
அதாவது நாம் என்னதான் நல்ல எண்ணம் மற்றும், ஆற்றல் நிரம்பி இருப்பவர்களாக இருந்தாலும் சமயங்களில் நேரம் சரியில்லாத பட்சத்தில் இந்த தீய ஆற்றலானது நம்மை எளிதாக பற்றிக்கொள்ளக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறது.

அதனால் தான் பெரியவர்கள் ஆன்மீக ரீதியாக நிறைய விஷயங்களை பின்பற்றி வந்தார்கள். அப்படியாக நாம் தவறியும் ஒரு மூன்று பொருட்களை மட்டும் பிறரிடம் இருந்து வாங்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
ஆன்மீகத்தில் நிறைய சக்தி வாய்ந்த பொருட்களாக கருதக்கூடியது கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழம் உள்ளது. இந்த இரண்டுமே தீய மற்றும் நல்ல பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அப்படியாக இந்த பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்குவது வேறு, ஆனால் பிறர் கைகளால் அதைக் கொடுத்து வாங்குவது என்று வேறு என்று சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இந்த பொருட்களை நாம் நிச்சயம் யார் கைகளாலும் வாங்க கூடாது. ஆனால் இந்த பொருட்களை ஒரு ஞானக் குரு கைகளால் மட்டுமே வாங்கலாம்.

அதைத் தவிர தவறியும் பிறர் கைகளால் வாங்கி விடாதீர்கள். அவர்களுக்கு உரிய தீய ஆற்றல்கள் நமக்கு எளிதாக பரிமாற்றம் ஆகிவிடக்கூடும். இதேப்போல் தான் "எள்" இருக்கிறது. இதையும் நாம் ஒருவரிடம் இருந்து வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும்.
அதாவது ஒருவர் கைகள் கொண்டு இந்த மூன்று பொருட்களையும் நம் கைகளுக்கு அவர்கள் பரிமாற்றம் செய்யும் பொழுது ஏதேனும் தீய சக்திகள் அல்லது கெட்ட நோக்கங்கள் அவர்களிடம் இருந்தால் அதை நாம் அவ்வாறே வாங்கி கொள்வதற்கான சமமாக ஆன்மீகத்தில் கருதப்படுவதால் இந்த பொருட்களை பிறரிடம் இருந்து அவர்கள் கைகளால் வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்து விடுவது மிகச்சிறந்த நன்மை தரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |