2026ல் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் யாருக்கு ?
2026 ஆம் ஆண்டு புத்தாண்டு இன்னும் சிறிது நாட்களில் பிறக்க இருக்கின்ற நேரத்தில் புத்தாண்டை அடுத்து நிறைய கிரக மாற்றங்கள் நிகழ இருக்கிறது. அதாவது திருக்கணித பஞ்சாங்க முறைப்படியும் வாக்கிய பஞ்சாங்கம் முறைப்படியும் குரு ராகு கேது பெயர்ச்சியின் அடிப்படையில் இந்த 2026 ஆம் ஆண்டு நிறைய மாற்றங்களை சில ராசிகள் எதிர்கொள்ள இருக்கிறார்கள். அந்த வகையில் எந்த ராசியினருக்கு அவர்கள் எதிர்பார்த்தது போல் 2026 ஆம் ஆண்டு வெளிநாடு சென்று வேலை பார்க்கக்கூடிய யோகம் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்கு 2026 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்க இருக்கிறது. இவர்கள் திறமையை சரியான நேரத்தில் வெளிக்காட்டுவதால் இவர்களுக்கு அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் திடீர் பணவரவு இவர்களுக்கு நன்மை அளிப்பதோடு, நினைத்ததை வாங்கி மகிழக்கூடிய பாக்கியத்தை கொடுக்கப் போகிறது. வாழ்க்கை துணையால் நன்மை கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் குடும்பங்களோடு சேர்ந்து வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இந்த 2026 ஆம் ஆண்டு கட்டாயமாக அவர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தில் யாரேனும் வெளிநாடு சென்று வேலை பார்க்கக் கூடிய யோகம் நிச்சயம் உருவாகும். இருப்பினும் இவர்கள் வேலை செய்யும் இடங்களில் கவனச் சிதறல்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதே சமயம் எவ்வளவு மகிழ்ச்சியான நிலை இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதை தவிர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாடு செல்ல முயலாதவர்கள் கூட நிச்சயம் அவர்கள் எதிர்பார்த்து போல் வெளியூர்களில் அல்லது வெளி மாநிலங்களில் கூட சென்று வேலை பார்க்கக் கூடிய யோகம் இவர்கள் பெறுவார்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இந்த 2026 ஆம் ஆண்டு கட்டாயம் நல்ல திருப்புமுனையை அவர்கள் வாழ்க்கையில் பெறப் போகிறார்கள். அலுவலகத்தில் இவர்களுக்கான மதிப்பு உயரக்கூடிய அற்புதமான ஆண்டு. வாழ்க்கை துணை உடன் சேர்ந்து வெளிநாடு செல்லக்கூடிய யோகம் கிடைக்கும் அல்லது வெளிநாடுகளில் வேலை பார்க்கக்கூடிய வாழ்க்கை துணையை இவர்கள் திருமணம் செய்யக்கூடிய பாக்கியம் உண்டாகும். பெண்களுக்கு மிகவும் சாதகமான நிலையாக இந்த வருடம் இருந்தாலும் இவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் ஹார்மோன் தொடர்பான குறைபாடுகளிலும் அலட்சியம் காட்டாமல் மருத்துவ சேவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |