இப்படி பூஜை செய்தால் நிச்சயம் இறைவன் அருள் கிடைக்காதாம்
நம் எல்லோருடைய வீடுகளிலும் நிச்சயமாக பூஜை அறை என்பது இருக்கும். பூஜை அறை என்பது வீடுகளுக்கு எவ்வளவு அவசியமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களை பராமரிப்பது மிக அவசியமாக உள்ளது. அந்த வகையில், பெரும்பாலானவர்கள் பூஜை அறையை சரியான முறையில் பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தாலும் ஒரு சிலர் பூஜை செய்யும் பொழுது சில தவறுகளை செய்து விடுகிறார்கள்.
இவ்வாறு செய்தால் நிச்சயம் இறைவனுடைய அருள் நமக்கு கிடைக்காது என்று சொல்கிறார்கள். அப்படியாக பூஜை அறையில் நாம்செய்யக்கூடிய முக்கியமான தவறுகள் என்ன? அதை பற்றி பார்ப்போம். நிச்சயமாக பூஜை அறையை நாம் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம்முடைய வீடுகளில் நேர்மறை ஆற்றல் பெருகும். அதேப்போல் பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களையும் அவ்வப்போது தண்ணீர் கொண்டு சுத்தமாக துடைத்து அதற்கு சந்தன குங்குமம் வைத்து பூக்கள் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் பூஜை அறையில் சுவாமிக்கு சாற்றிய பூக்கள் வாடி விட்டது என்றால் அதை உடனடியாக அகற்றி விடுவது அவசியம். நீண்ட நாட்கள் வாடிய பூக்கள், மாலைகளை பூஜை அறையில் வைத்திருப்பது சில எதிர்வினைகளை உண்டு செய்யும்.
அதேபோல், காலை மாலை நேரங்களில் உரிய நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்து விட வேண்டும் அது மட்டும் இல்லாமல் நிச்சயம் பூஜை அறையில் தண்ணீர் இருப்பது அவசியம். நம்மால் தினமும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்ய முடியாவிட்டாலும் கட்டாயம் தண்ணீர் வைத்து வழிபாடு செய்வது என்பது மிகுந்த நன்மையை கொடுக்கக்கூடியது.
மேலும், ஒரு சிலர் விளக்கேற்றுவது என்பது கடமையை போல் செய்து விடுவார்கள். சரியாக மாலை 6 மணி ஆகிவிட்டது என்றால் விளக்கேற்றி வழிபாடு செய்து விட வேண்டும். அடுத்தடுத்து அவர்களுக்கு வேலை இருக்கிறது என்று நிதானமாக எந்த ஒரு பூஜையையும் அவர்கள் செய்யாத நிலையை நாம் பார்க்கலாம்.

இவ்வாறு செய்யும் பொழுது நிச்சயம் விளக்கேற்றி வழிபாடு செய்ததற்கான எந்த பலனும் நமக்கு கிடைப்பதில்லை. அதைப்போல் விளக்கி ஏற்றி விட்டு சிறிது நேரங்களில் நாம் அங்கு அமர்ந்து மனதை ஒருநிலை செய்து தியானம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். விளக்கு ஏற்றிவிட்டு உடனடியாக அதை குளிர் செய்து வீடுகளை பூட்டி விட்டு வெளியே செல்வதை நாம் தவிர்ப்பது நல்லது.
வெளியே செல்ல வேண்டும் என்ற நிலையில் இருந்தால் எவ்வளவு சீக்கிரமாக விளக்கேற்றி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக விளக்கி ஏற்றிவிட்டு பிறகு நாம் வெளியே செல்வது நன்மை செய்யும். அதேபோல் விளக்குகளை குளிர வைக்கும் போது நிச்சயம் ஒரு பூக்கள் கொண்டு குளிர வைப்பது நன்மையைச் செய்யும்.
எரிகின்ற தீபத்தை வாயால் ஊதி அணைப்பது போன்ற எந்த ஒரு செயல்களும் செய்யக்கூடாது. இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு எந்த ஒரு தீய பலன்கள் கிடைக்கிறது என்பதை தாண்டி நம் விளக்கேற்று வழிபாடு செய்ததற்கான எந்த ஒரு நல்ல பலன்களும் நமக்கு கிடைக்கப் போவது இல்லை. ஆக, சரியான முறையில் நாம் வழிபாடு செய்வது மட்டுமே நமக்கு நன்மையை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |