வீட்டில் சாமி கும்பிடும்போது இந்த 3 விடயங்களை கட்டாயம் கடைபிடியுங்கள்
வீட்டில் பூஜை செய்ய முடியவில்லை, தெய்வ மந்திரங்களை உச்சரிக்க முடியவில்லை எனில் அதற்கெல்லாம் கர்ம வினைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த கர்ம வினையால் நிகழும் விதிகளை மாற்றி அமைக்க ஒரே வழி கடவுளை வணங்குவதுதான்.
எத்தனை தடைகள் வந்தாலும் கடவுளை பூஜிப்பது மட்டுமே வாழ்க்கையில் அளவில்லா இன்பத்தை கொடுக்கும்.
அந்தவகையில், கடவுளுக்கு பூஜை செய்யும்போது இந்த 3 விடயங்களை கடைப்பிடிப்பது அவசியம்.
ஆண்டாள் பெருமளை நிதம் துதி பாடி வழிபாடு செய்த போது இந்த 3 விடயங்களைதான் கடைப்பிடித்திருக்கிறார்.
பூஜையில் கடைபிடிக்க வேண்டிய 3 விடயங்கள்
கை, வாய், மனது இந்த 3 விடயங்களை ஒருநிலைப்படுத்துவதே பூஜைக்கான முக்கிய விதியாகும்.
அதாவது பூஜையின்போது திரிகரன சுத்தத்தோடு செய்ய வேண்டும் என்பார்கள்.
இறைவனை வழிபடும்போது கைகளால் புஷ்பங்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் நாம மந்திரங்களை பாட, மனதை தூய எண்ணங்களோடு ஒருநிலைப்படுத்தி கடவுளை பூஜிக்க வேண்டும்.
இப்படி கை, வாய், மனது மூன்றும் ஒருநிலையில் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே வழிபாட்டின் முழு பலனையும் பெற முடியும் என்று சாஸ்திர வேதங்கள் சொல்கின்றன.
கடவுளை எங்கு கும்பிடுகிறோம் என்பதை விட வணங்கும்போது எந்த அளவிற்கு ஆத்மார்த்தமான முறையில் கடவுளை சரணடைகிறோம் என்பதே முக்கியம்.
அதை செய்தாலே இறைவன் எப்போதும் துணை நின்று ஆசிவழங்குவார். இதனால் வாழ்க்கையில் முழு பலனையும் அனுபவிக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |