மார்கழி முழுவதுமே சூரிய பூஜை நடைபெறும் சிவன் கோயில்: எங்குள்ளது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டம், உவரியில் சுயம்பு லிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்த புண்ணியத் தலமாக இக்கோவில் விளங்குகிறது.
பொதுவாக, சிவன் கோயில்களில் சூரிய பூஜை ஓரிரு நாட்கள் நடைபெறும்.
ஆனால், உவரி சுயம்பு லிங்க சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் காலையில் இங்கு சூரிய பூஜை நடைபெறுகிறது.
சூரிய திசை நடக்கக்கூடியவர்கள் மார்கழி மாதம் அதிகாலையில் சுயம்பு லிங்கம் சுவாமி கோயிலுக்கு வந்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
இந்த தலத்தில் இறைவனை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி முழுவதும் பூசுவதற்கு கொடுக்கின்றனர்.
இதனால் தீராத நோய்கள் நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை. சந்தனம் மற்றும் விபூதியை தண்ணீரில் கலந்து அருந்தவும் செய்கிறார்கள்.
உவரி சுயம்பு லிங்க சுவாமியை வழிபட்டால் தொட்டதெல்லாம் துவங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
இங்கு ஏராளமானவர்கள் வேண்டுதல் நிறைவேற ஓலை பெட்டியில் கடலின் உள்ளே இருந்து மண் எடுத்து கடற்கரையில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
இப்படிச் செய்தால் மண் தொடர்பான தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
மேலும், குழந்தை பாக்கியம், புற்று நோய் அகல, செய்வினை கோளாறு நீங்க, நாகதோஷம் விலக, மாங்கல்ய பாக்கியம் கூடி வர இக்கோயிலில் வழிபாடுகள் உள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |