ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு போறீங்களா? அப்போ இந்த கோயில்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க
‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது தமிழில் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரும் பழமொழி.
தமிழ் பண்பாட்டைக் கோயில் பண்பாடு என குறிப்பிடும் அளவுக்குக் கோயிலும் வழிபாடும் தமிழ் மக்களுடன் மிகவும் நெருக்கமானவை. இவற்றை பற்றி கூறும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பல காணப்படுகின்றன.
கோயில்களின் தொன்மை
சமய நிறுவனங்களாகக் கோயில்கள் விளங்கின. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திலேயே பல கோயில்கள் இருந்துள்ளன. காரிகிழார் என்னும் புலவர் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி வழிபட்ட ‘முக்கட் செல்வர் நகர்’ என்னும் சிவாலயத்தை அவரது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
சிலப்பதிகாரத்தில் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ கோயிலும், பல்வேறு கோட்டங்களும் கூறப்படுள்ளன. கண்ணகிக்கும் செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்தான். நிலத்தை ஐந்து பிரிவாகப் பிரித்த பழந்தமிழர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கடவுளை உரிமையாக்கினர்.
முதல் கற்கோயில்
பழங்காலத்தில் கோயில்கள் கற்களால் கட்டப்பெறவில்லை. மாறாக செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் ஆகியவற்றால் கட்டப்பட்டன. பல்லவன் மகேந்திரவர்மனே முதல் கற்கோயிலை அமைத்தான் என மண்டபப்பட்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.
கோயில்களின் வளர்ச்சி
பிற்காலப் பல்லவர்கள் காலத்திலும், பிற்காலப் பாண்டியர், சோழர் ஆட்சிக் காலத்திலும் பல்வேறு செங்கல் கோயில்கள் கற்கோயில்களாக மாற்றப்பட்டன. பல புதுக் கோயில்கள் உருவாகின. அவை ‘கற்றளி’ எனப்பட்டன. கற்களில் பலகோயில்களை விரும்பி உருவாக்கிய ஒருவன் ‘கற்றளிப் பிச்சன்’ எனப்பட்டான்.
கோயில்களில் சமயப் பணிகள்
சமய நிறுவனமான திருக்கோயில்களில் வழிபாடு செய்விப்பதற்கும், கோயிலில் பல்வேறு சமயப் பணிகளைச் செய்வதற்கும், கோயிலை நிர்வகிப்பதற்கும், சமய உபதேசம் செய்வதற்கும் பலர் இருந்தனர். அவர்களில் சிலர் பரம்பரை பரம்பரையாக அப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சிலர் சம்பளம் பெற்றும், பொன் பெற்றும், நெல் பெற்றும் பணிகள் செய்தனர்.
கோயில்களில் சமுதாயப் பணிகள்
அக்காலத்தில் சமுதாய மையமாகத் திகழ்ந்த கோயில்களில் பஞ்சம் வந்த காலங்களில் பிழைக்க முடியாத பலர் தங்களைக் கோயிலுக்கு விற்றுக்கொண்டும், அடிமை புகுந்தும் பிழைத்துவந்தனர். கோயிலில் அவர்கட்கு உணவளிக்கப்பட்டது. மருத்துவப்பணிகள், கல்விப்பணி உள்ளிட்ட பல அறப்பணிகள் கோயில் நிர்வாகத்தால்செய்யப்பட்டன.
ராணிப்பேட்டையில் உள்ள கோயில்கள்
- ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம்
- ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்
- ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ படவேட்டமன் கோயில்
- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில்
- ஸ்ரீ முத்தாலம்மன் கோயில்
- அரசமரத்தடி ஸ்ரீ சந்தான விநாயகர் ஆலயம்
- மஹா பிரிதிங்கரா கோயில்
- ஸ்ரீ பவானி அம்மன் கோயில்
- ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில்
- ஸ்ரீ பொன்னியம்மன் கோயில்
- சமயபுரத்து மாரியம்மன் கோயில்
- ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்
- ஸ்ரீ புத்து மாரியம்மன் கோயில்
- திரிசூலி முத்துமாரியம்மன் கோயில்
- நவசபரி ஐயப்பன் கோயில்
ஆகியவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்களாகும். அவற்றுள் புகழ்வாய்ந்த சில கோயில்களை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம்
எரிமலை வெடித்தால் மிகப் பெரும் அழிவு ஏற்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், ஒரு எரிமலை வெடித்த பின்னர் அந்த வெடித்த எரிமலைக் குழம்புகளே சிவலிங்கமாகவும் நந்தியாகவும் மாறிய மலையைப் பற்றிக் குறித்து நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்.
வாலாஜாப்பேட்டைக்கு அருகில் லாலாப்பேட்டை என்ற ஊருக்கு அருகில் காஞ்சனகிரி அமைந்துள்ளது. அடர்ந்த செடிகொடிகளுக்கிடையில், நீண்டு வளைந்த மலைப் பாதையில் ஆங்கங்கே தென்பட்ட பாறைகள், அந்த மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது என்பதை நிரூபிக்கின்றன.
காஞ்சனகிரியின் உச்சியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த சமவெளி உள்ளது. சமவெளியின் ஒருபுறம் பிரமாண்டமான சிவலிங்கமும், நந்தியும் அமைந்திருக்கும் காட்சி காண்பவர்களுக்கு பரசவத்தை ஏற்படுத்தும். மலையின் ஓரிடத்தில் சுமார் 600 ஆண்டுகளைக் கடந்த பிரமாண்டமான ஆலமரமும், அதன் அருகில் சப்த கன்னியர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளும் அமைந்துள்ளன.
மலையெங்கும் ஆச்சாள், செந்தூரம், சரக்கொன்றை, மயில்கொன்றை போன்ற மரங்களையும், மலையின் மேல் பரந்து விரிந்த திருக்குளத்தினையும், அதன் எதிரில் முருகப் பெருமானின் திருக்கோயிலையும் காண முடியும். விநாயகர் மற்றும் நாகர் சிலைகளும் ஆங்கங்கே காணப்படுகின்றன. அவற்றையும் காண மறந்துடாதீங்க.
தொடர்ந்து மலையின் இடப்புறமாக அமைந்திருக்கும் படிகளைக் கடந்து சென்றால் அங்கேயும் ஒரு அதிசயக் காட்சியைக் காணலாம். நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு சிவலிங்கங்களும், எண்ணற்ற நந்தி சிலைகளும் வரிசையாகக் காட்சியளிக்கின்றன. இயற்கையாகவே உருவான இந்த சிவ லிங்கங்கள் காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
சமயபுரத்து மாரியம்மன் கோயில்
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து, உலக உயிரினங்களை காத்து அருள் பாலித்து வரும் அம்பாளின் அழகே தெய்வீகமானது. எட்டு கைகளுடனும், கழுத்தில் தலை மாலை அணிந்து சர்ப்பக்கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளை தன் காலால் மிதித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அழகை கண்டால் மனம் அமைதி அடையும்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் புராண காலத்தில் உருவானதாக கூறப்பட்டாலும் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் மூல கோயிலான ஆதி மாரியம்மன் கோயில் விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட திருத்தலம் என்ற பெருமைக்குரியது என்றாலும் தற்போது உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு வரலாறாக பின்வரும் கதை கூறப்படுகிறது. கோயிலில் உள்ள மாரியம்மன் உற்சவர் சிலை விஜயநகரத்து மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிலையாகும். விஜயநகர பேரரசிற்கு ஆபத்து ஏற்பட்டபோது உற்சவர் அம்மன் சிலை பல்லக்கில் தூக்கி செல்லப்பட்டது. அப்போது பல்லக்கை தூக்கி வந்தவர்கள்வேம்பு மரங்கள் நிறைந்த பகுதியான சமயபுரத்தில் பல்லக்கினை இறக்கி வைத்துவிட்டு உணவு உண்டுள்ளனர்.
பின்னர் பல்லக்கை தூக்க முற்பட்டபோது அவர்களால் தூக்க முடியாமல் போனதால் பல்லக்கினை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டதாக புரணக்கதைகள் தெரிவிக்கின்றன.
பின்னர் இந்த சிலை கண்டறியப்பட்டு, கி.பி. 1706 முதல் 1732 வரை திருச்சி பகுதியை ஆண்ட விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் அம்மனுக்கு தனி கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதுவே இப்போது நம் அனைவராலும் வழிபடப்படும் சமய புரம் மாரியம்மன் கோயில் என வரலாறு கூறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை நோக்குகையில் பெரும்பாலும் அம்மன் கோயில்களே காணப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு செல்ல நேரிட்டால் அங்குள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று, வேண்டிய வரங்களை அளிக்கும் அம்மனை வழிபட்டு வேண்டிய வரங்களை பெற்று திரும்புங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |