பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

By பிரபா எஸ். ராஜேஷ் Nov 27, 2024 11:27 AM GMT
Report

பிரமதேவனுக்குத் தனி சந்நிதி கொண்டுள்ள தேவார வைப்புத்தலமான திருப்பட்டூரில் பிரமனேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர் திருபிடவூர் திருப்படையூர் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரமரேஸ்வரர்

திருப்பட்டூர் கருவறையில் சிவலிங்கத்திற்கு நாகாபரணம் உண்டு. சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள ஆவுடை இங்குச் சதுர வடிவில் உள்ளது. சிவலிங்கத்தின் மேல் தாரா பாத்திரம் இருந்து சொட்டு சொட்டாக நீர்த்துளி விழுவதால் நித்யாபிஷேக்ம் நடக்கிறது.

பிரமநாயகி

பிரம்மதேவன் கௌதம் புத்தர் ஞானம்.பெற்ற போது அவர் முன் தோன்றி உலகுக்கு தர்மத்தை போதிப்பாயாக என்றார். உயர்வும் சிறப்பும் உடையவராக பிரம்ம தேவனை பௌத்தர்கள் வணங்கினர். இவருக்கு எழுப்பப்பட்ட கோயில்கள் பிரம விகார் எனப்பட்டது.

உடனிருந்த பெண் பிரம் நாயகி எனப்பட்டாள். பிரம் விஹார்கள் சிவன் கோயிலாகிய பிறகும் கூட கருவறை சிவனின் பெயர் மாறியது. ஆனால் அம்மனின் பெண் பெயர்பிரமநாயகியாகவே இருந்தது.

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில் | Thiruppattur Temple In Tamil

ஸ்தலபுராணக் கதை

அகம்பாவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்த சிவன் இனி நீ படைத்தல் தொழிலை செய்யக் கூடாது என்று சபித்தார். சிவபெருமானின் அருளைத் தேடி பிரம்மதேவன் இவ்வூருக்கு வந்து பிரம தீர்த்தத்தில் குளித்து 12 லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அவர் தவத்துக்கு மனமிரங்கிய சிவபெருமான் மகிழ மரத்தடியில் காட்சியளித்தார். மீண்டும் படைத்தல் தொழிலைச் செய்யும் படி பிரம்மனிடம் ஆணையிட்டார் எனவே இங்கு பிரம்ம தேவனுக்கு தனி சந்நிதி உண்டு. சிவபெருமானும் பிரம்மரேச்வரர் என்று அழைக்கப்படுகிறார். 

கோயில் விவரம்

திருப்பட்டூரில் அம்பாளின் பெயர் பிரமநாயகி. இங்கு பதஞ்சலி முனிவர், வியாக்கரபாதர், காசியப முனிவர் ஆகியோரும் உள்ளனர். திருப்பட்டூர் பிரம்மரீஸ்வரர் கோவிலுக்கு அருகே கைலாசநாதர் கோவில் கற்றளியாக விளங்குகின்றது.

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்

தீர்த்தங்கள்

திருப்பட்டூரில் இரண்டு தீர்த்தங்கள் உண்டு. பிரம்மதேவன் இத்திருத்தலத்தில் தினமும் குளித்து தன் சாபம் தீர்க்க தீர்க்கும் படி சிவபெருமானிடம் வேண்டினார். அது பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. நன்னீர் குளமாக படித்துறைகளுடன் விளங்குகின்றது.

மகிழ மரத்தைத் தெலுங்கில் வகுளம் என்பர். இங்கு முன்பு மகிழ மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்த தீர்த்தம் வகுளதீர்த்தம் ஆகும். தற்போதும் இத்தீர்த்தம் சோலைகளுக்கு நடுவே நான்கு படித்துறைகளுடன் கோவிலுக்கு வடக்கு புறத்தில் உள்ளது. 

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில் | Thiruppattur Temple In Tamil

நன்மைகள் நடக்கும்

திருப்பட்டூருக்கு வரும் பக்தர்கள் 36 தீபங்களை ஏற்றி கோவிலை ஒன்பது சுற்று சுற்றி வந்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தடை தாமதங்கள் விலகும். தொழிலில் மேன்மையும் குடும்பத்தில் அமைதியும் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி நன்மைகளைக் கொடுக்கும். குடும்ப சாபம் விலகும். பெண் சாபம் இருந்தாலும் தீரும்.

பிரம்மனுக்குக் கோயில்

மும்மூர்த்திகளில் சிவனுக்கு சைவக் கோவில்களும் பெருமாளுக்கு வைணவக் கோவில்களும் உள்ளன ஆனால் பிரம்மதேவனுக்கு மட்டும் கோவில் கிடையாது. அடிமுடி தேடிய கதையில் பொய் சொல்லியதால் பிரம்மனுக்குக் கோயில் இல்லை என்று இங்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

வடநாட்டில் பிரம்மனுக்கு கோயில் கூடாது என்று மனைவி சபித்ததாக வேறு ஒரு காரணம் சொல்லப் படுகிறது. பொதுவாக தானுமாலயன் கோவில் போன்ற சில தளங்களில் சிவலிங்கங்கள் மும்மூர்த்தியாக வழிபடப்படும். இதில் பிரமனும் இடம்பெறுவார்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மூன்று முகங்கள் (நான்கு முகங்களைக்) கொண்ட சிவலிங்கங்கள் கருவறையில் காணப்படுவதுண்டு. சிவலிங்கத்தின் அபிஷேக நீர் வெளியே விழும் தூம்பின் அருகே கோஷ்ட மூர்த்தியாக பிரமன் காட்சி தருகிறார்.

கோபுரத்தின் மேற்கு பகுதியில் பிரமன் காணப்படுவார். ஆனால் மும்மூர்த்திகளில் பிரம்ம தேவனுக்கு மட்டும் என்று என்டனக் கோயிலும் இல்லை. பிரமனின் சாபம் தீர்த்த சிவன் கோயில்களில் பிரமனுக்குத் தனி சந்நிதி உள்ளது 

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில் | Thiruppattur Temple In Tamil

பிரம்ம விஹார்

பிரம்ம விகாரைகள் என்று பௌத்தர்களால் பிரம்ம தேவனுக்கு கட்டப்பட்ட கோவில்கள் இன்று இல்லை. பிரம்மதேவன் பௌத்த சமயத்தில் தர்ம பாலராக கருதப்பட்டார். அவரே தர்மத்தின் காவலர் ஆவார். தர்ம காரியங்களைச் செய்ய தடையாக இருப்பவர்களை அவர் தண்டிப்பார்.

தர்மவழியில் இவ்வுலகம் செல்ல வேண்டும் என்பதை அற ஆழி என்றும் தர்மச்சக்கரம் என்றும் பௌத்த சமயம் எடுத்துரைத்தது. தாய்லாந்தில் தங்க கவசம் இட்ட பிரம்மதேவன் சிலை உள்ளது. பௌத்தம் செழித்த கிழக்காசிய நாடுகளில் பிரம்மன் முக்கியத் தெய்வமாக வணங்கப்படுகின்றார்.

இங்கும் பிரம்ம விஹார்களில் பிரம்மதேவன் நான்கு முகங்களுடன் நான்கு கைகளில் உடுக்கை, தண்டம் ஏந்தி சிலை வடிக்கப்பட்டார். பிரம்மாவின் பல இயல்புகள் பின்னர் சிவபெருமானுக்கு உரியனவாக மாற்றப் பெற்றன. 

சென்னை சென்றால் இந்த கோயில்களை தரிசிக்க தவறாதீர்கள்

சென்னை சென்றால் இந்த கோயில்களை தரிசிக்க தவறாதீர்கள்

ராஜஸ்தானில் பிரம்மா மந்திர்

வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் என்ற ஊரில் பிரம்மதேவனுக்கு ஜகத் பிதா பிரம்ம மந்திர் என்ற பெயரில் தனிக் கோவில் உள்ளது. இக்கோவில் உலகின் முதல் 10 சம்யுத் தலங்களில் ஒன்றாகும். இதனை 14 ஆம் நூற்றாண்டில் விசுவாமித்திரர் கட்டினார் என்றும் பின்பு 16ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் புதுப்பித்தார் என்றும் கூறுவர்.

750 அடி உயரத்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல 650 படிக்கட்டுகள் பளிங்கினால் கட்டப்பட்டுள்ளன. பிரம்மா நான்கு முகங்களுடன் நான்கு கைகளுடன் சௌமூர்த்தியாக குறுக்குக் காலிட்டு (ஐயப்பன் ரூபத்தில்) அமர்ந்திருக்கின்றார். இவருக்கு இருபுறமும் சாவித்திரி, காயத்ரி என்று இரண்டு மனைவிகள் உள்ளனர். 

ராஜஸ்தான் புஷ்கர் கோயில் கார்த்திகை மாதப் பௌர்ணமி அன்று விடிய விடிய பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து அங்கு உள்ள குளத்தில் குளித்து பிரம்ம தேவனை வழிபட்டு செல்வார்கள். கார்த்திகை பௌர்ணமி இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில் | Thiruppattur Temple In Tamil

பத்ம புராணம் கூறும் கதை

இக்கோவிலுக்கான தல வரலாறு ஒன்று உள்ளது. 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பத்ம புராணத்தில் வஜ்ரநாபா என்ற அரக்கனைக் கொன்ற பாவம் தீர தான் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிரம்மதேவன் தேடினார். பிரம்மதேவனின் கையில் இருந்த தாமரை பூ விழுந்த இடமே புஷ்கர் என்ற இந்த இடமாகும்.

இங்கு அவர் அமர்ந்து யாகம் செய்ய முடிவு செய்தார். அவ்வாறு யாகம் செய்வதற்கு அவருடன் சேர்ந்து மனைவி ஸ்தானத்தில் அமர சாவித்திரி இல்லை என்பதால் உள்ளூரில் குர்ஜார் இனத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை மணந்து அவளுடன் சேர்ந்து அமர்ந்து யாகத்தை செய்து முடித்தார். பாவத்திலிருந்து விடுதலை பெற்றார்.

மனைவியின் சாபம்

பிரம்ம தேவன் காயத்ரியை மணந்த காரணத்தினால் சாவித்திரி கோபம் கொண்டாள். பிரம்ம தேவனுக்கு இங்கு மட்டுமே கோவில் இருக்க வேண்டும் வேறு எங்கும் கோவில் இருக்கக் கூடாது என்று பிரம்மனின் மனைவி சாவித்திரி சாபமிட்டாள். இதனால் பிரமதேவனுக்கு வடநாட்டில் கோயில்கள் இல்லை.

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

காஞ்சியிலும் மனைவி சாபம்

யாகத்துக்குத் தன்னை அழைக்காததால் பிரமதேவனை அவர் மனைவி சபித்தார் என்ற கதை தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர் புராணக் கதையிலும் உண்டு. சரஸ்வதி கடுங்கோபமுற்று தண்ணீரால் பிரமனின் யாகத் தீயை அணைத்தாள். (சரஸ் என்றால் வடமொழியில் தண்ணீர்) .

யாகசாலையை இருட்டாக்கினாள். பிரம்மதேவன் திருமாலின் உதவியை நாடினார். சரஸ்வதி கருங்காளி உருவில் வந்து திருமாலுடன் போரிட்டுத் தோற்றாள். திருமால் தீபப் பிரகாசகராக யாகசாலைக்கு ஒளி ஊட்டினார். .கருங்காளியின் கோயில் காஞ்சிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. காஞ்சி வரதராஜர் கோயில் பழைய பிரம்ம விஹார் என்பதற்குரிய ஆதாரம் இக்கதையில் பொதிந்துள்ளது.  

 ஆந்திராவில் பிரமதேவன் கோயில்

ஆந்திராவில் ராஜாவாசி ரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்பவர் செபரோலு என்ற இடத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய பிரம்மா சிலையைப் பிரதிஷ்டை செய்தார். இச்சிலை சதுர்முக பிரம்ம சிலையாகும். இங்குப் பிரம்ம தேவனுக்கு கோவில் உள்ளது.

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில் | Thiruppattur Temple In Tamil

கேரளாவில்

கேரள மாநிலத்தில் திருநாவா என்ற ஊரில் பிரம்ம தேவனுக்கு கோவில் உள்ளது. இம்மாநிலத்தின் மிக நீண்ட நதியான பாரதப்புழா நதியின் தென் கரையில் பிரம்மனுக்குக் கோவில் உள்ளது. வடகரையில் நவமுகுந்தன் கோவில் என்ற பெயரில் திருமாலுக்கு ஒரு கோவில் உள்ளது.

இக்கோயில்கள் பிரம்ம சத்திரியன் என்று அழைக்கப்பட்ட பரசுராமர் கட்டிய கோவில்கள் ஆகும். பரசுராமனின் குருவாக பிரம்மதேவன் விளங்கியதால் அவர் பிரம்மாவுக்கு என்று தனிக் கோவில் கட்டியுள்ளார். கோவிலில் நவ யோகிகள் இருந்ததாகவும் ஓர் வரலாறு உள்ளது. சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. 

இழந்த செல்வதை மீண்டும் குபேரன் பெற்ற சக்தி வாய்ந்த தலம்

இழந்த செல்வதை மீண்டும் குபேரன் பெற்ற சக்தி வாய்ந்த தலம்

சமண பௌத்தத்தில் பிரம்மாவின் சிறப்பு

இந்தியச் சமய வரலாற்றில் பௌத்த சமயத்தினர் பிரம்ம விகார் என்ற பெயரில் பிரம்ம தேவனுக்கு கோவில்கள் எழுப்பி இருந்தனர். கௌதம புத்தர் ஞானம் பெற்ற போது பிரம்ம தேவனே அவர் முன் தோன்றி உலகெங்கும் தர்மத்தைப் போதிக்குமாறு கூறினார் என்று பௌத்தர்கள் நம்புகின்றனர். பௌத்த சமயத்தில் இந்திர வழிபாடு போலவே பிரம்மதேவன் வழிபாடும் முக்கியத்துவம் பெற்றது.

வேதங்களை எதிர்த்த பௌத்தர்கள் பிரம்மனை மேதா என்ற பெயரில் அறிவும், அன்பும் ஒருங்கே பெற்றவராகக் கருதி அவருக்கு பிரம்ம விகாரைகள் எழுப்பினர். பௌத்த சமயம் பரவி இருந்த உலக நாடுகளில் பிரம்மதேவன் வழிபடு தெய்வமாக இருந்து வருகிறார்.

சீனாவில் பிரம்ம தேவனை சாந்த்யான் என்றும் ஜப்பானில் போந்தேன் என்றும் அழைக்கின்றனர். பழைய பௌத்த நூல்கள் 17 பிரம்மலோகங்கள் உண்டு என்றும் 17வது பிரம்மலோகத்தில் பிரம்மா இருப்பதாகவும் கூறுகின்றன

ஜைனசமயமும் பிரம்மனை ரிஷப தேவர் என்ற பெயரில் முதல் தீர்த்தங்கரராகக் கொண்டிருந்தது. பிரம்மா உயர்வும் சிறப்பும் உடையவராக சமண, பௌத்த சமயங்களால் கருதப்பட்டார். உடம்பை யோக சாதனமாகவும் மனதை தியான மையமாகவும் உருவாக்க வேண்டும் என்று பிரம்ம சூத்திரம் எடுத்துரைக்கின்றது.

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில் | Thiruppattur Temple In Tamil

பிரம்மா படைப்புக்கடவுளான கதை

பிரம்மா படைப்புக்கடவுளாக விளங்குவதற்கு ஒரு பழங்கதை உண்டு. உலகெங்கும் உள்ள ஆதிச்சமயங்களில் உலகத்தின் தோற்றம் பற்றிய கதைகளும் ஆதி தாய், தந்தை பற்றிய கதைகள் உண்டு. அதுபோல இங்கும் ஒரு கதை வழங்குகிறது. பிரம்மா சதருபாவை விரும்பினார்.

அவளைக் காண்பதற்காக நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை கொண்டிருந்தார். சத ரூபா பிரம்மாவிடம் இருந்து தப்பிக்க விலங்குகளாகவும் பறவைகளாகவும் 100 உருவங்களை எடுத்தாள். பிரம்மாவும் அதை போலவே 100 பறவைகளாகவும் விலங்குகளாகவும் ஆன் உருவம் எடுத்தார்.

இப்படித்தான் உலகில் அநேக விலங்குகளும் பறவைகளும் படைக்கப்பட்டன. பின்பு இருவரும் இணைந்து பல கோடி ஆண்டுகள் இன்புற்று இருந்தனர்.   

சதருபாவால் சாபம் பெற்ற பிரம்மா

சத ரூபா - பிரம்மா காதல் கதை இந்துமதத்தில் வேறு வடிவம் பெற்றஸ்து. பிரம்மா தான் படைத்த தன் மகளான சத ரூபாவை நேசித்ததால் சிவன் பிரம்மாவின் தலையை கொய்தார். இவ்வாறு வெட்டுப்பட்ட தலை வந்து சிவனின் கையை கவ்விக்கொள்ள அந்த கையுடன் முடிவற்ற பயணத்தில் அவர் காலபைரவனாக அலைந்து கொண்டிருகிறார்.  

மது அருந்தும் பிரமனின் கபாலம்

உஜ்ஜயினியில் உள்ள காலபைரவர் கோவிலில் சிவலிங்கத்தின் தலை இல் உள்ள கபாலத்தில் அதிகாலை நான்கு மணி பூஜையின் போது மதுவை ஊற்றுவர். பின்பு வாய அருகிலும் மது கலசத்தை வைப்பார்கள். அதற்கு முன்பு சுடுகாட்டு சாம்பலால் இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அபிஷேகம் முடிந்ததும் மதுவை வார்ப்பர். சிவலிங்கம் மதுவில் பாதியைப் பருகிவிடும். மீதி மது அப்போது பூஜையில் கலந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் 

இழந்ததை மீட்டு தரும் வல்லக்கோட்டை முருகப்பெருமான்

இழந்ததை மீட்டு தரும் வல்லக்கோட்டை முருகப்பெருமான்

பார்வதியால் தலை இழந்த பிரம்மன்

பிரம்மனுக்கு நான்கு தலைகள் இருப்பதற்கு சைவ சமயத்தில் இன்னொரு கதை உண்டு. இக்கதை பிரம்மனை தகுதி இழப்புச் செய்யும் சைவ சமயக் கதை ஆகும். ஒரு காலகட்டத்தில் சிவனுக்கும் ஐந்து முகம் பிரம்மனுக்கும் ஐந்து முகம் இருந்தது . பிரம்ம தேவனை சிவன் என்ற கருதி பார்வதி அவனைக் கட்டி அனைத்தாள். அதனால் சிவ பெருமான் கோபம் கொண்டார்.

பிரம்மனுக்கும் தனக்கும் வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்காக பிரம்மதேவனின் ஒரு தலையை வெட்டிப் போட்டார். பிரம்மனின் தலை சிவபெருமானின் கையைப் பற்றிக்கொள்ள அவர் பிரம்மஹத்தி தோஷத்தோடு அலைந்ததாகவும் பின்பு சாப விமோசனம் பெற்றதாகவும் கதைகள் உள்ளன.

சைவத்தில் பிரமன் பொய்காரன்

இந்திரன், பிரமன், சந்திரன் போன்ற பௌத்த கடவுளரைப் பற்றிக் கேவலமான கதைகள் சைவப் புரட்சியின் போது பரப்பபட்டன. . சிவபெருமானின் அடிமுடி தேடிய கதையில் பிரம்மதேவன் பொய் சொல்லி ஆக்கப்பட்டான். சிவபெருமானின் திருவடிகளை வராக ரூபத்தில் திருமால் தேடிச் சென்றார். பிரம்மதேவன் அகம்பாவத்தில் சிவபெருமானின் உச்சித்தலையைக் காண விரும்பி மேலே அன்னப்பறவை ரூபத்தில் பறந்து சென்றார்.

எவ்வளவு உயரம் பறந்தாலும் அவரால் சிவபெருமானின் உச்சியைப் பார்க்க முடியவில்லை. அப்போது அவர் சிவனின் தலையில் இருந்து கீழே விழுந்து கொண்டிருந்த தாழம்பூவைப் பார்த்து பிரமன் தான் சிவனின் உச்சியைப் பார்த்து விட்டேன் என்று தனக்காக பொய் சாட்சி சொல்லும்படி அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் வந்தார்.

' நான் உங்கள் உச்சி தலையை பார்த்து விட்டேன்' என்றார் 'அதற்கு சாட்சி இதோ இந்த தாழம்பூதான்' என்று சொல்லவும் சிவபெருமான் கோபம் கொண்டு 'பொய் சொன்ன உனக்கு போஜனம் கிடையாது உனக்கு எங்கேயும் கோவிலும் கிடையாது நைவேத்தியமும் கிடையாது' என்று பிரம்மனுக்கு சாபம் இட்டார்.

பொய் சாட்சி சொன்ன தாழம்பூவிடம் 'வழிபடு பொருளாகும் தகுதியை நீ இழந்து விட்டாய்' என்று சாபம் கொடுத்தார். தாழம்பூ எந்தசிவன், விஷ்ணு கோவிலிலும் பூஜைப் பொருளாக பயன்படுத்தப்பட மாட்டாது. ஆனால் நாகதேவன் கோவிலில் மட்டும் தாழம்பூ நாகத்திற்கு பிரியமான பொருள் என்பதால் படைக்கப்படும்.

கரு வளர்க்கும் புற்றுக் கோயில் கருவளர் சேரி

கரு வளர்க்கும் புற்றுக் கோயில் கருவளர் சேரி

ஆக பௌத்தர்கள் தங்களுடைய முதன்மை தெய்வமாக வணங்கி வந்த பிரம்ம தேவனுக்கு மடாலயங்களில் பிரம்ம விகாரைகள் என்று தனி சந்நிதி. எழுப்பி இருந்தவர். சைவ சமயப் பேரெழுச்சி ஏற்பட்டபோது அதுவரை வழிபடு தெய்வங்களாக இருந்து வந்த இந்திரனை பெண் மோகம் பிடித்தவன் என்றும் பிரம்ம தேவனை பொய் காரன் என்றும் புதிய கதைகளை எழுதி அவர்களின் வழிபடு தகுதியை குறைத்து விட்டனர்.

எனவே பிரம்மதேவனுக்குத் தனி கோவில்கள் கிடையாது. மிக அரிதாக ஒரு சில ஊர்களில் மட்டும் பிரம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அங்கேயும் பிரம்மன் சபிக்கப்பட்டவனாகவும் அக்கோயில் அவனுடைய சாபம் தீர்த்த தலமாகவும் சிவனே முழுமுதற் கடவுளாகவும் கருவறை தெய்வமாகவும் விளங்கி வருகின்றார். அத்தகைய ஒரு கோயில் தான் திருப்பட்டூரில் உள்ள பிரம்மரேஸ்வரன் கோயில்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US