சென்னை சென்றால் இந்த கோயில்களை தரிசிக்க தவறாதீர்கள்
சென்னை என்றாலே பெருநகரம் அங்கு திரை அரங்கம்,பொழுது போக்கு இடம்,வணிகவளாகம் இவை தான் நமக்கு முதலில் நினைவிற்கு வரும்.ஆனால் அந்த பெருநகரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த சோழர்கள் பல்லவர்கள் கட்டிய கோயில்கள் இருக்கிறது.
அந்த கோயில்களின் சிற்பங்களும் வரலாறும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.பெரும்பாலான மக்கள் சென்னை மாதிரியான பெருநகரம் செல்லும் பொழுது முதலில் பொழுது போக்கு அம்சத்தை தான் தேடி செல்கிறார்கள்.
ஆனால் அவர்கள் காட்டாயம் குடும்பமாக அங்கு இருக்கின்ற கோயில்களுக்கு செல்ல வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றமும் மனதில் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.அப்படியாக நாம் காட்டாயம் சென்னை சென்றால் தவறாமல் தரிசிக்க வேண்டிய கோயில்கள் பற்றி பார்ப்போம்.
1.கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர் சென்னை
சென்னை கோயில்கள் எடுத்து கொண்டால் நம்மக்கு முதலில் நினைவிற்கு வருவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தான்.சிவ பக்தர்களுக்கு மிகவும் பிரியமானவர் இந்த கபாலீஸ்வரர்.இந்த கோயில் சிறப்பு என்னவென்றால் இந்த கோயிலின் பெயரிலே ஒரு அற்புத சக்தி நிறைந்திருக்கிறது.
பொதுவாக பிற கோயில்களின் சுவாமி பெயரை சொல்லும் பொழுது பக்தியும் மனதில் நாம் அங்கு சென்று வழிபட நிச்சயமாக நம்முடைய கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையும் பிறக்கும்.
ஆனால் இங்கு கபாலீஸ்வரா என்று சொல்லும்பொழுதே நமக்கு ஒருவிதமான பாதுகாப்பும் நமக்காக கபாலீஸ்வரர் இருக்கிறார்,என் வாழ்க்கையில் எல்லாம் துன்பமும் தீர்ந்தது என்ற தைரியம் பிறக்கும்.
அப்படியாக இந்த கோயில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட அற்புதமான கட்டிடக்கலை கொண்ட கோயிலாகும்.இங்கு சிவனின் வடிவமான அருள்மிகு கபாலீஸ்வரரும் , பார்வதியின் தோற்றமான கற்பகாம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர்.
புராணங்களின் படி ஒருமுறை பார்வதிதேவி சிவபெருமானிடம், உபதேசம் கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுது,மயில் ஒன்று அங்கு நடனமாட,அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தைக் கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள்.
இதனால் கோபம் சிவபெருமான் பார்வதி தேவி சிவசிந்தனையிலிருந்து விலகியதால் அவர் நோக்கிய மயிலாக மாறும்படி சபித்துவிட்டார்.அதனால் அம்பிகை சிவனிடம் தன் செய்த குற்றத்திற்கு விமோசனம் கேட்க பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன்.
அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.
இந்த கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலையில் காலசாந்தி, பகலில் உச்சிக்கலை, மாலையில் சயம்கலா, இரவில் அர்த்தஜாமம் என பல்வேறு பூஜைகள் நடக்கிறது. இக்கோயிலில் சிறப்பான விழாக்கள் என்றால் பங்குனி மற்றும் அறுபத்திமூவல் போன்ற முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
மேலும், கோயிலுக்குப் பின்னால் ஒரு பெரிய குளம் உள்ளது, அங்கு ஒவ்வொரு ஆண்டும் தெப்பம் அல்லது மிதவை திருவிழா கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டு நேரம்
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. திங்கட்கிழமைகளில் மூடப்படும்.
இடம்
12, வடக்கு மாட தெரு, மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு 600004, இந்தியா
2.வடபழனி முருகன் கோவில், வடபழனி
பரபரப்பான சென்னையில் முக்கியமான இடங்களில் வடபழனியும் ஒன்று.வடபழனி என்றாலே ஒரு இடம் தான் எல்லோர்க்கும் நினைவில் வரும்.அது தான் வடபழனி முருகன் கோயில்.
1890 ஆம் ஆண்டு முருக பக்தரான அண்ணாசுவாமி நாயக்கரால் கட்டப்பட்ட இந்த ஆலயம் 1920 ஆம் ஆண்டு நுழைவாயிலில் பிரமாண்டமான ராஜகோபுரம் கட்டி புதுப்பிக்கப்பட்டது.
வடபழனி கோவிலில் என்ன விஷேசம் என்றால் இங்கு விநாயகர், மீனாட்சி அம்மன், சிவன், காளி, பைரவர், சொக்கநாதர், தக்ஷ்ணிமூர்த்தி, சண்டிகேஸ்வரர் மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் பல சன்னதிகள் அமையப்பெற்ற மிக முக்கியமான திருத்தலமாகும்.
மேலும் இக்கோயிலில் 40 மீட்டர் உயரம் கொண்ட கிழக்கு கோபுரத்தில் 108 பரதநாட்டிய நடன சைகைகள் காணப்படுகின்றன.மேலும் இங்கு வழிபட மனதில் உள்ள குழப்பங்கள் திருமணத்தடை செவ்வாய் தோஷம் போன்றவை நீங்கி நிம்மதியான மன வாழ்வு கிடைக்கிறது என்று பக்தர்களின் கருத்தாக இருக்கிறது.
வழிபாட்டு நேரம்
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
இடம்
பழனி ஆண்டவர் கோயில் செயின்ட், வடபழனி, சென்னை, தமிழ்நாடு 600026
3.பார்த்தசாரதி கோவில், டிரிப்ளிகேன்
சென்னை பெருநகரம் எடுத்துக்கொண்டால் பல்வேறு மாவட்டம்,மாநிலம்.நாடு என அனைத்து விதமான மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.மனிதனாக பிறந்தால் அவனுக்கு நிச்சயம் இறைநம்பிக்கை இருக்கும்.
இந்துசமயத்தில் நம் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பல கடவுள்கள் இருக்கிறார்கள்.சைவம் வைணவம் என்ற பிரியர்களுக்கு இருக்கிறார்கள்.
அவர்களின் நம்பிக்கை பாத்திரமாக,வாழ்க்கையின் மேம்பாட்டுக்காகவும் இறை அன்பின் வெளிப்பாடாகவும் பண்டைய காலத்தில் கோயில்கள் எழுப்பப்பட்டது.
அப்படியாக சென்னையில் வைணவ வழிபாட்டவர்கள் கொண்டாடும் கோயில் தான் இந்த டிரிப்ளிகேன் பார்த்தசாரதி கோவில்.இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில்.இக்கோயிலை ஆறாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆழ்வார் மகான்களால் எழுதப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
பெருமாள் மக்களின் நலனுக்காக தசாவதாரம் எடுத்தார்.அந்த தசாவதாரமான கிருஷ்ணர், வராஹம், ராமர் மற்றும் நரசிம்மர் ஆகியோர் ஒரே கோயிலில் வழிபடும் சென்னையில் உள்ள ஒரே கோயில் என்ற பெருமை இந்த பார்த்தசாரதி கோயிலுக்கு உண்டு.
மேலும்,இக்கோயிலில் ராமர் மற்றும் நரசிம்மருக்கு தனித்தனி நுழைவாயில் இருக்கிறது. ருக்மணி, பலராமர், சாத்யகி, பிரத்யும்னன் மற்றும் அனிருத்தர் ஆகியோருடன் கூடிய வெங்கடகிருஷ்ணர் அல்லது பார்த்தசாரதியின் 9 அடி உயர சிலையால் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வழிபாட்டு நேரம்
காலை 5:50 முதல் மதியம் 12:30 வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
இடம்
நாராயண கிருஷ்ணராஜ புரம், டிரிப்ளிகேன், சென்னை, தமிழ்நாடு 600005
4.மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில்,நுங்கம்பாக்கம்
நாடளவில் ஐயப்ப பக்தர்கள் நிறைய இருந்தாலும்,கேரளாவில் தான் ஐயப்பனுக்கு கோயில்கள் அதிகம்.இருந்தாலும் சென்னையில் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் போல் மிக வடிவான ஐயப்பன் கோயில் மகாலிங்கபுரத்தில் அமைந்து உள்ளது.
இந்த கோயில் தான் சென்னையில் கட்டப்பட்ட முதல் ஐயப்பன் கோவில் கோயிலாகும்.1974 ஆம் ஆண்டு ஸ்ரீ.என்.சுப்ரமணியன் ஸ்தபதியின் வழிகாட்டுதலின் படி கேரள பாணியில் கட்டப்பட்ட இக்கோயில், பல பக்தர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
இங்கு முக்கிய கடவுள்கள் குருவாயூரப்பன் மற்றும் சுவாமி ஐயப்பன்.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஐயப்பனுக்கு என்று தனி கோயில் இல்லை.மண்டலம்-மகரவிளக்கு காலங்களில் மிகவும் பிரபலமான ஐயப்பன் கோவிலான சபரிமலைக்கு ஏராளமான வழிபாட்டாளர்கள் செல்வதால் உருவாக்கப்பட்டது.
இன்று சென்னையில் மிக முக்கியமான லோயில்களில் இந்த மகாலிங்கபுரம் கோயில் அமைந்து இருக்கிறது.
வழிபாட்டு நேரம்
காலை 3:30 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
இடம்
18, மாதவன் நாயர் சாலை, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600034
5.ஷீரடி சாய்பாபா கோவில்,மயிலாப்பூர்
இன்று உலக அளவில் சாய்பாபாவிற்கு பத்தர்கள் அதிகம்.மக்கள் மத்தியில் சாய் பாபா அவர்கள் வீட்டில் வாழும் சித்தராக இருக்கிறார்.அப்படியாக மயிலாப்பூரில் மிக முக்கிய கோயில்களில் ஷீரடி சாய்பாபா கோயிலும் ஒன்று.இங்கு வியாழ கிழமை தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த கோவில் 1952 இல் உருவாக்கப்பட்டது. இது ஷீரடியில் உள்ள இந்திய துறவி சாய்பாபாவின் நினைவாக நரசிம்மஸ்வாமி என்ற ஒரு முக்கிய பக்தரால் கட்டப்பட்டது.
செட்டியார் வணிகர் ஒருவர் நன்கொடையாக அளித்த பணத்தில் நரசிம்மசுவாமி கட்டியதால் சென்னையில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்த சாய்பாபாவை தரிசிக்க உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் வந்து செல்கின்றனர்.மேலும் இன்று தமிழ்நாட்டில் சாய்பாபா கோயில்களில் மிக பிரபலமான கோயிலாக மயிலாப்பூர் சாய்பாபா கோயில் விளங்குகிறது.
வழிபாட்டு நேரம்
காலை 5:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
இடம்
எண் 187 பீம சேனா கார்டன் ஸ்ட்ரீட், ராயப்பேட்டை ஹை ரோடு, மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு 600004
6.மருந்தீஸ்வரர் கோவில்,திருவான்மியூர்
சென்னை புகழ்பெற்ற திருத்தலங்களில் மருந்தீஸ்வரர் திருத்தலம் ஒன்றாகும்.திருவான்மியூர் என்றால் அங்கு இருக்கும் கடற்கரையும் இந்த கோயிலும் தான் மிகவும் பிரபலம்.
இந்த கோயில் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் மருந்தீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார் அதாவது இங்குள்ள சிவனை வணக்க அனைத்து நோய்களையும் குணப்படுத்துபவர் என்று பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஒருமுறை அகஸ்திய முனிவருக்கு சிவபெருமான் மருத்துவ குணங்களை போதித்த தலம் என்பதால் இக்கோயில் மருந்தீஸ்வரர் என்று பெயர் பெற்றது.
சென்னையில் உள்ள மிகப்பெரிய கோயிலான மருந்தீஸ்வரர் கோயில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது மற்றும் 275 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.மருந்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைக் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த கோயிலில் இரண்டு நுழைவாயில்கள் இருக்கிறது.அதில் ஒன்று மேற்கிலும் மற்றொன்று கிழக்குப் பக்கத்திலும் உள்ளது. மேற்கு டேங்க் தெரு (மூன்று வாயில்கள்) மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ஒரு வாயில்) ஆகிய இரு திசைகளிலிருந்தும் கோயிலுக்குள் செல்லமுடியும்.
மேலும், இந்த இரண்டு நுழைவாயில்களும் 5 அடுக்கு கோபுரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இக்கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதமானது பல வித நோய்களை தீர்க்க கூடிய சக்தி படைத்தது என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டு நேரம்
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
இடம்
8, டபிள்யூ டேங்க் ஸ்ட், அம்பேத்கர் நகர், லலிதா நகர், திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு 600041
7.சென்னகேசவப் பெருமாள் கோவில், ஜார்ஜ் டவுன்
சென்னையில் மிக பழமையான கோயில்களில் சென்னகேசவப்பெருமாள் கோயிலும் ஒன்று.பெருமாள் கோயில்களில் மிக முக்கியமான கோயிலாக இது கருதப்படுகிறது.மேலும்,இந்த கோயில் 1700 ஆண்டுகள் பழமையான கோயிலாகும்.
மூலவராக கேசவப்பெருமாளும் தயாராக செங்கமல வள்ளி தாயாரும் அருள்பாலித்து வருகின்றனர். கோயிலில் தினமும் மூன்று பூஜைகள் செய்யப்படுகின்றன: காலை ஒன்று காளசந்தி, மதியம் ஒன்று உச்சிக்கலை, மாலையில் சாயரக்ஷம் ஆகும்.
கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முக மண்டபத்தில் ஆழ்வார்கள் உள்ளனர்.
ஸ்ரீ சென்ன மல்லீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் கோயில் ஆகிய இரண்டும் கோயில் குளத்தையும் தேரையும் பகிர்ந்து கொள்கின்றன.
கூடுதலாக, இந்த இரண்டு இரட்டைக் கோயில்களுக்கு இடையே ஒரு இணைப்பு நடைபாதை உள்ளது.
வழிபாட்டு நேரம்
காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை.
இடம்
37QJ+963, தேவராஜ முதலி St, ரத்தன் பஜார், ஜார்ஜ் டவுன், சென்னை, தமிழ்நாடு 600003
8.காரணீஸ்வரர் கோவில்,சைதாப்பேட்டை
சென்னையில் பரபரப்பாக இருக்கும் இடங்களில் சைதாபேட்டையும் ஒன்று.சென்னையில் வாழும் மக்களுக்கு சைதாப்பேட்டையில் இருக்கும் புகழ் பெற்ற காரணீஸ்வரர் கோயில் பற்றி தெரிந்து இருக்கும்.
ஆனால் வெளியூர் மக்களுக்கு இந்த கோயிலை பற்றி தெரிந்திருக்கும் வாய்ப்பு குறைவு.இப்பொழுது இக்கோயிலின் சிறப்பை பற்றி பார்ப்போம்.இக்கோயிலில் விநாயகர், கார்த்திகேயர், சூரியன், ஸ்வர்ணாம்பிகை ஆகிய அனைவருக்கும் சன்னதிகள் இருக்கிறது மூலவராக காரணீஸ்வரர் வீற்றியிருக்கிறார்.
இன்னொரு எ;அழகான விஷயம் என்னவென்றால் கோயில் உள்ளே ஒரே தோட்டம் இருக்கிறது.இங்கு வருடந்தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா, பிரதோஷ நாட்கள், பத்து நாள் பிரம்மோத்ஸவம் சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
மேலும் இங்கு கோவில் வளாகத்தில், கோபதி சரஸ் என்ற பெயர் கொண்ட பட்டத்தை பார்க்கமுடியும் அது பயங்கர மந்திர சக்திகள் இருப்பதாகவும் பௌர்ணமி இரவில் புனித நீரில் நீராடினால் நோய்கள் குணமாகும் எனவும் நம்பப்படுகிறது.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
இடம்
1, காரணீஸ்வரர் கோயில் செயின்ட், சூரியம்மாபேட்டை, சைதாப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு 600015
9.வேதபுரீஸ்வரர் கோவில், திருவேற்காடு
சென்னையில் திருவேற்காடு என்றால் மாரியம்மன் கோயில் தான் நினைவிற்கு வரும்.ஆனால் அங்கு 1300 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில் ஒன்று இருக்கிறது.அது தான் சென்னையின் மிகவும் சிறப்பு மிக்க வேதபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.
இங்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுப்பதால் நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள்,கணவன் மனைவி இடையே பிரிவு போன்றவர்கள் இங்கு வந்து வேதபுரீஸ்வரர் தரிசனம் செய்ய அனைத்து துன்பங்களும் விலகும்.
எவ்வளவு சிறப்பு மிக்க கோயில் கட்டிடட கலை பார்த்தால் சோழர்கள் காலத்தில் கட்டிய கோயிலாகும்.வட வேதாரண்யம் என்பது இத்தலத்தின் பழமையான பெயர்.இந்த கோவிலில், பக்தர்கள் தங்கள் 81வது பிறந்தநாளை அல்லது "சதாபிஷேகம்" கொண்டாட விஷேசமானது.
வேதபுரீஸ்வரர், பாலாம்பிகை அம்மன் சன்னதிகள் மட்டுமின்றி, வரசித்தி விநாயகர், நாகராஜர் (ஆதிசேஷன்), முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, நால்வர், 63 நாயன்மார்கள், விசாலாட்சி விஸ்வநாதர், காசி விஸ்வநாதர் ஆகியோரின் சன்னதிகளும், சிலைகளும் உள்ளன.
மேலும் இக்கோயிலில் முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்டு "வேலாயுத தீர்த்தம்" உருவானது.கோவில் வளாகத்தில், இந்த அற்புதமான குளம் இன்னும் காணப்படுகிறது.இங்கு முருகப்பெருமான் சிவலிங்கத்துடன் காட்சியளிக்கிறார்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.
இடம்
34C7+JWP, கற்பகாம்பாள் நகர், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, தமிழ்நாடு 600077
10.கந்தகோட்டம்,சென்னை
சென்னையில் முருகப்பெருமானுக்கு மிகவும் புகழ் பெற்ற கோயில்களில் வடபழனிக்கு அடுத்ததாக கந்தகோட்டம் கோயில் அமைந்து உள்ளது.மிகவும் மனம் கவரும் அழகிய மலைக்கோயிலாக இந்த கந்தகோட்டம் கோயில் அமையப்பெற்று இருக்கிறது.
8 ஏக்கர் நிலப்பரப்பிலும் கோவிலுக்குப் பின்னால் 'சரவணப்பொய்கை'- என்ற ஒரு அழகிய ஒரு பெரிய குளமும் உள்ளது. இக்கோயில் திருப்போரூரில் உழைப்பாளி மற்றும் பக்தியுள்ள இரு வணிகர்களால் நிறுவப்பட்டது என்று புராணம் கூறுகிறது.
இங்கு முருகப்பெருமான் 'வீரர் கடவுளாக' போற்றப்படுகிறார்.மேலும் இங்கு தினசரி பூஜைகள் மற்றும் சடங்குகளுடன், ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு வாராந்திர பூஜை நடைபெறுகிறது.அடுத்தபடியாக அருட்பெருஞ்ஜோதி அகவல் அர்ச்சகர்களால் பாடப்படுகிறது.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள சித்திபுத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் அது தீரும் என நம்புகின்றனர்.
வழிபாட்டு நேரம்
காலை 6:00 மணி முதல் இரவு 9:45 மணி வரை மற்றும் பிற்பகல் 12:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை
இடம்
38, 52, நைனியாப்பா செயின்ட், ரத்தன் பஜார், பார்க் டவுன், சென்னை, தமிழ்நாடு 600003
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |