தமிழகமே கோயில்களுக்கும் ஆன்மீகத்திற்கும் பெயர் பெற்றது. அப்படியாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்பம்சம் வாய்ந்த பல புராணங்கள் நிறைந்த அனைத்து தோஷங்களுக்கும் அனைத்து துன்பங்களுக்கும் தீர்வு கொடுக்கக்கூடிய கோயிலாக அமைந்திருக்கும்.
அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த முக்கிய கோயில்கள் பற்றி பார்ப்போம்.
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்-திருமழபாடி
இக்கோயிலில் முக்கிய சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இக்கோயிலில் தான் திருமணம் நடந்தது.திருமணம் தடைபட்டு கொண்டு இருப்பவர்கள்,திருமணம் தாமதம் இவர்கள் எல்லாம் இங்கு பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தி திருமணம் பார்க்க அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
மேலும் இங்குள்ள இறைவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்.இக்கோயிலின் விநாயகரின் திருநாமம் சுந்திர விநாயகர் ஆகும்.அடுத்ததாக பாலாம்பிகை,சுந்திராம்பிகை இவர்களுக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.
இங்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
அடுத்தபடியாக சிவன் சன்னிதியில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் இருக்கின்றனர்.பிறகு காத்தியாயனி அம்மன் சன்னதியும் இருக்கிறது.
இங்கு மற்றோரு சிறப்பு என்னவென்றால் அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் அவர்கள் மூவராலும் பாடல் பெற்ற சிறப்பு தலமாகும்.
அமைவிடம்
அரியலூர், தஞ்சாவூர் மற்றும் லால்குடியிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் திருமழபாடி உள்ளது. நேரடி பஸ் வசதி உள்ளது.
கோவிலுக்கு செல்ல
அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில்-கீழப்பழுவூர்
இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மிக சிறியதாக இருப்பதால் அதனை அடையாளம் காட்ட லிங்கம் மேல் குவளை கவிழ்த்தப்பட்டு இருக்கும்.
அபிஷேகம் நடைபெறும் பொழுது அந்த குவளைக்கே அபிஷேகம் நடைபெறும்.மேலும் இங்குள்ள சிவனுக்கு சாம்பிராணி தைலம் பூசப்படுகிறது.
இங்கு விநாயகப்பெருமான் நடனம் ஆடும் கோலமும்,பஞ்சலோக சிலையும் சற்று வித்தியாசமானவை.இங்கு கிழக்கு நோக்கிய 5 ராஜகோபுரங்களுடன் இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன.
அமைவிடம்
அரியலூர் - திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது.
கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் கோவில் வளைவு உள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.
கோவிலுக்கு செல்ல
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்-உடையவர் தீயனுர்
இங்கு மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுரவடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின் மேல் சிவலிங்க திருமேனியராகப் காட்சி .கொடுக்கிறார்.
இக்கோயில் 1166 இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயில் ஆகும்.
பூரண காலத்தில் இங்கு வில்வ மரங்கள் அதிகம் காணப்பட்டு உள்ளதால் இந்த இடத்திற்கு வில்வாரண்யம் என்று அழைக்கப்பட்டு இருக்கிறது.
கோவிலுக்கு செல்ல
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்-கங்கைகொண்ட சோழபுரம்
தமிழ்நாட்டுல் மிக பெரிய சிவலிங்கம் அமைந்து உள்ள கோயில் தான் இந்த பிரகதீஸ்வரர் கோயில்.இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற புகழ் வாய்ந்த கோயில்.தினமும் பகலில் இக்கோயிலில் உள்ள நந்தியின் மீது சூரிய ஒளி வீசி அந்த ஒளி சிவலிங்கத்தின் மீது படுவது சிறப்பம்சம் ஆகும்.
அப்படியாக நாம் மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை எல்லாம் அனைத்து விட்டு அந்த சூரிய வெளிச்சம் கொண்டு சிவலிங்கம் பார்க்க அத்தனை அழகாக இருக்கும் வடிவில் லிங்கம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இக்கோயிலில் இன்னொரு சிறப்பு என்னவென்றால்,குளிர் காலத்தில் குளிரை குறைத்து வெப்பத்தையும்,வெப்ப காலங்களில் வெப்பத்தை குறைத்து குளிர் கொடுப்பதாக அமைய பெற்று இருப்பது தான்.இங்கு பெரிய நாயகி அம்மன் 9.5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார்.
அமைவிடம்
கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் ரோட்டில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் ஜயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
கோவிலுக்கு செல்ல
அருள்மிகு கலியுகவரதராஜா பெருமாள் திருக்கோயில்-கல்லங்குறிச்சி
இங்கு மூலஸ்தானத்தில் 12 உய்ரித்திலான கம்பத்தை தாங்கி கொண்டு இருப்பது போல ஆஞ்சிநேயர் உருவம் மட்டுமே உள்ளது.இவரையே மூலவராக கருதி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
இவரை தவிர்த்து இங்கு வேறு சிலைகள் எதுவும் இல்லை.மேலும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பதும் இல்லை.மாறாக உற்சவர் மூர்த்தி புறப்பாடு இருக்கிறது.
மேலும் தாயாருக்கும் தனி சன்னதிகள் கிடையாது.மூலவரே கம்பத்தில் இருப்பதால் தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம்.பிறகு,உற்சவர் கலியுக வரதராஜப்பெருமாளாக ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
அமைவிடம்
அறியலூரிலிருந்து 6KM தொலைவில் இக்கோயில் உள்ளது. அரியலூரில் இருந்து சிற்றுந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
கோவிலுக்கு செல்ல
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |