தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் உலகம் எங்கும் வாழும் மக்களுக்கு வினை தீர்ப்பவராக இருக்கிறார் முருக பெருமான்.இவரை கலியுக தெய்வம் என்றே சொல்லலாம்.பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார் முருகர்.அப்படியாக முருகனுக்கு பல இடங்களில் கோயில் இருக்கிறது.
முருகன் கோயில்கள் எல்லாமே விஷேசமான பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.அந்த வகையில் நாம் இப்பொழுது வல்லக்கோட்டை முருகனை பற்றி தெரிந்து கொள்வோம். நம்முடைய இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் எங்கிலும் இருக்கும் மக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பற்றி தெரிந்து இருக்கும்.
அந்த அளவிற்கு பிரபலமான ஊர் தான் காஞ்சிபுரம்.காஞ்சிபுரம் மாவட்டம் பட்டு சேலைக்கும் கோயில்களுக்கும் மிகவும் விஷேசம்.இன்னும் சொல்ல போனால் தமிழ் நாட்டில் அதிகம் கோயில் கொண்ட கோயிலாக காஞ்சிபுரம் உள்ளது.
நாம் பார்க்க போகும் விஷேசமான வல்லக்கோட்டை கோயிலும் காஞ்சிபுரத்தில் தான் இருக்கிறது. இக்கோயில் காஞ்சிபுரத்தில் இருந்தும் சென்னையில் இருந்தும் மிக அருகில் உள்ளது.
அதாவது சென்னை கோயம்பேட்டிலிருந்து 40 கிமீ தொலைவில் ஒரகடம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 9 கிமீ தொலைவில் கோவில் உள்ளது.மேலும் தாம்பரம் பகுதியிலிருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது.
கோயிலின் வரலாறு
இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை மிகவும் சிறப்புடன் ஆட்சி செய்து வந்தார் பகீரதன்.அதாவது யாரோ ஒருவர் எதோ ஒரு விஷயத்தில் சிறப்பாக இருக்கின்றோம் என்று புரிந்து கொண்டால் சிலருக்கு தலைக்கணம் ஏறிவிடும்.
அவர்களுக்கு தெரியாது அவர்களின் அழிவு அவர்களிடம் இருந்தே தொடங்குகிறது என்று.அபப்டித்தான் பகீரதனும் தான் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற ஆணவத்திலும் இருந்தான்.அப்பொழுது ஒருமுறை நாரதர் பகீரதனை பார்க்க வருகிறார்.
ஆனால் ஆணவத்தில் தன்னை இழந்த மன்னன் நாரதரை மதிக்க வில்லை.இதனால் மிகவும் சினம் கொண்டார் நாரதர். பிறகு காட்டிற்கு செல்லும் பொழுது நாரதர் வழியில் கோரன் என்னும் அசுரனை சந்திக்கிறார்.அந்த கோரன் பல தேசங்களுக்கு திக் விஜயம் சென்று வந்திருந்தார்.
அவனிடம் நாரதர் இங்கே பார் கோரன் உன்னோட திக் விஜயம் முடியவேண்டும் என்றால் நீ பகீரதன் என்னும் அரசனை வென்ற ஆக வேண்டும்.ஆனால் பகீரதனை வெல்வது அவ்வளவு சுலபம் இல்லை.அவன் மிக சிறப்பாக ஆட்சி செய்யக்கூடியவன் என்று சொல்ல,அதை தொடர்ந்து காரன் பகீரதன் மீது போர் தொடுக்கிறான்.
அந்த போரில் பகீரதன் கோரனிடம் தோற்று விடுகின்றான்.தன்னுடைய ஆட்சி செல்வம் எல்லாம் இழந்து தன்னை உணர்ந்து மிகவும் சோகமா நிலைக்கு சென்று விட்டார் பகீரதன்.அப்பொழுது அவனுக்காக காத்திருந்தார் நாரதர்.
பகீரதன் நாரதரை பார்த்த நொடியில் மிகவும் மன வருந்தியபடி தான் செய்தது மிகப்பெரிய தவறு தன்னை மன்னித்து அருளும்படி கேட்டுக்கொண்டார்.அதற்கு நாரதரும் மனம் இறங்கி பகீரதனுக்கு அவன் இழந்த நாட்டையும் செல்வங்களையும் மீட்டு எடுக்க நடந்ததை சொல்லி துர்வாச முனிவரை சந்திக்கும் படி வழிகாட்டினார்.
பிறகு துர்வாச முனிவரை சந்தித்த பகீரதன் நடந்ததை சொல்ல அதற்கு முனிவர் சில உபதேசங்களை வழங்கினார்.அதன்படி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து, அழியாத பேறு பெற்றான், பகீரதன்.
அப்படியாக துர்வாச முனிவர் சொல்லி விரதம் இருந்து இழந்ததை பெற்ற தலம் தான் இந்த சிறப்புமிகு வல்லக்கோட்டை முருகன் கோயில்.வள்ளி-தெய்வானை உடனாய கோடையாண்டவர் என்ற பெயரோடு, இங்கு இறைவன் அருளாட்சி செய்கிறார்.
இக்கோயில் சுமார் 1200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும் முருகன் 7 அடி முருகன் சிலை தான் மிகப்பெரிய முருகன் சிலை ஆகும்.தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அழியாத செல்வ வளம் நின்ற கோலத்தில் அருளுகிறார் முருகப்பெருமான். இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்கு உள்ளது.
பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற சிறப்பு வாய்ந்தது வெள்ளிக்கிழமை. எனவே இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.ஒருவர் தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் இழந்த விஷயங்கள் அனைத்தும் பெற்று முருகன் அருளால் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வார் என்று சொல்லப்படுகிறது.
மேலும்,வல்லன் என்னும் அசுரன் கோட்டையாக அந்த இருந்தது அவன் தேவர்களை மிகவும் துன்பம் செய்து இன்பம் கண்டு கொண்டு இருந்தான்.அப்பொழுதுதேவர்கள் இவனின் கொடுமை தாங்காமல் முருகப்பெருமானிடம் முறையிட்டு துயர் போக்கும் படி வேண்டிக்கொண்டனர்.
முருகன் தான் நியாய கண்ணீர் துளிகளை பார்க்க பொறுக்காமல் பொங்கி எழுவார் என்பது நாம் அனைவரும் அறிந்தது.அதன்படி வல்லன் என்னும் அசுரனை அழித்து அவனுக்கு முக்தி வழங்கினார்.மேலும் அசுரனின் வேண்டுகோள்படி, இந்த ஊர் ‘வல்லன் கோட்டை’ என்று சிறப்பு பெறும் என்றும் அருளினார்.
அந்த வல்லன்கோட்டையே, தற்போது வல்லக்கோட்டை என்று மருவி உள்ளதாக பெயர் காரணம் சொல்லப்படுகிறது. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன.
பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி கருமாரி, உற்சவர் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி, மாதாந்திர கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியவை வெகு விமரிசையாக நடை பெறும்.
மேலும் அருணகிரிநாதர் இக்கோயில் முருகன் மீது 8 திருப்புகழ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |