தவறு செய்பவர்களை நடுங்க வைக்கும் மடப்புரம் பத்ரகாளி அம்மன்
அம்பாள்களின் மிகவும் சக்தி வாய்ந்த உக்கிரமான தெய்வம் பத்ரகாளி அம்மன்.அந்த வகையில் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கோயில்களில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலை பற்றி கேள்வி பட்டு இருப்போம்.
சிலர் அந்த கோயிலுக்கு சென்று இருப்பார்கள்.சிலருக்கு அந்த கோயில் பற்றிய தகவல் தெரிந்து இருக்காது.அப்படியாக நாம் இப்பொழுது இந்த மடப்புரம் கோயில் எங்கு இருக்கிறது அந்த கோயிலின் விசேஷங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
கோயில் வரலாறு
இக்கோயில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைய பெற்று இருக்கிறது.மிகவும் இயற்கை எழிலில் சூழ வைகை ஆற்றின் பக்கம் அம்பாள் பக்த்ரகளுக்கு அருள்பாலித்து வருகிறார்.மதுரை சுற்றி இருக்கும் தென் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த அம்மன் தாயாக இருந்து அருள் ஆசி வழங்கி வருகிறாள்.
இக்கோயில் சுமார் 500 முதல் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஒரு முறை மதுரையில் இயறக்கை சூழல் மிக மோசமாக ஊர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.மதுரையின் எல்லை எதுவென்று தெரியாத அளவு மதுரை மாநகரமே தண்ணீர் கொண்டு சூழ மதுரை ஆளும் அரசி அம்மா மீனாட்சி அம்மன் மதுரையின் எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்கிறார்.
அதற்கு சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைக்கிறார்.அவ்வாறு வளைக்கும் பொழுது மேற்கே திருவேடகமும்,தெற்கே திருப்பரங்குன்றமும்,வடக்கே திருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்ட இதனால் ஆதிகேசனின் வாயில் இருந்து வெளியான நஞ்சை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள் என்பது வரலாறு.
மேலும் ஒரு முறை சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து கொண்டு வேட்டைக்கு கிளம்பியுள்ளார்.சிறிது தூரம் கடந்த பின்பு அவ்விடம் மிகவும் காடு சூழ்ந்து காணப்பட்டு இருக்கிறது.அதனால் பார்வதி தேவியிடம் சிவபெருமான் இதற்கே மேல் வருவது சரி இல்லை நான் மட்டும் சென்று வருகின்றேன் என்று சொல்ல,அதற்கு பார்வதி தேவி நான் மட்டும் இந்த அடர்ந்த காட்டில் தனியாக இருப்பது என்று கேட்க,உடனே சிவபெருமான் காவல் தெய்வம் ஆன அய்யனாரை அழைத்து பார்வதி தேவிக்கு காவல் தெய்வமாக இருக்கும் படி சொல்லி கிளம்பினார்.
பிறகு பார்வதி தேவி இப்பொழுது நான் இந்த இடத்தில் இருப்பதால் இந்த இடத்திற்கு ஏதேனும் கூடுதல் சிறப்புகள் கொடுக்க வேண்டும் என்று எண்ணி சிவபெருமானிடம் கேட்க அதற்கு சிவபெருமான் இந்த இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்று வரம் கொடுத்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு மடப்புரத்தில் பத்ர காளிவடிவில் தங்கினாள் சக்தி.மேலும் பார்வதி தேய்விக்கு அன்று அய்யனார் காவல் காத்ததால் அவர் அடைக்கலம் காத்த அய்யனாராக அங்கே இருந்து வருகிறார். பார்வதி தேவியின் வடிவமாக காட்சி கொடுக்கும் பத்ரகாளி அம்மனுக்கு தான் இங்கு பிரதான வழிபாடு.
மேலும் அன்று சிவபெருமான் கொடுத்த வரத்தால் மக்கள் இன்றளவும் காசிக்கு சென்று தங்கள் முன்னோர்களுக்கு முக்கிய காரியம் செய்ய முடியாதவர்கள் மடப்புரத்தை ஓட்டி உள்ள திருப்புவனத்துக்கு தங்களுடைய கடமையை செய்கின்றனர்.அந்த அளவிற்கு புனிதமாக பார்க்க படுகிறது அந்த நதி.
கோயிலின் அமைப்பு
பொதுவாகவே பத்ரகாளி அம்பாளை பார்த்தால் நமக்கு அச்சம் என்பதை கடந்து ஒருவித தைரியம் பிறக்கும்.அதாவது அதர்மங்களை எதிர்த்து கேள்வி கேட்க தாய் வருவாள் என்ற நம்பிக்கையை கொடுக்கும் விதமாக அம்பாளின் உருவம் காட்சி கொடுக்கும்.
அதே போல் மடப்புரத்திலும் பத்ரகாளி அம்மன் வெட்ட வெளியில் மிகவும் அக்ரிஷமாக அம்பாள் காட்சி கொடுக்கிறாள். காளியின் இரண்டு பக்கமும் பிரமாண்டமாக இரண்டு பூதங்களுடன் பதின்மூன்றடி உயரம் கொண்ட காளியின் தலைக்குமேல் ராட்சதக் குதிரை ஒன்று தாவியபடி நிற்கிறது.அந்த குதிரைக்கு பின்னால் ஒரு கதையும் இருக்கிறது.
பத்ரகாளி அம்மனின் தீவிர பக்தன் ஒருவர் காளியிடம் தேவியிடம் நான் எப்பொழுதும் உன்னுடனே இருக்கும்படியான மனம் உருகி வரம் கொடு தாயே என்று கேட்க.அவரது பக்தியைக்கு இணங்க காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக்கொண்டாராம்.
இங்கு அம்பாள் தன்னை தேடி வரும் பக்தர்களை காப்பதற்கு வலதுகையில் திரிசூலமும் அதர்மத்தால் தலைதூக்கி ஆடியவர்களை அழித்த பிறகு மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.
வழிபாடு
பொதுவாக காலை என்றாலே தவறு செய்பவர்களுக்கு இரு வித பயம் ஏற்படும்.அப்படியாக இந்த மடப்புரத்து பத்ரகாளி துஷ்டர்களுக்கு மிகவும் ஆபத்தானவளாக திகழ்கிறாள்.ஆதலால் அந்த ஊர் வட்டாரத்தில் இருக்கும் மக்கள் தங்கள் நியாயம் கிடைக்க இவளை மிகவும் நம்புகிறார்கள்.
மேலும் எல்லா கோயில்களை போலவும் நாம் மனதில் ஏதேனும் நினைத்து விளக்கு ஏற்றினால் அது நிச்சயம் நடப்பது போல,இக்கோயிலில் காளி தேவிக்கு எதிரே ஒரு மண்டபம் ஒன்று உள்ளது அதி பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறார்கள்.
இவ்வாறு செய்வதால் காளி தேவி அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவாள் என்பது நம்பிக்கை.அடுத்தபடியாக காளிக்கு மிகவும் பிடித்தமான எலுமிச்சை மாலை சாத்தி வழிபாடு செய்வது சிறப்பு.காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்களும்.
குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் பக்தர்கள் அணிவித்து தன்னுடைய பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
நமக்கு யாரால் ஏதேனும் பிரச்சனை என்றால் நிதி நியாயம் வேண்டும் என்று காவல் நிலையம் கோர்ட்க்கு செல்வோம் ஆனால் மதுரை சுற்றி உள்ள மக்கள் அம்பாளை தேடி வருகின்றனர்.அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் ஒரே இடம் பத்ரகாளியாக இருக்கிறாள்.
மேலும் காளிக்கு வலப்புறத்தில் சின்னதாக ஒரு திண்டு ஒன்று இருக்கிறது.அதனை சத்தியக்கல் என்று மக்கள் அழைக்கின்றனர்.இரண்டு நபர்கள் இடையே ஏதேனும் கருத்துவேறுபாடு அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்றால் அந்த திண்டில் சூடம் ஏற்றி நான் சொல்லுவது உண்மை என்று சத்தியம் செய்வார்கள்.
இதில் யாராவது பொய் சத்தியம் செய்தால் அவர்களை காளி தேவி முப்பது நாட்களுக்குள் அல்லது காளி தேவியின் எல்லையை தாண்டும் முன் கேள்வி கேட்பாள் என்று மிக தீவிரமாக மக்கள் நம்புகின்றனர். பின்னதாக இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது.
காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக்கிறார்கள்.
அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க முடியாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு,மனம் உருகி அவர்களின் அநியாயத்தை நீ தான் தட்டி கேட்க வேண்டுமே என்று மனம் உருகி வேண்டுகிறார்கள்.
அவர்களின் கண்ணீர் நியாயம் என்றால் உடனே அவர்களின் பக்திக்கு முன் வந்து அம்பாள் கேள்வி கேட்பதாக சொல்லப்படுகிறது. மேலும் காளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று இருக்கிறது.அந்த வெப்ப மரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.
அதாவது நீண்ட நாள் திருமண வரன் அமையாமல் இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து அந்த வெப்ப மரத்தில் மஞ்சள் தாலியை கட்டி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும் என்று சொல்கின்றனர்.
பிறகு நீண்ட நாள் குழந்தைக்காக காத்திருக்கும் பெண்களும் இங்கு இந்த வெப்ப மரத்தில் தங்களுடைய முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட அவர்களுக்கு அம்பாளின் அருள் ஆசியால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |