இராமாயண காலத்திற்கும் முன்பு தோன்றிய மிகவும் பழமை வாய்ந்த கோயில்
உலகின் மிக பழமையான சிவன் கோயில் என்ற பெருமையை கொண்டது ராமநாதபுரத்தில் அமைய பெற்ற இந்த உத்திரகோசை மங்கை என்னும் சிவன் கோயில்.உத்தரம் என்றால் உபதேசம்,கோசம் என்றால் ரகசியம்,மங்கை என்பது பார்வதி தேவியை குறிக்கிறது.
அதாவது பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம் என்பதால் இக்கோயில் உத்தரகோசமங்கை என்னும் சிறப்பு பெயர் பெற்றதாக வரலாறு. இக்கோயில் மிகவும் பழமையானது என்பதற்கு சான்றாக கோயில் புராண வரலாற்றிலும் மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களும் இராவணனின் மனைவி மண்டோதரியின் பொறிக்க பட்டது குறிப்பிட தக்கது.
இக்கோயிலின் இறைவர் திருப்பெயர் மங்களேசுவரர், மங்களநாதர், காட்சிகொடுத்தநாயகர், பிரளயாகேசுவரர் என்றும் இறைவியார் திருப்பெயர் மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகும்.
வரலாறு
தமிழ் நாட்டில் இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் மிகவும் பழமையான பிரபலமான கோயில் ஆகும்.இந்த கோயிலுக்கு பலரும் பல இடங்களில் வந்து இறைவனை தரிசனம் செய்கின்றனர்.
இக்கோயிலை முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு அவை ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்க பட்டதாக சொல்லப்படுகிறது.
பிறகு அன்று முதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.இலங்கேசுவரன் இராவணன் இங்கே வந்து வணங்கிச் சென்றிருக்கிறான்.இங்குள்ள இராவணன் மனைவி மண்டோதரிக்கு மங்களேச்சுவரர் அருள்புரிந்து இருக்கிறார்.
அதாவது மண்டோதரி நான் திருமணம் செய்து கொண்டால் உலகிலேயே மிகசிறந்த சிவபக்தனை தான் திருமணம் செய்வேன் என்று நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தாள் .பின்பு அவர் இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.
அதன்பிறகே ராவணனை கரம் பிடித்ததாக வரலாறு.மேலும் ராவணன் மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.இங்குள்ள அர்ச்சகர் கூற்றுப் படி இராவணனுக்கும், மண்டோதரிக்கும் நடந்த திருமணமே மங்களேச்சுவரர் சன்னதியில் தான் நடந்ததாம்.
மங்களேச்சுவரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப் படுகிறது.இராவணனைப் போல சிவ பக்தனைப் பார்க்கவே முடியாது. இந்த ஊர் மங்களேசுவரராகிய சிவ பெருமான் இராவணன் கையில் பால சிவனாகத் தவழ்ந்த கதையும் இருக்கிறது.
ஆக இராவணன் காலத்திலையே இக்கோயில் இருந்துள்ளது குறிப்பிட தக்கது. இக்கோயில் பழமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.அதாவது மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. (கிமு 3100) அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது.
அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.அதற்கும் முந்தியது இராமாயணக் காலம்.அப்பொழுதும் இக்கோயில் இருந்ததற்கு இராவணன் சான்றாக இருக்கிறார்.மேலும் திருவிளையாடல் புராணத்தில் வலைவீசி விளையாண்ட படலம் இக்கோயிலில் தான் நடந்து உள்ளது.
முன்பு இக்கோயில் முன்பு வாசலில் தான் கடல் இருந்து இருக்கிறது.நாளடைவில் அந்த கடல் ஆனது பின்வாங்கி ஏர்வாடிக்கு சென்று விட்டது. இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.
அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி.இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன். அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டியும் பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார்.
ஒலியில் இருந்து பாதுகாக்கப்படும் மரகத நடராஜர் சிலை
இங்கு இருக்கும் நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆன சிறப்புகள் கொண்டது. அந்த நடராஜர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர். ஒளி வெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும்.
மேலும் இந்த நடராஜர் சிலையில் என்ன விஷேசம் என்றால் நம் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் போல் அந்த சிலையில் இருப்பதை காணமுடியும்.ஆக இந்த சிலையானது உலக அதிசயத்தில் ஒன்றாக இருக்கிறது.
இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது.எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை. எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
கோவில் அமைப்பு மற்றும் பூஜைகள்
ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.
இடதுபுறம் உள்ள கோபுரம். மொட்டையாக காணப்படுகிறது. முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.
பொதுவாக சிவாலயங்களில் இறைவனுக்கு உகந்தது இல்லை என்று சில பூக்களை தவிர்த்து பூஜை செய்வார்கள். அதுதான் தாழம் பூ.அப்படியாக சிவபெருமானுக்கு சுட்டமுடியாமல் உரிமையை இழந்த தாழம் பூ இக்கோயிலில் மட்டும் தாழம் பூ சாத்தும் வழக்கம் அற்றுப் போகமல் இன்றும் தொடர்கிறது.
மேலும் இங்குள்ள நடராசருக்கு வருடம் ஒரு முறை மட்டுமே இங்கு அபிஷேகம் செய்யப்படும்.அன்று மட்டும் அவரைக்களைந்த திருக் கோலத்தில் தரிசிக்க முடியும்.அந்த நாள் தான் மார்கழி திங்கள் அன்று வரும் திருவாதிரை.
அன்று மட்டும் அவர் சந்தனக்காப்பிட்ட கோலத்தில் காட்சி கொடுக்கிறார். மார்கழி மாத திருவாதிரைக்கு முதல் நாள் பழைய சந்தனம் களையப் படும்.பிறகு 32 வகை அபிஷேகங்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப் படும்.
ஆண்டு முழுவதும் ஆடல் வல்லான் திரு மேனியில் பூசப்பட்டு இருந்த சந்தனம் களையப் பட்ட பின் அதை பெற்று கொள்ள பக்தர்களிடம் கடும் போட்டி நிலவும்.
கோயிலின் விசேஷங்கள்
இக்கோயிலில் ஒரு விஷேச தூண் ஒன்று உள்ளது.இது ஒரு தூண் மட்டுமல்ல,அகலமாக வாய் திறந்த சிம்ம யாளியையும்,அதன் உள்ளே ஒரு செதுக்கப்பட்ட கல் பந்தை நாம் பார்க்க முடியும்.அந்த கல் பந்தை எவ்வளவு முயற்சி செய்தலும் வெளியில் எடுக்க முடியாது.இதில் மர்மம் என்னவென்றால்,அதை வெளியே எடுக்க முடியவில்லை என்றால் அதை உள்ளே எப்படி வைத்திருப்பார்கள் என்பது தான்.
மேலும் மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.குருந்த மரத்தடியில் சிவபெருமான், மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த காட்சி. உள்ளங்கை அளவில் உள்ள அற்புதமான சிற்பம் ஒன்று இருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |