சனி பகவான் பிடியில் சிக்கிய 3 ராசிகள்... சவாலை மீறி ஜெயிப்பது எப்படி?
ஜோதிட சாஸ்திரத்தில் கர்ம காரகன் என்று அழைக்கக்கூடிய சனி பகவான் ஒரு மனிதனுடைய நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை வழங்குகிறார். அதனால் அவரை நீதிமான் என்றும் அழைக்கிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறினார். இந்த பெயர்ச்சியானது சில ராசிகளுக்கு முன்னேற்றத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் பொறுமையாகவும் எதையும் நிதானமாகவும் செய்ய வேண்டிய ஒரு நிலையை கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில், சனி பகவானுடைய பிடியில் சிக்கிய ராசிகள் யார்? அவர் கொடுக்கக்கூடிய கஷ்ட காலங்களில் இருந்து எப்படி தப்பிப்பது என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு விரைய சனி காலம் தொடங்கி இருக்கிறது. இதனால் இவர்கள் வருமானத்தை விட அதிக அளவில் செய்யக்கூடிய நிலையை பெறுவார்கள்.
அதனால் இவர்கள் தேவையில்லாத பயணத்தை தவிர்ப்பதும், வீண் செலவுகளையும் குறைத்தால் நன்மை உண்டாகும். இந்த காலகட்டங்களில் இவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் மிகவும் தாமதமாகவும் கடினமாகவும் கிடைக்கும் என்பதால் நிதானம் அவசியம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் சனி அமர்ந்து சுகபோகங்களை குறைத்து இவர்களுடைய வாழ்க்கையில் பொறுப்புகளை அதிகரிக்கிறார். வீடு மற்றும் குடும்ப வாழ்க்கையில் சிறிய சவால்களை சந்திக்க கூடும்.
அதனால் எதையும் பொறுமையுடன் கையாள்வது அவசியம். சொத்து நிலம் வாகனம் வாங்கக்கூடிய திட்டம் நிறைவேறும். உங்களிடம் இருக்கக்கூடிய ஆவணங்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும். சட்டபூர்வமான ஆலோசனைகளை பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இதனால் இவர்களுக்கு வாழ்க்கை துணை மற்றும் தொழில் கூட்டாளிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பிறரை நம்பி எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். மன அழுத்தம் குறைய நடை பயிற்சி மேற்கொண்டால் நன்மை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |