2025 புரட்டாசி மாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
ஜோதிடத்தில் சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் அவருடைய ராசியை மாற்றிக் கொண்டு இருப்பார். மேலும் சூரியன் மாறும் ராசியின் அடிப்படையில் தான் தமிழ் மாதம் மற்றும் தமிழ் ஆண்டு பிறப்பை கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அந்த வகையில் தமிழ் மாதத்தின் ஆறாவது மாதமான புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் பெயர்ச்சியாகிறார்.
அவர் இதுவரை அவருடைய சொந்த ராசியான சிம்ம ராசிகள் ஆட்சியாக இருந்து தற்போது புதன் பகவான் உடைய வீடான கன்னி ராசியில் பெயர்ச்சியாகிறார். கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்று இருந்தாலும் வக்கிரமாகி அமைந்துள்ளார். இந்த நிலையில் புரட்டாசி மாதத்தில் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இந்த புரட்டாசி மாதம் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் வரும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் போன்ற நிகழ்வுகள் நடக்கும். இந்த மாதத்தில் இவர்கள் தங்களுடைய எண் அலைகளில் மிகவும் கவனம் கொண்டு பிறரிடம் பழகுவது அவசியமாகும். வீண் பிரச்சனைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். யாரிடம் பேசினாலும் மிக கவனமாக பேச வேண்டும். முடிந்தவரை வெளியூர் பயணங்கள் செல்வதை இவர்கள் தவிர்ப்பது நன்மை தரும்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த புரட்டாசி மாதம் அதிக செலவுகள் ஏற்படக்கூடிய மாதமாகும். அதாவது ஒன்றன்பின் ஒன்றாக இவர்கள் செலவுகளை சந்தித்து கொண்டு இருப்பார்கள். இவர்கள் முடிந்தவரை இந்த காலகட்டத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லதாகும். மனதில் அமைதி தேவை.
மீனம்:
மீன ராசியினருக்கு இந்த புரட்டாசி மாதம் திருமணம் மற்றும் தொழில் ரீதியாக சில பிரச்சனைகள் உண்டாகும். வீண் வாக்குவாதத்தை குடும்பத்தில் செய்யாதீர்கள். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் வரலாம். எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆராய்ந்து முபிறகு செய்வது நன்மை தரும். உங்களுடைய நட்புகளிடம் மிகவும் கவனமாக இருங்கள். பொருளாதார ரீதியாக சில இழப்புகளை நீங்கள் சந்திக்கலாம். பெருமாளை பற்றி கொண்டால் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக அமையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |