இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தான் அதிக அளவிலான கண்திருஷ்டி பாதிக்குமாம்
கண் திருஷ்டி என்பது நிச்சயம் நம்மை மிகப்பெரிய ஒரு ஆபத்தில் சிக்க வைக்கக்கூடிய ஒரு எதிர்மறை ஆற்றல் தான். இந்த கண்திருஷ்டி ஆனது இல்லை என்று நிச்சயம் நாம் ஒருபோதும் சொல்லிவிட முடியாது.
அப்படியாக ஒரு சிலர் தங்களுடைய எதிர்கால திட்டங்களை யார் இடமாவது ஒரு சிறிய அளவில் சொன்னால் கூட அந்த திட்டங்களில் ஏதேனும் தடைகளும் தடங்களும் வந்துவிடும். இதற்கு காரணம் அந்த நபர்கள் எளிதாக கண்திருஷ்டியால் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் தான். அந்த வகையில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கண்திருஷ்டி ஆனது அதிக அளவில் பாதிப்பை உண்டு செய்யும் என்பதை பற்றி பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான். இவர்கள் எப்பொழுதும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் மிகுந்த உழைப்பை தொழிலில் போடக்கூடியவர்கள். இவர்களுடைய இந்த அற்புதமான ஆற்றலே பலரையும் பொறாமைப்பட செய்து விடும். இந்த பொறாமை காரணமாக இவர்கள் நிறைய பாதிப்புகளை சந்திக்கிறார்கள். அதிலும் கண்திருஷ்டி இவர்கள் வாழ்கையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்கிறது.
தனுசு:
குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற தனுசு ராசியினர் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தை முன்னதாகவே கணித்து செல்லக்கூடிய ஒரு அற்புத ஆற்றல் இவர்களிடத்தில் இருக்கும். இவர்களுடைய ஞானம் தான் பிறரை இவர்கள் மீது பொறாமைக்கு உட்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் எளிமையாக இருப்பதால் இவர்கள் மீது அதிக அளவிலான கண்திருஷ்டி ஆனது ஒரு பாதிப்பை கொடுத்து விடுகிறது. அதனால் முடிந்த வரை இவர்கள் ஒரு விஷயம் முடியும் வரை யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான். இவர்கள் எதையும் சம நிலையாக பார்த்து தங்களுடைய வாழ்க்கையில் செய்யக்கூடியவர்கள். இவர்களுடைய இந்த நிலை பிறருக்கு ஒரு பொறாமை குணத்தை உண்டு செய்துவிடும். இவர் மட்டும் எப்படி இவ்வளவு சரியாக வாழ்கிறார்கள் என்று ஒரு எண்ணம் எல்லோருக்கும் பலவிதமான ஒரு தீய எண்ணத்தை அவர்கள் மனதில் உருவாக்கி அதுவே இவர்களுக்கு ஒரு கண் திருஷ்டியாக மாறிவிடுகிறது. மேலும் இவர்கள் முடிந்தவரை இவர்களை அதிக அளவில் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தால் மட்டுமே இவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உயரத்தை அடையலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |