சித்தரை மாதம் எந்த ராசிகளுக்கு வெற்றிகரமாக அமைய போகிறது
ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரியன் பகவான். சூரியன் ஒரு மாத காலம் ஒரு ராசியில் பயணிக்கிறார். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக இருக்க கூடியவர். ஒவ்வொரு முறை சூரியன் ராசி மாறும் போதும், தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
2025 ஏப்ரல் 14 அன்று சூரியன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். சித்திரை மாதம் தமிழ் வருட பிறப்பின் முதல் மாதம் ஆகும். இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு விதமான நன்மைகளும் வெற்றிகளும் கிடைக்கப்போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சித்திரை மாதம் தொட்ட காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும் மாதம் ஆகும். நிதி நிலைமையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும். போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு சூரியன் செல்வதால் வேலையில் சிறந்து விளங்குவார்கள். தொழில் ரீதியாக நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் விலகும்.
கடகம்:
கடக ராசிக்கு 10ஆம் வீட்டிற்கு சூரியன் செல்வதால் இவர்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும். செல்வாக்கு உயரும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். புதிய திட்டங்கள் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |