மறையும் சுக்கிரன்: இந்த 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் தான் ஒருவருடைய வாழ்க்கையில் சந்திக்கும் சுகபோகங்களுக்கு காரணமாக இருக்கிறார். அப்படியாக சுக்கிர பகவான் 2025 மார்ச் மாதத்தில் அஸ்தமித்து மீண்டும் உதயமானர். மேலும் அவர் தற்பொழுது டிசம்பர் 11 2025 அன்று காலை 6:35 மணிக்கு அஸ்தமிக்க இருக்கிறார்.
பிறகு அவர் 26 பிப்ரவரி 1 தேதி அன்று காலை 6. 27 மணி வரை அவர் அஸ்தமிக்க உள்ளார். இந்த நிகழ்வு 52 நாட்களாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சில நபர்களுக்கு அவர்கள் குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதார நிலைகளிலும், வாழ்க்கை துணையிடமும் சில தடைகளை சந்திக்கக்கூடும். அப்படியாக சுக்கிர பகவானின் அஸ்தமனத்தால் எந்த 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசி பொறுத்தவரை இந்த 52 நாட்களும் அவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகளை அவர்கள் சந்திக்கும் நிலை உண்டாகும். திருமண வாழ்க்கையில் பிரிவு, மனைவியை விட்டு தூரமாக வேலை பார்க்கும் நிலை, குழந்தைகளுடன் சில கருத்து வேறுபாடுகள் போன்ற நிலைகள் உருவாகலாம். இவர்கள் இந்த கால கட்டத்தில் எதையும் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசி பொருத்தவரை இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வாழ்க்கை துணையிடம் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். இவர்கள் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுக்கும் பொழுதும் கவனம் கொள்ள வேண்டும். அதாவது ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி அவர்கள் இந்த காலகட்டத்தில் அமைதியை கடைப்பிடிப்பது அவசியம் ஆகும். இவர்கள் இந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடன் அமைதியாக செல்வதால் மட்டுமே நன்மை உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இந்த காலகட்டத்தில் இவர்கள் குடும்பத்தில் சில பிரிவுகளை சந்திப்பார்கள். சிலர் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ள நேரலாம். இன்னும் சிலருக்கு வேலையில் சில சிக்கல்கள் வரலாம். பண பிரச்சனையை சிலர் சந்திக்கலாம். சகோதரர் வழி உறவால் சிலருக்கு சங்கடங்கள் உருவாகும். பொருளாதாரத்தை பொறுத்த வரையில் சிலருக்கு பின்னடைவு சந்திக்கக்கூடும்.இவர்கள் இந்த 52 நாட்களும் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்காமல் நிதானத்தை கடைபிடிப்பது மிக மிக அவசியம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







