இந்த 3 ராசிக்காரர்கள் படிப்பில் நம்பர் ஒன் ஆக இருப்பார்களாம்.. உங்கள் ராசி உள்ளதா?
படிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்த கல்வி என்பது அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. எளிதாக கல்வி கிடைத்தவர்கள் அதை நன்றாக பயன்படுத்துவதும் இல்லை.
ஆனால், ஒரு சிலருக்கு படிப்பின் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும். எப்பொழுதும் படித்துக் கொண்டே இருப்பார்கள். அதைவிட முக்கியமாக இவர்கள் தான் அவர்களுடைய வகுப்பில் முதன்மை வகிக்கக்கூடிய மாணவர்களாகவும் இருப்பார்கள். அப்படியாக எந்த ராசி அமைப்பு கொண்டவர்கள் படிப்பில் மிகச்சிறந்த விளங்குவார்கள் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். மிதுன ராசியினர் எவ்வளவு விளையாட்டு மனப்பான்மையில் இருந்தாலும் படிப்பு இன்று வந்து விட்டால் இவர்கள் முழு மதிப்பெண் பெறக்கூடிய மாணவராக இருப்பார்கள். படிப்பு மட்டுமே இவர்களை உயர்த்தும் என்று முழுமையாக நம்ப கூடியவர்கள். படிப்பிற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். மேலும், ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடியவர்கள்.
கன்னி:
கன்னி ராசியின் அதிபதியும் புதன் பகவான் தான் ஆவார். இவர்களுக்கும் படிப்பு என்பது இயல்பாகவே நன்றாக வரக்கூடிய ஒன்று. கன்னி ராசியினர் இயற்கையாகவே மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு விஷயத்தை எப்பொழுதும் தேடிப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே போல் இவர்களிடத்தில் எல்லாத் துறை தொடர்பான அறிவும் பார்க்க முடியும். இவர்கள் பேச்சுத் திறமையிலும் சிறந்து விளங்குவார்கள்.
தனுசு:
தனுசு ராசியை ஆளக்கூடிய கிரகம் குரு பகவான். தனுசு ராசி பொருத்தவரை இவர்கள் மிகுந்த ஒழுக்கமாகவும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய மாணவராகவும் இருப்பார்கள். தனுசு ராசியினர் பொறுத்தவரை தாங்களே எல்லா விஷயங்களிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் ஆதலால் இவர்கள் எதையும் கற்று சிறந்து விளங்க வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். மேலும் தனுசு ராசியினர் கல்வியில் மிக உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய அமைப்பை பெற்றிருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |