உலகை ஆட்சி செய்வதற்கென்றே பிறந்த 3 முக்கிய ராசிகள்
ஒரு மனிதனுக்கு தலைமைத்துவ பண்பு என்பது நிச்சயம் அவன் வளர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு விஷயமாக இருந்தாலும் பிறவியிலே அந்த குணம் அவனுக்கு இயற்கையாக இருந்தால் மட்டுமே அவன் ஒரு மிகச் சிறந்த ஆளுமை பண்புடன் விளங்க முடியும்.
அந்த வகையில்ஒரு சிலர் ராசி அமைப்புகள் படி இயற்கையாகவே மிகச்சிறந்த ஆளுமை பண்பு கொண்டிருப்பார்கள். அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் எவருக்கும் கட்டுப்படாத ஆளுமை பண்பு கொண்டவர்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவான் தான் ஒரு மனிதனுடைய கோபம், வீரம், வலிமை ஆகியவற்றுக்கு காரணியாக இருக்கிறார். ஆக மேஷ ராசியை பொறுத்தவரை இவர்கள் யாருக்கும் அடிபணியாத ஒரு அற்புதமான ஆற்றலை பெற்றிருப்பார்கள்.
அதாவது இவர்களை அன்பால் நீங்கள் வேலை வாங்கி விடலாமே தவிர்த்து அதிகாரத்தால் இவர்களை நீங்கள் தன் வசப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது உங்களுக்கு தான் ஆபத்தாக முடியும். அதோடு மேஷ ராசியினர் வேலை செய்யும் இடங்களிலும் இவர்கள்தான் முக்கிய பொறுப்புகளிலும் மேலதிகாரிகளாகவும் இருப்பார்கள்.
மகரம்:
மகர ராசியினருடைய அதிபதி சனி பகவான். இவர்கள் எல்லா விஷயங்களையும் தானே கற்றுத் தெளிந்து முன்னேற வேண்டும் என்ற ஒரு அற்புதமான முனைப்போடு செயல்பட கூடியவர்கள். இவர்கள் இயற்கையாகவே ஒருவரை அன்போடு வழி நடத்துவதில் மிகச் சிறந்தவர்கள்.
அது மட்டும் அல்லாமல் எந்த நபரிடம் எப்படி பேசினால் நமக்கு அந்த காரியம் நடக்கும் என்று தெளிவாகவும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க கூடியவர்கள் . இவர்களின் ஆளுமை பண்பு என்பது அதிகாரம் மிக்கதாகவோ அல்லது குரலை உசத்தி ஒருவரை ஆட்கொள்வதாக இருக்காது. இவர்களுடைய இருப்பு அந்த நபரை அவருக்கு தன்வசம் செய்து விடும்.
கும்பம்:
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் தான். கும்ப ராசியை பொறுத்தவரை இவர்களுக்கு தாங்கள் ஆளுமை பண்புடன் இருக்க வேண்டும். எல்லாரும் தனக்கு மரியாதை கொடுத்து தனக்கு கீழே வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இவர்களுக்கு இருக்காது. இவர்கள் ஒருவரை வழி நடத்தக்கூடிய ஒரு ஆசிரியராகவே இருப்பார்கள்.
யாரிடமும் தான் அதிகாரி, தான் உனக்கு தலைவன் என்ற ஒரு வெளிப்பாடே இவர்கள் எங்கேயும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எல்லோரிடமும் மிக எளிதாக சகஜமாக பழகி வேலை பார்த்து பிறரிடம் இருந்தும் தனக்கு தேவையானவை எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான தலைமைத்துவ பண்பை கொண்டவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |