வைகுண்ட ஏகாதசி தினத்தன்று செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை
இறை வழிபாடு என்பது இன்றைய நாள் நம்முடைய பொழுது துன்பம் இல்லாத நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்வது அல்ல. இறைவழிபாடு என்பது நம்முடைய ஆன்மாவுக்கு விடுதலை அளிக்க கூடியதாகவும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அறியாமை என்னும் இருள் நீங்கி இறைவனுடைய பாதத்தில் சரணடைந்து வாழ்வதற்கான ஒரு வழியை நமக்கு ஏற்படுத்தக்கூடியது ஆகும்.
அப்படியாக, தேவலோகத்தில் வாழுகின்ற தேவர்களுக்கு தை மாத முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாக இருக்கிறது. அதுவே ஆடியிலிருந்து மார்கழி வரை இரவாக இருக்கிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும் இரவை தட்சிணாயணம் என்றும் அழைக்கிறார்கள்.
அந்த வகையில் மார்கழி மாதம் என்பது தேவலோகத்தில் விடியற்காலை ஆக இருக்கும். அந்த நேரத்தை தான் பிரம்ம முகூர்த்தம் என்கின்றோம். மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுண்ட வாசல்கள் திறந்தே இருக்கும்.
அதன் வழியாக பகவான் வெளியே வந்து காட்சி தரும் நாள் தான் வைகுண்ட ஏகாதசி ஆகும். அதோடு ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பார்கள். அதாவது வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடு செய்தால் நம்முடைய ஆன்மாவில் ஒட்டி இருக்கக்கூடிய இருள் எனும் அறியாமை விலகும்.
அதுமட்டுமல்லாமல் காலசூழ்நிலையால் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகி நமக்கு மோட்சம் கிடைக்கும். இதுதான் வைகுண்ட ஏகாதசி சிறப்பு இன்று நாம் எல்லோரும் அறிந்திருப்போம். ஆனால் அதையும் தாண்டி வைகுண்ட ஏகாதசி விரதத்தில் நிறைய மகிமைகள் இருக்கின்றது. அதை பற்றி பார்ப்போம்.
வைகுண்ட ஏகாதசி மகிமைகள்:
விஷ்ணு வழிபாட்டில் துளசி இல்லாத வழிபாடே இல்லை. அப்படியாக பூஜைக்காக நாம் துளசியை முதல் நாளில் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி விரதத்தின் பொழுது எக்காரணத்தை கொண்டும் துளசி இலையை நாம் பறித்தல் கூடாது.
வைகுண்ட ஏகாதசி தினத்தில் ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். மறுநாள் வைகுண்ட ஏகாதசி தினம் அன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருக்கலாம் முடிந்தவர்கள் ஒருவேளை சாப்பிட்டு கொள்ளலாம்.

இரவு முழுவதும் கண்விழித்து பெருமாளின் பெருமையை பேசுவது பெருமாளின் பாடல்களை பாடுவதும் பாராயணம் செய்வதும் மந்திரங்களை நாம் 108 ,1008 என்று எழுதுவதும் நமக்கு பல்வேறு வகையான நன்மைகளை பெற்றுக் கொடுக்கும்.
அதோடு வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் வரக்கூடிய துவாதசி அன்றை காலையில் 21 வகைகளில் காய்கறிகள் உணவில் இடம்பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை நெல்லிக்காய்ம், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும். அதாவது துவாதிசியில் அதிகாலையில் உணவு எடுத்துக்கொண்ட பிறகு பகலில் ஒரு பொழுதும் மறந்து தூங்குதல் கூடாது.
வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்:
ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானிடம் விரதத்தில் எது மிகச் சிறந்த விரதம் என்ன? கேட்கிறார். அதற்கு சிவ பெருமான், தேவி! விரதங்களில் மிகச்சிறந்த விரதம் ஏகாதசி விரதம் என்று அவர் சொல்கிறார்.
இந்த விரதம் பாவங்களை போக்கக்கூடிய விரதமாகும் அதோடு ஒருவர் அஸ்வ மேதை யாகம் செய்த முழு பலனை பெறுவார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுஷ்டித்து விஷ்ணுவின் அருளை பெறுவதால் விரதத்திற்கு வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்ற சிறப்பு பெயர் உண்டு.
அதோடு இன்றைய நாளில் உணவு உண்ணாமல் விரதமிருந்து வழிபாடு செய்பவர்களுக்கு பாவம் விலகி முத்தி கிடைக்கும் என்று சிவபெருமான் சொல்லி இருக்கிறார். ஆக இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும் இந்த நாளில் மகிமையை. சொர்க்கவாசல்: வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கும் விழா மிகச் சிறப்பாக நடத்தப்படும்.

இந்த விழா அதிகாலை வேளையில் நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனுக்கு நடைபெறும் இந்த சிறப்பு வழிபாடுகளை கண்டு களித்து சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
இந்த வழிபாடுகளை நாம் மேற்கொள்வதின் மூலம் எப்பேர்பட்ட தடைகளும் நீங்கி நம் வாழ்க்கையில் சகல செல்வங்களும் கிடைக்கும். அதோடு பகைவர்கள் தொல்லை விலகும், ஆன்மாவிற்கு மோட்சம் கிடைக்கும்.
அதாவது உங்களுடைய அறியாமை என்னும் இருளில் இருந்து விலகி பகவானை முழுமையாக சரணடைந்து வழிபாடு செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் இந்த வைகுண்ட ஏகாதசி தினத்தை தவற விடாமல் வழிபாடு செய்து இறை நாமத்தை தொடர்ந்து பாராயணம் செய்தால் அதற்கான பலன் உங்களுக்கு வாழ்வில் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |