சனியால் இனி பயம் வேண்டாம்.. இந்த ஒரு பரிகாரம் உங்களை காப்பாற்றும்
ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒரு அமைப்பாக தசா புத்திகள் உள்ளது. அதாவது இந்த தசா புத்திகள் வைத்து தான் ஒருவருடைய திருமணம், வாழ்க்கையில் தடை தாமதம், வெற்றி எல்லாம் நடக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு தசா புத்தி நடக்கும் பொழுதும் ஒவ்வொரு விதமான பலனைக் நாம் பெறுகின்றோம்.
அதில் மிகவும் அதிக பாதிப்பை கொடுக்கக்கூடிய தசாபுத்தியாக சனி திசை உள்ளது. அந்த காலகட்டங்களில் நிறைய பாதிப்புகளை நாம் சந்திக்க நேரும். இவ்வாறாகத்தான் சூரியன் சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், ராகு கேது ஆகிய தசாபுத்திகள் நடக்கும் பொழுதும் அவ்வப்போது நன்மை தீமைகளை நாம் சந்திக்கும் நிலை வரும்.
அப்படியாக, தசா புத்திகள் நடக்கும் பொழுது நாம் கிரகங்கள் தரக்கூடிய பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு சில பரிகாரங்களும் வழிபாடும் செய்தால் நிச்சயம் அதற்குரிய பலன் பெறலாம்.

வழிபாடு:
தினமும் காலையில் எழுந்து கலியுக வரதனாக போற்றப்படும் முருகப் பெருமானை சரணடைந்து வழிபாடு செய்தால் கிரகங்களுடைய பாதிப்புகள் குறையும். அதாவது முருகப்பெருமானை போற்றி வழிபாடு செய்ய ஒன்பது கிரகங்களும் நம்மை பாதுகாத்து தீராத துன்பம் நடக்க நேர்ந்தாலும் அதிலிருந்து நம்மை காப்பாற்றி அருள்வார்கள்.
அந்த வகையில் ஒவ்வொரு தசா புத்தி நடப்பவர்களும் அவர்கள் அந்த காலகட்டங்களில் பாட வேண்டிய முருகப்பெருமான் மந்திரங்களை பற்றி பார்ப்போம்.
மந்திரங்கள்:
கீழ்கண்ட சண்முக நவக்கிரக பாமாலை மந்திரங்கள் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் அருளப்பட்டது. இதை படித்து வர நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும்.
சூரிய திசை:
ஆறிரு கரங்கள் கொண்டு
அடியார்க்கு அருள் வழங்கி
சீரிய வாழ்வு நல்கும்
செந்திலே பழநி வேலா!
சூரிய திசையிலே உன்னை
துதிட்டேன் காக்க வாராய்!
காரியம் யாவினுக்கும்
கை கொடுத்து உதவுவாயே!
சந்திர திசை:
இந்திரன் முதலானோர்கள்
இளமையாய் விளங்கும் உந்தன்
மந்திரம் சொல்லி நல்ல
மகத்துவம் பெற்றது உண்டு!
சந்திர திசையில் உன்னை
சந்தித்துப் போற்றுகின்றேன்!
வந்திடும் செல்வமெல்லாம்
வரத்தினால் வழங்குவாயே!

செவ்வாய் திசை:
ஒளவைக்கு நெல்லி தந்தாய்!
அருணகிரி நாதருக்கும்
திவ்வியக் காட்டி தந்தாய்
திருவருள் கொடுப்பதற்கே
செவ்வாயின் திசையில் உன்னை
சேவித்துப் போற்றுகின்றேன்!
வையகம் புகழும் நல்ல
வாழ்க்கையை வழங்கு வாயே!
புதன் திசை:
கதம்பமும் முல்லை மல்லி
கனிவுடன் சூடும் கந்தா
சதமென ஆயுள் நல்கி
சகலமும் அருளுவாயே!
புதன் திசை நடக்கும் நேரம்
போற்றி நான் வணங்குகின்றேன்!
இதம் தரும் வாழ்வை நல்கி
இன்பத்தை வழங்குவாயே!
வியாழ திசை:
ஆறுமுகம் கொண்ட செல்வா!
அழகிய வள்ளி நேசா!
பெருமைகள் வழங்கி நாளும்
பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க
ருதிசை நடக்கும் நேரம்
குமரனை வணங்குகின்றேன்!
திருவருள் தருவதோடு
செல்வாக்கும் அருளுவாயே!

சுக்ர திசை:
தக்கதோர் வாகனங்கள்
தனி இல்லம் மனைவி மக்கள்
அக்கறை கொண்டு நாளும்
அசுரகுரு வழங்கு மென்பார்
சுக்கிரதிசையில் நாளும்
சுப்பிரமணியன் உன்னை
சிக்கெனப் பிடித்த தாலே
சிறப்பெலாம் வழங்குவாயே!
சனி திசை:
பிணியெலாம் அகலவேண்டிய
பெரும் பொருள் கிடைக்க வேண்டி
அணிதிகழ் வாழ்வு வேண்டி
அல்லல்கள் அகல வேண்டி
சனிசென்னும் திசையில் நாளும்
சண்முகா உனைத் துதித்தேன்!
கனிவுடைத் தெய்வம் நீயே காட்சி தந்தருளுவாயே!

இராகு திசை:
நாகமாய் வடிவில் நின்று
நடந்திடும் தோஷம் நீக்கி
போகத்தை வழங்குதற்கே
பூமியில் அருள் கொடுக்கும்
இராகு எனும் திசையில் உன்னை
இருகரம் கூப்பி வணங்குகிறேன்!
பாகென இனிக்கும் கந்தா பதினாறு பேறும் தாராய்!
கேது திசை:
ஆதரவு வழங்குதற்கும்
அண்டிய வழக்கு எல்லாம்
தீதின்றி மாறுதற்கும்
திறமைகள் தெரிவதற்கும் கேது திசையில் உன்னை
கீர்த்தியாய் வணங்குகின்றேன்
சாதனை செய்த வேலா சண்முகா அருளுவாயே!
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |