2025 வைகுண்ட ஏகாதசி: இன்று இந்த ஒரு தீபம் ஏற்ற தவறாதீர்கள்
விரதங்களில் ஏகாதசி விரதம் என்பது மிகவும் விசேஷமானவை. அதிலும் வைகுண்ட ஏகாதசி என்பது மிக மிக விசேஷமான தினமாக கருதப்படுகிறது. அதாவது மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று வழிபாடு செய்வார்கள். இந்த நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும்.
முக்கியமாக அன்றைய தினம் தான் பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும் . அப்படியாக இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் ஒருவர் தன்னுடைய கர்ம வினைகள், பாவங்கள் எல்லாம் விலகி மோட்சம் கிடைக்க பெருமாளை மனதார விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் பெருமாளின் அருளால் நல்ல வழி பிறக்கும்.
ஆனால் எல்லோராலும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. அவர்கள் கவலை கொள்ளாமல் இந்த ஒரு தீபத்தை அன்றைய நாள் ஏற்றி வழிபாடு செய்தால் வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து முழுப்பிறனை பெறலாம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

வைகுண்ட ஏகாதசி தீப வழிபாடு:
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொண்டு அதற்கு மேல் துளசிகளை பரப்பி இந்த துளசி இலைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான நெய் போற்றி தாமரை தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். பிறகு இந்த தீபத்தில் ஒரு பொடியை நாம் சேர்க்க வேண்டும்.
அந்த பொடி தான் இந்த விளக்கு ஏற்றுவதற்கான ஒரு விசேஷமான ஒன்றாகும். இந்த பொடியை தயார் செய்வதற்கு உங்களுக்கு வசதியான எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பச்சை கற்பூரம் ஒரு துண்டு, ஒரு கிராம்பு, இரண்டு துளசி இலைகள் ஒரு ஏலக்காய் இவற்றையெல்லாம் சேர்த்து பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் ஜவ்வாது பொடுயும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் பெருமாளுக்கு உகந்த மிக அற்புதமான கொடியாக கருதப்படுகிறது. இந்த பொடியில் இருந்து ஒரு சிட்டிகை எடுத்து அந்த நெய் தீபத்தில் போட்டு விளக்கேற்றினால் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி தீபம் தயார்.
அதோடு, பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் இரண்டு துளசி இலைகளையும் போட்டு வழிபாடு செய்தால் நிச்சயம் அந்த நாள் மிகச்சிறப்பான நாளாக அமையும். விரதம் இருக்க முடியவில்லை என்று கவலை கொள்ளாமல் இந்த ஒரு பரிகாரத்தை நீங்கள் செய்தால் நல்ல பலன் பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |