இந்த 3 ராசிக்காரர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் வருமாம்.. யார் தெரியுமா?
ஒருவருக்கு கோபம் என்பது பிறவி குணம் என்றாலும் அவை அவர்களுடைய பிறந்த ராசியின் தொடர்பை கொண்டிருக்கிறது. அதாவது குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும்.
அவர்கள் என்னதான் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் நிச்சயம் அவர்களால் எந்த ஒரு நிலையிலும் கோபத்தை அடக்க முடியாத குணம் கொண்டிருப்பார்கள். அப்படியாக எந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினர் எப்பொழுதும் உணர்வு ரீதியாக ஒரு நிலை தன்மை இல்லாத ஒரு பண்பு கொண்டிருப்பார்கள். ஆதலால் அன்பாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் அதை அதிக அளவில் வெளிகாட்டி விடுவார்கள். இவர்கள் ஒரு முறை ஒருவரிடம் பேச வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டால் நிச்சயம் அவர்கள் வாழ்நாளில் மீண்டும் அந்த நபரிடம் பேசுவதை தவிர்த்து விடுவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். அதனால் இவர்களுக்கு பிறவியிலே ஆளுமை பண்பு அதிகம் இருக்கும். இவர்கள் எல்லா இடங்களிலும் மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு தன்மை பெற்றிருப்பார்கள். இருப்பினும் ஏதேனும் ஒரு சில இடங்களில் தவறாக யாரேனும் இவர்களிடத்தில் நடக்க முயற்சிக்கிறார்கள் என்றால் அங்கு இவர்களை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வெளிப்பட்டு விடுகிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் தான் ஒரு மனிதனின் வீரம் வலிமை போன்றவைக்கு காரணமாக இருக்கிறார். ஆக இவர்களுக்கு பிறவியிலே கோபம் என்கின்ற குணம் அதிக அளவில் இருக்கும். சில நேரங்களில் தவறாக கூட உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட்டு இருப்பார்கள். பிறகு அதை உட்கார்ந்து யோசிக்க கூடிய நிலை இவர்களுக்கு வரும். அதனால் கோபம் என்பது இவர்களிடம் தவிர்க்க முடியாத ஒன்றாக சிறு வயதில் இருந்தே உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |