இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் திமிரு பிடித்தவர்களாம்.. யார் தெரியுமா?
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வித்தியாசமான குணாதிசயங்கள் உண்டு. அப்படியாக ஒரு சில ராசியினர் எதற்கும் இறங்கி வர மாட்டார்கள். அவர்களிடம் சென்று பேசுவது மிகவும் கடினமாக இருக்கும். அளவோடு தான் பேசுவார்கள். தவறாக யாரேனும் செயல்பட்டால் முகத்தில் அறைந்தது போல் உடனடியாக பதிலை கொடுத்து விடுவார்கள்.
இதை வெளியே இருந்து பார்ப்பவர்கள் திமிரு பிடித்தவர் என்று சொல்வது உண்டு. இதற்கு காரணம் இவர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள். ஆனால் அதற்கு இவர்கள் இடம் கொடுக்காததால் இவர்கள் மேல் ஒரு வெறுப்பு உண்டாகிவிடும்.
அப்படியாக எந்த ராசியினர் மற்றவர்கள் மத்தியில் திமிரு பிடித்தவர்கள் போன்று தெரியக்கூடியவர்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மேஷ ராசியினர் அவ்வளவு எளிதாக யாரிடமும் நட்பாக பழகிவிட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை நட்பாக பழகி விட்டார்கள் என்றால் அவர்களை விட்டு இவர்கள் எந்த நிலையிலும் பிரிய மாட்டார்கள்.
இருப்பினும் இவர்களுடைய முக பாவனையும் கொஞ்சம் கண்டிப்பாக தான் இருக்கும். ஆதலால் இவர்களை நெருங்கி பழகுவதற்கு நிறைய நபர்களுக்கு பிரியம் இருந்தாலும் கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள். ஆதலால் இவர்கள் எளிதாக திமிர் பிடித்தவர் என்ற பெயரை வாங்கி விடுகிறார்கள்.
கடகம்:
கடக ராசியை பொருத்தவரை அவர்கள் உணர்வு ரீதியாக ஒரு நிலையற்ற தன்மையை கொண்டு இருப்பார்கள். அதேபோல் ஒருவரிடம் நெருங்கி பழகி விட்டார்கள் என்றால் அவர்களுக்காக உயிரை கொடுக்கக்கூடிய அளவிற்கு அன்பு வைத்திருப்பார்கள்.
ஆனால் இவர்கள் அந்த உறவுகளிடம் தான் நிறைய ஏமாற்றங்களையும் சந்திக்கிறார்கள். ஆக இவர்கள் மீண்டும் ஒருவரிடம் பழகும் பொழுது ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக அவ்வளவு வெளிப்படையாக பேச மாட்டார்கள். அதுவே சில நேரங்களில் இவர்களை திமிரு பிடித்தவர்கள் போல் காட்டிவிடும்.
மீனம்:
மீன ராசியினரை பொறுத்தவரை இவர்கள் எல்லோரிடமும் நட்பாக இருக்கக் கூடியவர்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய குழந்தைத்தனமான மனதால் நிறைய ஏமாற்றங்களையும் இவர்கள் சந்தித்து இருப்பார்கள்.
ஆக ஒரு காலகட்டத்திற்கு மேல் இவர்கள் நாம் யாரிடமும் இனிமேல் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நட்பு வட்டாரங்களை விரிவு படுத்துவதை இவர்கள் நிறுத்தி விடுவார்கள். ஆதலால் இவர்கள் மிக எளிதாக திமிர் பிடித்தவர் என்ற ஒரு பெயரை சுற்றி உள்ளவர்களிடம் பெற்று விடுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |