2026-ல் சுயநலமாக இருக்க வேண்டிய முக்கியமான ராசிகள்.. ஏன் தெரியுமா?
2026 ஆம் ஆண்டு சிறப்பாக பிறந்து நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் கிரக அமைப்புகள் எடுத்து பார்க்கும் பொழுது ஒரு சில ராசிகள் இந்த ஆண்டு அவர்கள் சற்று சுயநலமாக செயல்பட வேண்டும் என்பது போல் தெரிகிறது. இந்த வருடம் அவர்கள் என்ன விஷயங்கள் செய்கிறார்களோ இல்லையோ நிச்சயமாக அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது.
அதனால் அவர்கள் சுயநலமாக செயல்பட்டாலும் தப்பில்லை என்பது போல் கிரக அமைப்புகள் அவர்களுக்கு இருப்பதால் எந்த ராசியினர் இந்த ஆண்டு அவர்களை பாதுகாத்துக் கொள்வதில் முழு கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினர் இந்த ஆண்டு அவர்களுடைய உணர்வு ரீதியான விஷயங்களுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிறரை பற்றி அதிக அளவில் சிந்திக்காமல் உங்களைப் பற்றி நீங்கள் சிந்தித்து உங்களுடைய முன்னேற்றம், உங்களுடைய ஆரோக்கியம், குடும்பம் தொழில் என்ற விஷயங்களில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினாலே போதுமானது.
தேவை இல்லாமல் பிறருடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே உங்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய நன்மையாகும்.
கன்னி:
கன்னி ராசியினர் உழைப்பின்றி ஓடிக்கொண்டிருக்க கூடிய நிலையில் இருக்கிறார்கள். இந்த வருடம் உங்களுடைய ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்காகவும் நீங்கள் சற்று நேரம் ஓய்வெடுத்து எந்த ஒரு காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் மன அழுத்தங்களை நீங்களே முன் சென்று வாங்கிக் கொள்ளாமல் உங்களுக்கான நேரத்தை நீங்கள் செலவிட வேண்டும்.
எந்த ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றாலும் நிதானமாக உங்களுக்கு அது சரியாக வருமா என்று யோசித்து எடுங்கள். சுற்றியுள்ளவர்களை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் செயல் பட்டால் நிச்சயம் பாதிப்பு வரும்.
மீனம்:
மீன ராசியினர் இந்த ஆண்டு முழுவதும் உங்களுடைய வேலை உங்களுடைய கடமையை மட்டும் செய்வதில் இருந்தால் தப்பித்து விடலாம். அதாவது தேவையில்லாத குழப்பங்கள் மனதில் வராமல் இருப்பதற்கு யாரைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். உங்களை பற்றி நீங்கள் சிந்தியுங்கள்.
உங்களுடைய சந்தோஷத்திற்காக என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் தியானம் செய்யுங்கள். யாரிடமும் அதிகம் நெருங்காமல் உங்களுக்கான முக்கியத்துவத்தை நீங்கள் சுயநலமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே நன்மை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |