எப்பொழுதும் இல்லாததை யோசித்து குழப்பத்திலே இருக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா ?
ஒரு சில நபர்களை பார்த்திருப்போம். அவர்கள் எப்பொழுதும் இல்லாததை நினைத்து யோசித்துக் கொண்டே இருப்பார்கள். எதிர்காலத்தை நினைத்து எப்பொழுதும் பயத்தில் வாழ்வார்கள். இதற்கு இவர்களுடைய ராசி அதிபதிகள் முக்கிய காரணமாக அமைகிறது.
அதாவது இவர்களுடைய சந்திரன் அவர்களை அவ்வாறு செயல்பட தூண்டுகிறது. அப்படியாக, எந்த ராசியினர் எப்பொழுதும் தேவை இல்லாத விஷயங்களை யோசித்துக்கொண்டு குழப்பத்திலே இருக்கக்கூடியவர்கள் என்று பார்ப்போம்.

மீனம்:
மீன ராசியினர் அதீத கற்பனை உலகத்தில் வாழ்வார்கள். அதாவது இவர்கள் ஒரு விஷயத்தை தொடங்கும் பொழுது அவர்கள் பல கற்பனை கனவு உலகத்திற்கு செல்ல துவங்கி விடுவார்கள்.
அதேபோல், ஏதேனும் பிரச்சனை என்றாலும் இவர்கள் அதை அதிக அளவு பெரிது படுத்தி யோசித்து மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார்கள். இவர்களின் குழப்பம் மற்றும் பயம் சுற்றி உள்ளவர்களையும் சமயங்களில் பாதிப்பதை நாம் பார்க்க முடிகிறது.
துலாம்:
துலாம் ராசியினர் எப்பொழுதும் சரியாக சமநிலையாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் நடுநிலையாக யோசித்தாலும் இவர்கள் எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க முயல்வார்கள்.
ஆதலால் ஏதேனும் நடுநிலையாக முடிவெடுக்கக்கூடிய நிலை வரும் பொழுது இவர்கள் குழப்பத்தில் மூழ்கி மன அழுத்தத்திற்கு செல்ல நேருகிறது. சமயங்களில் சரியான முடிவை எடுப்பதிலே இவர்களுக்கு குழப்பமும் தடுமாற்றமும் வருவதை காணலாம்.
மிதுனம்:
மிதுன ராசியினர் பொருத்தவரை இவர்களுக்கு இரட்டை குணங்கள் உண்டு. எப்பொழுதும் நிலை தடுமாறிக் கொண்டே இருப்பார்கள். இதை செய்ய வேண்டுமா அல்லது அதை செய்ய வேண்டுமா என்ற குழப்பத்தில் இவர்கள் இருப்பதால் இவர்களை நம்பிக்கை தன்மையோடு வழிநடத்த ஒரு நபரை இவர்கள் எதிர்பார்த்து கொண்டே இருப்பார்கள். ஆக, இவர்கள் குடும்பத்தினர் பேச்சை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையிலும் இவர்கள் சிக்கி விடுவதை நாம் காணலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |