மிகவும் கஞ்சத்தனமாக இருக்கும் 3 ராசிகள்.. பணத்தை வெளியவே எடுக்கமாட்டார்களாம்
ஒரு சிலருக்கு சம்பாதிக்கக்கூடிய பணத்தை சேமித்து வைத்து பார்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். அதாவது அவர்களுக்கு தேவையான விஷயங்களுக்கு கூட அவர்கள் செலவு செய்ய மாட்டார்கள். எப்பொழுதும் கணக்கு வழக்கு பார்ப்பதில் அதிக ஆர்வமாக இருப்பார்.
காரணம், எதிர்காலத்தை கருதி அவர்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல நேரங்களில் தேவைக்கு கூட செலவு செய்யாமல் கஞ்சத்தனமாக இருந்து விடுவதுண்டு. இதற்கு அவர்களுடைய ராசி அதிபதிகளும் காரணமாக இருக்கிறார்கள். அப்படியாக, எந்த ராசியினர் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பவர்கள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். இவர்கள் எப்பொழுதும் நிலையான பொருளாதார மற்றும் நிலையான செல்வாக்கு கொண்டு வாழ வேண்டும் என்ற விரும்புபவர்கள். இவர்களிடம் பணம் வருகிறது என்றால் அதை அவர்கள் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார்கள்.
எப்பொழுதும் தேவை இல்லாத விஷயங்களுக்கு அவர்கள் பணத்தை செய்ய செலவு செய்ய மாட்டார்கள். இருப்பினும் அவர்களுக்கு என்று வரும் பொழுது அவர்கள் கொஞ்சம் எளிதாக செலவு செய்யக்கூடியவர்களாகவும் மற்றவர்களுக்கு என்று வரும் பொழுது அவர்கள் மிகவும் சிக்கனம் பார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
கன்னி:
கன்னி ராசியினர் எப்பொழுது கணக்கு வழக்குகளில் தெளிவாக இருக்க கூடியவர்கள்.வரவு நன்றாக இருந்தாலும் சில நேரங்களில் செலவே செய்யக் கூடாது என்று இவர்கள் எண்ணுவது உண்டு. அதனால் இவர்கள் சிக்கனம் என்று ஓடி இவர்களுக்கு பிடித்த சில விஷயங்களை கூட இவர்கள் வாங்காமல் விட்டுவிடுகிறார்கள்.
மேலும், பணம் என்று பேச்சு ஆரம்பித்தாலே இவர்கள் கணக்குப் போட்டு பேசும் பழக்கத்தையும் வைத்திருப்பதை நாம் பார்க்கலாம். அதனால் நண்பர்கள் மத்தியில் இவர்கள் கஞ்சத்தனமாக செயல்படக்கூடியவர்கள் பெயரை எடுத்து விடுகிறார்கள்.
விருச்சிகம் :
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட விருச்சிக ராசியினர் பணத்தை சேமிப்பதில் கட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால், பிறருடைய பணம் என்று வரும் பொழுது அவர்கள் கண்டுகொள்வது இல்லை.
ஆக இவர்கள் சில நேரங்களில் சுயநலமாக தன்னுடைய பணத்தை மட்டுமே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் கட்டுப்பாடுடன் வாழ தெரிந்தவர்கள் என்பதால் செலவுகளை சிக்கனமாக செய்யக்கூடிய பழக்கம் வைத்திருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |