இந்த 3 ராசிகளிடம் மன்னிக்கும் குணமே இருக்காதாம் - அவர்கள் யார் தெரியுமா?
மனிதர்களுடைய குணம் சமயங்களில் அவர்களுடைய ராசி பொறுத்தும் அமைகிறது. அதாவது ஒரு சிலருக்கு இயற்கையாகவே ஒருவரை மன்னிக்கும் குணமும் கருணை உள்ளம் கொண்ட அன்பும் இருக்கும்.
ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் அவர்கள் முயற்சித்தாலும் அவர்களிடம் ஒரு அன்பான சூழலையும் ஒரு சாதாரண விஷயத்தை மன்னிக்கும் குணத்தை அவர்களிடம் பார்க்க முடியாது. அதற்கு அவருடைய ராசியும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. அப்படியாக 12 ராசிகளில் எந்த ராசிகளிடம் மன்னிக்கும் குணம் இருக்காது என்று பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசியினர் பேச்சுத்திறமை வாய்ந்தவர்கள். ஒருவரிடம் பழகுவதில் சிறப்பு மிக்கவர்கள் என்று பல நல்ல விஷயங்கள் இவர்களிடம் இருந்தாலும் இவர்களுடைய மனம் சற்று கல் நெஞ்சம் ஆகத்தான் இருக்கும். அவ்வளவு எளிதாக இவர்கள் ஒருவரை மன்னித்து ஏற்க மாட்டார்கள். காரணம் இவர்கள் அதிக அளவில் அறிவு வாய்ந்தவர்கள் என்பதால் ஒருவர் செய்யும் தவறை இவர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியை பொறுத்தவரை இவர்களிடம் அறிவு திறமை அனைத்தும் இருக்குமே தவிர்த்து இவர்களிடம் ஒருவரை மன்னிக்கும் குணம் இருக்கவே இருக்காது. காரணம் இவர்கள் மனதில் அதிக அளவிலான கோபமும் வன்மமும் இருந்து கொண்டே இருக்கும். ஒருவர் இவர்களுக்கு தீங்கு விளைவித்தார்கள் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவர்களே முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற ஒரு தீர்க்கமான எண்ணமே இவர்களை பெரும்பாலான இடங்களில் ஒருவர் செய்த தவறை மன்னித்து ஏற்கும் நற்பண்புகளை குறைத்து விடுகிறது.
மேஷம்:
மேஷ ராசியினர் பொறுத்தவரை எல்லோரிடத்திலும் அவர்கள் அன்பாகவும் நண்பர்களாகவும் பழக்குவார்கள். இவர்கள் யாரிடத்திலும் தானாக முன் சென்று வம்புகளை இழுக்க மாட்டார்கள். அதேபோல் இவர்கள் பொறுமையாக எல்லா விஷயத்தையும் கடைபிடிப்பவர்களாக இருந்தாலும் இவர்களிடம் யாரேனும் தவறுகள் செய்தார்கள் என்றால் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அதேசமயம் அந்த நபரை திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







