அதிர்ஷ்டத்தை கொடுக்க வருகிறார் சுக்கிரன்- 3 ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்
ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் அதிர்ஷ்டமானவர். இவர் தான் ஒருவர் வாழ்க்கையின் புகழ், பணம், செல்வம், செழிப்பு போன்றவைக்கு காரணியாக இருக்கிறார்.
அப்படியாக, சுக்கிர பகவான் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி மீன ராசியில் நுழைகிறார். இந்த மாற்றத்தால் 3 ராசிகளுக்கு மிக சிறந்த மற்றும் மிக பெரிய ராஜயோகமும் அதிர்ஷ்டமும் கிடைக்க போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மீன ராசியில் சுக்கிர பகவான் நுழைவதால் இவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய ஏற்றம் உண்டாகும். பணப்புழக்கம் சிறப்பாக அமையும். இந்த நேரத்தில் இவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்கு சுக்கிரனின் இந்த மீன ராசி பயணம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும். மனதில் உள்ள குழப்பங்கள் அகலும். முகம் தெளிவடையும். மனதில் இனம் புரியாத சந்தோசம் உண்டாகும். நீண்ட நாள் கடன் அடையும் வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவி இடையே உள்ள அன்பு அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு சுக்கிரனின் இந்த மீன ராசி பயணம் தொலை தூரத்தில் இருந்து நற்செய்தி கொண்டு வந்து சேர்க்க போகிறது. பொருளாதார நிலை முன்பை விட நல்ல முன்னேற்றம் அடையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். எடுத்த காரியங்களில் வெற்றி, வேலை செய்யும் இடத்தில் புகழ் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |