இந்த 3 ராசியினர் கஞ்சனாக இருந்தாலும் உதவி என்றால் யோசிக்காமல் செய்வார்களாம்
ஜோதிடம் பொருத்தவரை ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அப்படியாக பணம் சேமிப்பது என்பது எல்லோராலும் அவ்வளவு எளிதாக கடைப்பிடிக்க முடியாத ஒரு நிலையாக இருக்கிறது. பணத்தை சேமித்து எந்த காலத்தில் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று கணக்கிட்டு செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்களை அவர் குடும்பத்தினர் கஞ்சன் என்றும் சில நேரங்களில் அழைப்பதுண்டு. அப்படியாக இவர்கள் கஞ்சனாகவே இருந்தாலும் ஒரு சிலர் உதவி என்று கேட்டு வந்தால் அவர்கள் யோசிக்காமல் கைகளில் இருப்பதை கொடுக்கக்கூடிய அவ்வளவு இளகிய மனம் கொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசியை பொறுத்தவரை எல்லா விஷயங்களையும் அவர்கள் கணக்கு பார்த்து தான் செலவு செய்வார்கள். குடும்பமாக இருந்தாலும், தனக்காக இருந்தாலும் ஒவ்வொரு செலவையும் அவர்கள் கணக்கு பார்த்து செலவழித்து தங்களுடைய பணத்தை சிக்கனமாக வைத்துக் கொள்பவர்கள். இருந்தாலும் இவர்களிடம் பிறருக்கு உதவும் குணம் அதிகம் இருக்கும். இவர்கள் எவ்வளவு சேமித்து வைக்கிறார்களோ அதில் உதவி என்று கேட்பவர்களுக்கு இவர்கள் தயங்காமல் கொடுக்கும் குணம் கொண்டவர்கள்.
கும்பம்:
கும்ப ராசியை பொறுத்த வரை அவர்கள் ஒவ்வொரு பணத்திற்கும் அவ்வளவு மதிப்பு கொடுத்து சிக்கனமாக சேமிக்க கூடிய ஒரு குணம் கொண்டவர்கள். இவர்கள் தனக்கென்று கூட பிடித்த பொருட்களை வாங்குவதற்கு அவ்வளவு யோசிப்பார்கள். ஆனால் இவர்கள் பிறருக்கு யோசிக்காமல் உதவக்கூடிய அற்புதமான குணம் படைத்தவர்கள். இவர்கள் பிறருக்கு உதவும் பொழுது தங்களுடைய பணம் தீர்ந்து போகிறது என்ற நிலை வந்தால் கூட அதைப்பற்றி பொருட்படுத்தாமல் உதவக்கூடிய அற்புதமான குணம் படைத்தவர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு பொருத்தவரை உழைப்பிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் உழைக்கும் பணத்தை பார்த்து பார்த்து சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான மனிதர்கள். அதேபோல் இவர்களுக்கு மனிதர்கள் மீது நிறைய இறக்க குணம் இருக்கும். இவர்கள் தங்களுக்கென்று செலவு செய்வதை காட்டிலும் இல்லாதவர்களுக்கும் கஷ்டப்படும் மனிதர்களுக்கும் தங்களுடைய சம்பாத்தியத்தை கொடுப்பதில் இவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







