இந்த 3 ராசியினர் காதலராக கிடைத்தால் கொடுத்து வைத்தவர்களாம்.. யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சில ராசியினர் இயல்பாகவே மிகவும் நம்பகத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அது மட்டுமல்லாமல் அவர்களை நம்பியவர்களுக்கு எதையும் செய்ய துணிவார்கள். இதை நாம் அவர்களுடைய காதலிலும் வாழ்க்கை துணையிடமும் நன்றாக பார்க்கலாம். அந்த வகையில் இந்த குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் ஒருவருக்கு காதலராக கிடைக்கும் பொழுது அந்த நபர் மிகவும் கொடுத்து வைத்தவர்களாக உணர்வார்களாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசி பொருத்தவரை அவர்களை யாரேனும் நம்பிவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். அந்த வகையில் காதல் அல்லது திருமணம் என்று வரும்பொழுது தன்னுடைய துணைக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள். மேலும் துணையிடம் அன்பைத் தவிர வேறு எதுவும் எதிர்பார்க்காத ஒரு நபராகவும் ரிஷப ராசியினர் இருப்பார்கள்.
கடகம்:
கடக ராசியினர் எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்து செயல்பட கூடியவர்கள். அதிலும் காதல் என்ற உறவு வரும் பொழுது தங்களுடைய துணைக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யக் கூடியவர்கள். கடக ராசிக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை எப்பொழுது மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு நிறைய மெனக்கிடல்கள் எடுப்பார்கள். ஆதலால் இவர்கள் காதலராக அல்லது வாழ்க்கை துணையாக கிடைக்கும் பொழுது அந்த நபர் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார்.
துலாம்:
துலாம் ராசியின் சின்னம் தராசு ஆகும். மேலும் இவர்களுடைய அதிபதி சுக்கிர பகவான். இவர்கள் ஒரு கலை ரசனையுடன் இருக்கக்கூடியவர்கள். எல்லா விஷயத்தையும் ரசித்து புரிந்து கொண்டு ஒரு அர்த்தமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள். ஆதலால் துலாம் ராசியில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருக்கட்டும் குடும்பம் அல்லது காதல் வாழ்க்கை என்ற எல்லாவற்றுக்கும் இவர்களுடைய முழு பங்கினை கொடுத்து அந்த நபரை சந்தோஷமாக உணர வைக்கக் கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |