நிறைய சொத்துக்களை சேர்க்கக்கூடிய யோகம் உள்ள ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jun 13, 2026 08:59 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காரகத்துவம் இருக்கிறது. அது தனிநபர் வாழ்க்கையில் பிரதிபலிப்பதை பார்க்கலாம். அந்த வகையில், பணம் சம்பாதிப்பதாக இருக்கட்டும் சொத்து சேர்க்கையாக இருக்கட்டும் கட்டாயம் அந்த ராசியினருடைய ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.

அதோடு ஒருவருடைய சுய ஜாதகத்திலும் கிரகங்கள் சாதகமாக இருக்க வேண்டும். அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக அளவில் சொத்துக்கள் சேர்க்கக்கூடிய யோகம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

நிறைய சொத்துக்களை சேர்க்கக்கூடிய யோகம் உள்ள ராசிகள் யார் தெரியுமா? | 3 Zodiac Who Earns Lot Of Assets And Money

வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலக யார் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்?

வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலக யார் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்?

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களை ஆளக்கூடிய கிரகமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். ஆதலால், இவர்களுக்கு எப்பொழுதும் நிறைய சொத்துக்களை சேர்க்க வேண்டும் நிலம் வாங்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். அதை போல் உழைப்பால் அதிக அளவில் சொத்துக்களை சேர்ப்பதை நாம் பார்க்கலாம். வீடு மனை வாகனங்கள் இவர்களிடம் அதிக அளவில் இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசியினரை ஆளக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். இவர்கள் எப்பொழுதும் நிலையான தன்மையை விரும்பக்கூடியவர்கள். இவர்கள் சொகுசு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்.

எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை முன்பே நாம் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று பழக்கம் கொள்பவர்கள். ஆதலால் எதிர்காலத்தை கருதி நிறைய சொத்துக்கள் மற்றும் பணம் சேர்ப்பதில் இவர்கள் ஆர்வம் செலுத்துகிறார்கள்.

இந்த கிழமையில் தவறியும் இந்த தெய்வத்தை வழிபாடு செய்து விடாதீர்கள்

இந்த கிழமையில் தவறியும் இந்த தெய்வத்தை வழிபாடு செய்து விடாதீர்கள்

விருச்சிகம்:

விருச்சிக ராசியினரை ஆளக்கூடிய கிரகமாகவும் செவ்வாய் பகவான் இருக்கிறார். ஆக விருச்சிக ராசியினருக்கு இயல்பாகவே சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

அதனால் இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து அதை அவர்கள் சேமித்து வைப்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆதலால், விருச்சிக ராசிகளிடம் அதிக அளவில் சொத்துக்கள் இருப்பதை நாம் காணலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US