நீங்கள் மகர ராசியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் என்ன தெரியுமா?

By Sakthi Raj Jun 13, 2026 11:35 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கர்ம பலனை கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சனிபகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களுடைய கர்மபலன் என்னவென்று பார்ப்போம்.

பொதுவாக, மகர ராசியினரை பொறுத்தவரை அவர்கள் கடின உழைப்பாளியாக இருக்கிறார்கள். சனிபகவானுடைய வீடு என்பதால் அவர்களுக்கு நிலையான வெற்றியேயே வாழ்க்கை கொடுக்கிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை சரியாக திட்டமிட்டு செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் எப்பொழுதும் தங்களுடைய கடமையை செய்வதில் தவறாமல் இருப்பது அவசியம். குறிப்பாக தாய் தந்தையின் பராமரிப்புகளில் இவர்கள் கடமையை செய்ய தவறிவிட்டால் மிகப்பெரிய அளவில் கர்மவினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

2026 இன்னும் 3 நாளில் சூரியன் பெயர்ச்சி.. 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது?

2026 இன்னும் 3 நாளில் சூரியன் பெயர்ச்சி.. 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது?

செவ்வாய் பாதகாதிபதியாக இருப்பதால் உடன் பிறந்தவர்களுடன் கவனமாக இருப்பது நல்லது. அதைப்போல் சுக்கிர ஆதரவால் இவர்கள் வசதியான வீடு மற்றும் சொத்து சேர்க்கை உண்டாகும். சில சமயங்களில் படித்த படிப்பிற்கும் வேலைக்கும் தொடர்பு இல்லாமல் போகலாம். இருப்பினும் நல்ல வருமானத்தை இவர்கள் சந்திப்பார்கள்.

இவர்கள் வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் அதிக அளவு லாபமும் வருமானமும் உண்டாகும். மகர ராசியினருக்கு சுக்கிர பகவான் யோகாதிபதியாக இருப்பதால் இவர்கள் லட்சுமி வழிபாடு மற்றும் சுக்கிரன் தொடர்பான கோவில்களுக்கு செல்வது இவர்களுக்கு மிகச்சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

இவர்கள் மன அமைதிக்காகவும் வாழ்க்கையில் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் திங்கட்கிழமை சந்திர பகவான் உடைய தரிசனம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். அதைப்போல் மாத சிவராத்திரி போன்ற நாட்களில் அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்வதும் இவர்களுக்கு சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US