மீண்டும் மீண்டும் எழுந்து போராடக்கூடிய தன்மை கொண்ட 3 ராசிகள்.. இவர்களை வீழ்த்தவே முடியாதாம்

By Sakthi Raj Jun 29, 2026 06:58 AM GMT
Report

நம்மை சுற்றியுள்ள நபர்கள் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கடினமான காலங்கள் வந்த பொழுதும் அவர்கள் அதற்கு மனம் தளராமல் இதுவும் கடந்து போகும் இன்னும் வாழ்வதற்கான நாட்கள் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு போராடக்கூடிய குணம் பெற்றிருப்பார்.

இது அவர்களுக்கு இயல்பாகவே வரக்கூடிய குணம் என்றாலும் அதன் தூண்டுதலாக அவர்களுடைய ராசி இருக்கிறது. அப்படியாக, எந்த ராசியில் பிறந்தவர்கள் மீண்டும் மீண்டும் எழுந்து போராடக்கூடிய தன்மை கொண்டவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

மீண்டும் மீண்டும் எழுந்து போராடக்கூடிய தன்மை கொண்ட 3 ராசிகள்.. இவர்களை வீழ்த்தவே முடியாதாம் | 3 Zodiac Who Have Strong Mental Mind

மேஷம்:

செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற மேஷ ராசியினர் துடிப்போடு செயல்படக்கூடியவர்கள். இவர்கள் ஒன்றை மனதில் நினைத்து விட்டால் அதை அடையும் வரை அவர்கள் ஓய்வதில்லை. அதை போல், யாராவது இவர்களிடம் உன்னால் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள் என்றால் அந்த நபர்கள் முன்பு அந்த காரியத்தை இவர்கள் முடித்துக் காட்டுவார்கள். அதே போல், வாழ்க்கை இவர்கள் எவ்வளவு கீழ் நிலைக்கு தள்ளினாலும் அதற்கு அவர்கள் அஞ்சாமல் மீண்டும் எழுந்து போராடக் கூடியவர்கள்.

மகரம்:

மகர ராசி பொறுத்த வரை இவர்கள் மன உறுதி கொண்டவர்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். என்னால் இதை சாதிக்க முடியும் என்ற மன தைரியம் உடையவர்கள். ஆதலால், இவர்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமான சுழற்சிகள் கொண்டாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் இதை நான் முடித்துக் காட்டுவேன் என்ற ஒரு நோக்கத்தோடு செயல்பட கூடியவர்கள். எதிரிகள் அதிகமாக இருந்தாலும் அதைப்பற்றி அவர்கள் கவலை கொள்ளாமல் தன் நோக்கத்தில் கவனமாக இருப்பார்கள்.

நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களா? உங்களுக்கான வாழ்நாள் பலன் இதோ

நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களா? உங்களுக்கான வாழ்நாள் பலன் இதோ

ரிஷபம்:

ரிஷப ராசி பொருத்தவரை இவர்கள் எதையும் ஆழ்ந்து சிந்திக்க கூடியவர்கள். தன்னை அதிகமாக நேசிக்கக் கூடியவர்கள். தன்னை அதிகமாக நம்பக்கூடியவர்கள். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதி கொண்டவர்கள். போட்டி என்று வந்துவிட்டால் அந்த போட்டியில் முன்னிலை வகிப்பதும் அதில் இவர்களை வெற்றி அடைவதையும் நாம் பார்க்க முடிகிறது. இவர்களை யாராவது உதாசீனம் செய்து விட்டால் அவர்கள் முன்பு இவர்கள் தலைநிமிர்ந்து வாழந்து காட்ட வேண்டும் என்று குறிக்கோள் வைத்து இருப்பார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US