முகத்திற்கு நேராக தைரியமாக பேசக்கூடிய 3 ராசிகள் யார்?
நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். எதற்கும் அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அதைப்போல், ஒருவரை பற்றி அவர்களுக்கு ஏதாவது ஒரு எண்ணம் தோன்றினால் அவர் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்காமல் மனதில் உள்ளதை நேரடியாக சொல்லிவிடுவார்கள்.
அதாவது முகத்திற்கு நேராக தைரியமாக ஓப்பனாக பேசக்கூடிய நபராக இருக்கிறார்கள். அவர்கள் எந்த ராசியார் என்று பார்ப்போம்.

தனுசு:
இவர்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அவர்களால் மனதில் வைத்துக் கொள்ள முடியாது. வெளிப்படையாக பேசி விடுவார்கள். எதையும் இவர்கள் நேருக்கு நேர் பேசும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கடகம்:
இவர்கள் ஒருவரிடம் அன்பு அதிகமாக வைத்திருந்தாலும் மனதில் ஒரு விஷயத்தை இவர்களால் வைத்துக்கொள்ள முடியாது.
அதேபோல், தேவையில்லாத நாடகம் ஏமாற்றுவது போன்ற நிகழ்வுகள் இவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சிரித்தபடியே இவர்கள் முகத்திற்கு நேராக சில விஷயங்களை சொல்லி விடுவது உண்டு.
மீனம்:
இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார்கள். ஆதலால், பலரும் இவர்களை பல நேரங்களில் சீண்டி பார்ப்பார்கள்.
ஆனால், இவர்கள் பொறுமை இழந்து விட்டால் இவர்கள் மனதில் உள்ளதை இவர்கள் வெளிப்படையாக பேசி விடுவார்கள். அது மிகப்பெரிய கடும் சொற்களால் மிகப்பெரிய தாக்கத்தை கூட உண்டு செய்து விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |