2026: 71 ஆண்டிற்கு பிறகு அதிசயம்.. கடைசி சூரிய கிரகணம்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
2026 ஆம் ஆண்டு இரண்டாவது மற்றும் கடைசியாக நடக்கக்கூடிய சூரிய கிரகணம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று நடக்கிறது. இது இந்தியாவில் தெரியாது என்பதால், சூதக் காலம் செல்லுபடியாகாது.
இருப்பினும், ஜோதிட ரீதியாக இந்த கிரகணம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகணத்தின் தாக்கம் கட்டாயமாக 12 ராசிகளுக்கும் ஏற்படும். அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைய போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

கடகம்:
இவர்கள் இந்த காலகட்டங்களில் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய அவசியமாகும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை பேசுவதையும் கோபமாக பேசுவதையும் தவிர்த்து விட வேண்டும்.
முடிந்தவரை இவர்கள் வியாபாரத்தில் இந்த காலகட்டங்களில் எந்த ஒப்பந்தங்களும் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கடன் வாங்குவது முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
சிம்மம்:
இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு மிகுந்த உழைப்பும் போராட்டமும் தேவைப்படுகிறது. சாதாரணமாக முடியக்கூடிய வேலை கூட இவர்களுக்கு நீண்ட நாள் ஆகக்கூடிய நிலை வரலாம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையாக இவர்கள் இருப்பது அவசியம்.
உடல் ஆரோக்கியத்தில் கட்டாயமாக இவர்கள் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம்.
கன்னி:
இந்த காலகட்டங்களில் யாரையும் நம்பி உங்களுடைய சொந்த வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளாதீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் நண்பர்களிடத்திலும் தேவையில்லாத வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளாதீர்கள்.
உங்களுடைய உடமைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் பொழுது கூடுதல் எச்சரிக்கை செலுத்துவது அவசியமாக உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |