2026: ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கியமான 3 பொருட்கள்
ஆடி மாதத்தில் வரக்கூடிய 18 வது தினத்தை நாம் ஆடிப்பெருக்கு என்று வழிபாடு செய்து கொண்டாடி வருகின்றோம். தமிழகம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட பகுதி என்பதால் ஆடிப்பெருக்கு தினத்தன்று நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் ஆறு குளங்களை நீர் பெருக்கெடுத்து ஓடுவது பண்டைக்கால வழக்கமாகும். அதனால், அனைத்து நீர் நிலைகளையும் காவிரி தாயாக பாவித்து நீர் நிலைகளின் கரைகளில் மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள்.
இது பெருக்கத்திற்குரிய நாளாக கருதப்படுவதால் ஆடிப்பெருக்கு அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடு, தானம் வாங்கும் பொருள், துவங்கக்கூடிய செயல்கள் எல்லாம் பல மடங்காக பெருகும் என்று நம்பிக்கை உள்ளது.

மேலும், ஆடிப்பெருக்கு அன்று நாம் புதிய பொருட்கள் குறிப்பாக மங்களப் பொருட்கள், சொத்துக்கள் வாங்குவது, சுபகாரிய பேச்சுக்கள், வியாபாரம் தொழில் துவங்குவது போன்றவை மக்கள் செய்வது உண்டு. இன்னும் ஒரு சிலர் இந்த நாளில் தங்கம், புதிய வாகனம் போன்றவற்றையும் இவர்கள் வாங்குவார்கள்.
ஆனால், எல்லோராலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாது என்று வருந்த வேண்டாம். ஆடிப்பெருக்கு அன்று அதை விட மிக சிறப்பான எளிய மூன்று பொருட்களை வாங்கலாம். அதைப் பற்றி பார்ப்போம்.
ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 3 பொருட்கள் :
1. கல் உப்பு
2. விரலி மஞ்சள்
3. துவரம் பருப்பு
ஆடிப்பெருக்கென்று இந்த மூன்று பொருட்களையும் நல்ல நேரத்திற்குள் வீட்டிற்கு வாங்கி வந்த பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம். பிறகு அதை நாம் சமையல் அறைக்கு எடுத்துச் சென்று தினசரி சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆடிப்பெருக்கென்று மாலை ஆறு மணிக்கு முன்பாக வீட்டிற்குள் இந்த மூன்று பொருட்களையும் வாங்கி வருவது நம்முடைய வீட்டிற்கு மகாலட்சுமியின் பெற்றுக் கொடுக்கும்.
இந்த மூன்று பொருட்களோடு சேர்த்து ஆடிப்பெருக்கென்று நாம் அரிசி, துவரம் பருப்பு மஞ்சள், குங்குமம், மாங்கல்யசரடு, பச்சை கற்பூரம், கண்ணாடி போன்ற பொருட்களின் கட்டாயமாக வாங்கலாம். அதைப் போல், திருமணம் போன்ற மங்கள காரியங்களுக்கும் தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவது மிக சிறப்பு.
அதைப் போல், திருமணம் போன்று சுபகாரியத் பேச்சுக்களுக்கான பேச்சுவார்த்தை தொடங்குவது பத்திரிக்கை அச்சிட கொடுப்பது கட்டிட கட்டுமான பணிகளை துவங்குவதும் மிகப் பெரிய அளவில் புண்ணியங்களை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |