இராமாயணம்: கணவன் வீழ்ந்ததும் மண்டோதரிக்கு நடந்த அதிசயம்.. என்ன தெரியுமா?

By Sakthi Raj Sep 20, 2026 11:22 AM GMT
Report

கிருஷ்ண அவதாரங்களில் "ஸ்ரீ ராம" அவதாரம் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. அந்த வகையில், ராவண வதம் முடிந்த பிறகு போர்க்களத்தில் ஸ்ரீ ராமபிரான் ஓய்வாக அமர்ந்திருக்கிறார்.

அப்போது அந்த இடத்தில் ஒரு பெண்ணினுடைய நிழல் தெரிகிறது. அந்த நிழலுக்கு சொந்தமான பெண் ஸ்ரீ ராமரின் உடைய திருப்பாதங்களைத் தொடர் முயற்சிப்பதை அவளுடைய நிழலின் வழியாக ஸ்ரீ ராமர் தெரிந்துக் கொள்கிறார். உடனடியாக அவர் தன்னுடைய காலை உள்ளே இழுத்துக் கொள்கிறார்.

பிறகு ஸ்ரீ ராமர் அந்த பெண்ணை பார்த்து "யாரம்மா நீ" என்று கேட்கிறார். நான் ராவணனுடைய மனைவி மண்டோதரி என்கிறாள். பிறகு அவர் என்னுடைய கணவரை எவராலும் வெல்ல முடியாது என்று பெருமையில் இருந்தேன்.

இராமாயணம்: கணவன் வீழ்ந்ததும் மண்டோதரிக்கு நடந்த அதிசயம்.. என்ன தெரியுமா? | Why Ravanan Wife Mandothari Is Important

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?

ஆனால், அவரையே ஒருவர் கொன்று விட்டார் என்றால் அந்த நபரிடம் உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன் என்கிறார் மண்டோதரி. மேலும், சத்திரிய குல தர்மத்தின் படி கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதாகும். ஆனால் நீங்கள் வரவில்லை.

அதுவும் என்னை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. இங்கே என்னுடைய நிழல் உங்கள் மீது படுவதையும் கூட நீங்கள் விரும்பவில்லை. இவ்வளவு உயர்ந்த குணம் உங்களிடம் இருப்பதைக் கண்டு நான் வியக்கிறேன். நானும் என் கணவரிடம் ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதனே அல்ல. உலகத்தை காக்கக்கூடிய பரம்பொருள்.

அவரே மகாவிஷ்ணு. அவர் தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகத்தையே தாங்கி நிற்கக் கூடியவர். ராமபிரான் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகமே இல்லை. அவரிடம் பகையை ஒழித்து சீதையை விட்டு விடுங்கள் என்று நான் எவ்வளவோ மன்றாடினேன். ஆனால், என் கணவரும் கேட்கவில்லை.

இராமாயணம்: கணவன் வீழ்ந்ததும் மண்டோதரிக்கு நடந்த அதிசயம்.. என்ன தெரியுமா? | Why Ravanan Wife Mandothari Is Important

கருட புராணம்: மரணத்திற்குப் பிறகு ஒரு ஆன்மா எவ்வளவு நாள் வீட்டில் இருக்கும் தெரியுமா ?

கருட புராணம்: மரணத்திற்குப் பிறகு ஒரு ஆன்மா எவ்வளவு நாள் வீட்டில் இருக்கும் தெரியுமா ?

 

உங்களுடைய இன்றைய வெற்றிக்கு காரணம் என் கணவரிடம் இல்லாத நற்குணம் உங்களிடம் உள்ளது. அதுதான் உங்களுடைய ஏக பத்தினி விரத தன்மை. அதனால் தான் நீங்கள் ராவணனை வென்றீர்கள் என்றார். உடனடியாக ஸ்ரீ ராமபிரான் அவருடைய சுய வடிவான நாராயணாக விஸ்வரூபம் தரிசனம் கொடுக்கிறார்.

ராமாயணத்தில் பாக்கியவதியாக திகழ்ந்துவள் மண்டோதரி ஆகிறாள். அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்றபோது மண்டோதரி ஒழுக்கமாக உடை அணிந்து இருந்ததை கண்டு இவள் சீதையாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகம்படும் அளவிற்கு அவள் ஒழுக்கம் உள்ளவளாக இருந்திருக்கிறார்.

கெட்டவனுக்கு வாக்கப்பட்டு இருந்தாலும் அவளுக்கு ஸ்ரீமன் நாராயணனுடைய தரிசனம் கிடைத்தது.

"ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்" 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US