நாளைய ராசிபலன் (21-09-2026)

Report

 மேஷம்:

இன்று உங்கள் குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். உறவுகள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகளுக்கான முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

ரிஷபம்:

நீங்கள் தொழில் ரீதியாக ஒரு சில குழப்பங்களை சந்திக்கலாம். வருமானம் தொடர்பான பிரச்சனைகள் சந்திப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம்.

மிதுனம்:

இன்று திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த கசப்புகள் விலகும். பெரியவர்களுடைய முழு ஆலோசனைகள் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்:

இன்று கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சட்ட ரீதியான சிக்கல்கலள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டு. பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாள்.

2026: இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகள் உள்ளதா?

2026: இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகள் உள்ளதா?

சிம்மம்:

வியாபார ரீதியாக நீங்கள் யாரிடமும் வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். தந்தையிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் தவிர்ப்பது அவசியம். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

கன்னி:

நீங்கள்வியாபார ரீதியாக ஒரு சில சிக்கலை சந்திப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகலாம். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயமும் கவலையும் உண்டாகும்.

துலாம்:

நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வேலை பளு அதிகரிக்கலாம். சொந்தங்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

விருச்சிகம்:

தேவை இல்லாத மன கசப்புகளை தவிர்க்க யாரிடமும் அளவிற்க்கு மீறி பேச வேண்டாம். வீட்டிற்கு சொந்தங்களுடைய வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சனைகள் விலகும்.

2026 ரிஷப ராசிக்கு அக்டோபர் மாதம் காத்திருக்கும் அந்த நற்செய்தி என்ன?

2026 ரிஷப ராசிக்கு அக்டோபர் மாதம் காத்திருக்கும் அந்த நற்செய்தி என்ன?

தனுசு:

குடும்பத்தினர் உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு தேவையான விஷயங்கள் மற்றும் உரிமையான விஷயத்திற்காக நீங்கள் போராடக்கூடிய நாள்.

மகரம்:

நீங்கள் மனசோர்வுடன் காணப்படலாம். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதால் பிரச்சனை விலகும். வேலை ரீதியாக திடீர் வெளியூர் பயணம் செல்லக்கூடிய நிலை உருவாகும்.

கும்பம்:

அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வெளிநாடு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளில் இருந்த தடை விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

மீனம்:

எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். பணம் பிரச்சனை உண்டாகும். குடும்பத்தினர் உள்ள நபரை புரிந்து கொள்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களுக்காக நீங்கள் முக்கிய நபரை சந்திப்பீர்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US