சனியின் வக்ர பெயர்ச்சி.., அதிர்ஷ்டத்தின் அதிபதியாகப்போகும் 3 ராசியினர்
By Yashini
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள், வக்ரம் அடைவது மட்டுமில்லாமல், அவ்வப்போது வக்ர நிவர்த்தியும் அடையும்.
வரும் ஜூன் 29-ல், சனி பகவான், கும்ப ராசியில் வக்ரப் பெயர்ச்சி ஆகிறார். பின் வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை சஞ்சரிப்பார்.
கும்பராசியில், சனி வக்ரப் பெயர்ச்சி அடைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிஷ்டத்தை அனுபவிக்க போகிறார்கள்.
மேஷம்
- பணிபுரியும் காலத்தில் உண்டான பகைவர்களின் தொல்லை நீங்கும்.
- செய்யும் தொழிலால் நன்மைகளைப் பெறுவீர்கள்.
- கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
- அலுவலக அரசியல் ஓய்ந்து பணியிடத்தில் வேலைக்கு மரியாதை கிடைக்கும்.
- தனியார் மற்றும் எம்.என்.சி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கணிசமாக உயரும்.
- வெகுநாட்களாக நல்ல ஒரு ஒப்பந்தம் கிடைக்காத தொழில் முனைவோர், இக்காலகட்டத்தில் நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவர்.
மிதுனம்
- இந்த காலத்தில் வாராக் கடன்கள் வந்து சேரும்.
- வெகுநாட்களாகப் பார்த்து தட்டிப்போன வரன்கள், இனிமேல் நல்ல செய்தியை சொல்லிவிடுவார்கள். திருமணம் கை கூடும்.
- குழந்தையில்லாத மிதுனராசியினருக்கு கரு நிற்கும்.
- இந்த காலகட்டத்தில் வெகுநாட்களாக இம்மியளவு கூட நகராத பணிகள், படிப்படியாக நடப்பதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
- அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பிரகாசமான வெற்றி கிடைக்கும். உங்கள் மன உறுதி வலுவாக இருக்கும்.
- மேலும் மூத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் நீங்கள் முன்னேற முடியும்.
மகரம்
- இந்த காலகட்டத்தில் நிதி மற்றும் உரையாடலில் சனியின் வக்ரத்தாக்கம் இருக்கும்.
- இதனால், மகர ராசியினருக்கு நிதிச்சுமை நீங்கும். கடன் இருக்காது.
- தொழில் செய்பவர்களுக்கு இனிமையான பேச்சின்மூலம் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும்.
- பணியிடத்தில் வெகுநாட்களாக எந்தவொரு அங்கீகாரமும் இல்லாமல் இருப்பவர்கள், புரோமோசன் நிலைக்குச் செல்வீர்கள்.
- இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், உங்கள் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தவும் விரும்புவீர்கள்.
- இது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |